Home
News

Jio SIM-க்கு கும்பிடு.. ரூ.1000 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. ரூ.399 க்கு மேல் ஆக்டிவ் திட்டம் இருக்கா?

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது, ரூ.1000 விலை கொண்ட திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. குழந்தைகள் மற்றும் வயதான குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யப்பட்ட மலிவான விலைக்கு கொடுக்கப்படும் இந்த திட்டத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்கள் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்காது. குழந்தைகள் மற்றும் வயதான குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக லைவ் லோகேஷன், ஜியோ ஃபென்சிங், சேப்டி அலெர்ட் உள்ளிட்ட பாதுகாப்பு சேவைகள் மட்டுமே கொடுக்கப்படும். ஆப்கள் வழியாக இதை தெரிந்து கொள்ளலாம்.

Jio SIM-க்கு கும்பிடு.. ரூ.1000 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி!

ஜியோஷீல்டு ரூ.1000 திட்ட விவரங்கள் (JioShield Rs 1000 Plan Details): இந்த திட்டத்தை பெற ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டும். ரூ.100 மதிப்புள்ள 10 ரீசார்ஜ் வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. இதன் மொத்த மதிப்பு ரூ.1,000 என்பதால், இந்த வவுச்சர்களுடன் ஜியோஷீல்டு சேவைகள் கொடுக்கப்படுகின்றன. மைஜியோ ஆப் வழியாக வவுச்சர்கள் அணுகலாம்.

குறிப்பாக ரூ.399 மற்றும் அதற்கு மேற்பட்ட விலை கொண்ட அன்லிமிடெட் 5ஜி (Unlimited 5G) திட்டங்களில் மட்டுமே இந்த வவுச்சர்களை பயன்படுத்த முடியும். ஜியோஷீல்டு சேவையானது குழந்தைகளின் பாதுகாப்பை கண்காணிப்பதுடன், டிஜிட்டல் பயன்பாட்டையும் நிர்வகிக்க உதவுகிறது. குழந்தை எங்கு இருக்கிறது என்பதை பெற்றோர் தெரிந்துகொள்ள முடியும்.

இதற்காக லோகேஷன் டிராக்கிங் (Location Tracking) கிடைக்கிறது. மேலும், குறிப்பிட்ட இடத்தை விட்டு குழந்தை சென்றாலோ அல்லது வெளியேறினாலோ பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கும் ஜியோ-ஃபென்சிங் (Geo-Fencing) இதில் உள்ளது. அவசர சூழ்நிலைகளில் குழந்தைகள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் உதவி கேட்கும் வகையில் SOS மற்றும் Safety Alert சப்போர்ட் உள்ளது.

குழந்தையின் ஸ்மார்ட்போன் பேட்டரி குறைந்துவிட்டால் பெற்றோருக்கு பேட்டரி லெவல் அலெர்ட் (Battery Level Alert) கிடைக்கும். இதன் மூலம் குழந்தையின் போன் திடீரென ஸ்விட்ச் ஆப் ஆகாதபடி பார்த்து கொள்ள முடியும். மேலும், குழந்தைகள் ஸ்மார்ட்போனை எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்பதையும் பெற்றோர் கட்டுப்படுத்த முடியும்.

இதற்காக ஸ்கிரீன் டைம் (Screen Time) சப்போர்ட் உள்ளது. குறிப்பிட்ட நேரம் முடிந்ததும் ஸ்கிரீன் டைமை தானாக கட்டுப்படுத்த முடியும். மேலும், குழந்தையின் ஸ்மார்ட்போனில் எந்தெந்த ஆப்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் பெற்றோர் தேர்வு செய்ய முடியும். குழந்தையை தொடர்புகொள்ளக்கூடிய நபர்களை கட்டுப்படுத்த Contact Whitelisting வழங்கப்பட்டுள்ளது.

ஜியோஷீல்டு இரண்டு ஆப்களின் ஒருங்கிணைப்பில் செயல்படுகிறது. பெற்றோரின் ஸ்மார்ட்போனில் ஜியோதிங்ஸ் (JioThings) ஆப் இருக்க வேண்டும். குழந்தையின் போனில் ஜியோஷீல்டு ஆப் இருக்க வேண்டும். அதேபோல 2 ஸ்மார்ட்போன்களிலும் ஆக்டிவில் இருக்கும் ஜியோ சிம் கார்டு இருக்க வேண்டும். இதுபோக 12 மாதங்களுக்கு Canva Pro சந்தாவும் வழங்கப்படுகிறது.

இதன் மதிப்பு ரூ.4,000 ஆக இருக்கிறது. மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொண்ட ஆக்டிவ் திட்டத்தை வைத்திருந்தால், 28 நாட்களுக்கு அன்லிமிடெட் 5ஜி அப்கிரேட் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஜியோஷீல்டு திட்டமானது, 10ஆவது ஆண்டு விழா சிறப்பு திட்டமாக கிடைக்கிறது. ஆகவே, இதற்கு காலக்கெடு மற்றும் தனிப்பட்ட விதிமுறைகள் இருக்கும்.

Best Mobiles in India

English summary
JioShield Rs 1000 Plan With 365 Days Validity Canva Pro Worth Rs 4000 Check Jio Anniversary Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X