Home
News

Airtel, Vi கஸ்டமர்களே! வேற எந்த Plan-ஐயும் ரீசார்ஜ் பண்ணிடதீங்க.. அடுத்த சில தினங்களில் புது திட்டங்கள் வருது!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக, இந்திய டெலிகாம் ஆப்ரேட்டர்கள் தங்களுடைய டேட்டா திட்டங்களுடன் அதன் ஸ்ட்ரீமிங் சேவையை இணைக்க, இந்தியாவில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்களான பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா (விஐ) ஆகியவற்றுடன் ஜியோஸ்டார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

அறியாதோர்களுக்கு. ஜியோஸ்டார் ஆனது சந்தா அடிப்படையிலான சேவையாக மாறியதை தொடர்ந்து, ஜியோசினிமாவில் முன்பு கிடைத்த இலவச ஐபிஎல் ஸ்ட்ரீமிங் முடிவுக்கு வந்துள்ளது. ஜியோஸ்டார் அறிமுகத்திற்கு பின்னர், ஜியோ மட்டுமே ஜியோஸ்டார் சந்தாவை உள்ளடக்கிய புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

Airtel, Vi கஸ்டமர்களே.. வேற எந்த Plan-ஐயும் ரீசார்ஜ் பண்ணிடதீங்க!

ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் ஹாட்ஸ்டார் சேவையை வழங்கிய திட்டங்களில் "வேறு வழி இல்லாமல்: ஜியோஸ்டார் சேவையை தொடர்ந்து வழங்கி வருகின்றன. இந்நிலைப்பாட்டில் தான் ஜியோஸ்டார் சந்தாவை உள்ளடக்கிய திட்டங்களை கொண்டுவருமாறு ஏர்டெல், விஐ-யிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆக வரும் நாட்களில், அதாவது ஐபிஎல் 2025 தொடங்குவதற்கு முன்பாகஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியாவிடம் இருந்து ஜியோஸ்டார் சந்தாவை இலவசமாக வழங்கும் [புதிய திட்டங்களின் அறிமுகத்தை நாம் காணலாம். ஒருவேளை நீங்கள் ஜியோஸ்டார் சந்தாவை நேரடியாக ரீசார்ஜ் செய்ய விரும்பினால்.. ஜியோ ஹாட்ஸ்டார் சேவையின் கீழ் மொத்தம் 3 வகையான சந்தா திட்டங்கள் உள்ளன: மொபைல் பிளான், சூப்பர் பிளான் மற்றும் ப்ரீமியம் பிளான்.

இதில் மொபைல் பிளான் தான மிகவும் மலிவான திட்டமாகும். மேலும் இது 2 வகையான சந்தா விருப்பங்களுடன் வருகிறது. ஒன்று - 3 மாத கால சந்தாவுடன் வரும் மொபைல் பிளான். விளம்பர ஆதரவுடன் வரும் இந்த திட்டம், ஒரு நேரத்தில் ஒரே ஒரு மொபைலில் மட்டும், எச்டி ரெசல்யூஷனின் (720பி) கன்டென்ட்களை பார்க்க அனுமதிக்கும். இந்த திட்டத்தின் விலை ரூ.149 ஆகும். அதாவது மாதத்திற்கு ரூ.50 என்கிற செலவின் கீழ் இது கிடைக்கும்.

இரண்டாவது - 1 ஆண்டு கால சந்தாவுடன் வரும் மொபைல் பிளான்: இதுவும் ரூ.149-ஐ போலவே விளம்பர ஆதரவுடன் வரும் இந்த திட்டமாகும். மேலும் ஒரு நேரத்தில் ஒரே ஒரு மொபைலில் மட்டுமே எச்டி ரெசல்யூஷனின் (720பி) கன்டென்ட்களை பார்க்க அனுமதிக்கும். ஆனால் இது 1 ஆண்டு அல்லது 12 மாதங்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது.

1 ஆண்டு வேலிடிட்டி உடன் வரும் இந்த திட்டத்தின் விலை ரூ.499 ஆகும். அதாவது மாதத்திற்கு சுமார் ரூ.42 என்கிற செலவின் கீழ் இது கிடைக்கும். 3 மாத கால சந்தாவுடன் ஒப்பிடும் போது, இந்த திட்டத்திற்கான மாதாந்திர செலவு ரூ.8 குறைவானதாக உள்ளது.

ஒருவேளை உங்களுக்கு மொபைல் சப்போர்ட் மட்டுமே போதாது. மாறான லேப்டாப், ஸ்மார்ட் டிவி அல்லது மல்டிபிள் டிவைஸ்களுக்கான ஆதரவு வேண்டும் என்றால் அல்லது விளம்பரங்கள் இல்லாத ஸ்ட்ரீமிங் எக்ஸ்பீரியன்ஸ் வேண்டும் என்றால் ஜியோஹாட்ஸ்டாரின் சூப்பர் பிளான் அல்லது பிரீமியம் பிளானை தேர்வு செய்யலாம்.

ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள்: இதுவும் விளம்பர ஆதரவுடன் வரும் திட்டம் தான். ஆனால் இது ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களுக்கான லாக்-இன்களை அனுமதிக்கும். மேலும் ஃபுல்எச்டி (1080பி) ரெசல்யூஷனில் கன்டென்ட்களை பார்க்க அனுமதிக்கிறது மற்றும் இது டால்பி அட்மோஸ் ஆதரவுடன் வருகிறது. விலை மூன்று மாதங்களுக்கு - ரூ.299 மற்றும் 12 மாதங்களுக்கு - ரூ.899.

ஜியோஹாட்ஸ்டார் ப்ரீமியம் திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள்: இது விளம்பரங்கள் இல்லாத திட்டமாகும். இது ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களுக்கான லாக்-இன்களை அனுமதிக்கும். மேலும் 4கே ரெசல்யூஷனில் கன்டென்ட்களை பார்க்க அனுமதிக்கும். ஆனால் விளையாட்டு மற்றும் பிற லைவ் நிகழ்வுகலில் சில விளம்பரங்கள் இருக்கும் என்று ஜியோஸ்டார் நிறுவனம் கூறுகிறது. விலை 1 மாதத்திற்கு ரூ.299, 3 மாதங்களுக்கு - ரூ.499 மற்றும் 12 மாதங்களுக்கு - ரூ.1499.

More from GizBot

Best Mobiles in India

English summary
JioStar Asked Airtel Vodafone To Add Free JioStar Subscription With Data Plans Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X