1 மாத மொபைல் ரீசார்ஜ் விலையில் 1 ஆண்டு வேலிடிட்டி.. புதிய JioSaavn Pro பிளான் அறிமுகம்.. இனி நோ விளம்பரம்!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது அதன் ஜியோசாவ்ன் ம்யூசிக் ஆப் (JioSaavn Music App) சேவையின் கீழ் கிடைக்கும் ஜியோசாவ்ன் ப்ரோ சந்தாவின் (JioSaavn Pro subscription) மீது புதிய 1 ஆண்டுக்கான லிமிடட் டைம் பிளானை (New limited-time annual plan) அறிவித்துள்ளது.
இது வழக்கமான மாதாந்திர கட்டணங்களுக்கு பதிலாக, குறைந்த வருடாந்திர செலவின் கீழ் விளம்பரமில்லா ம்யூசிக் ஸ்ட்ரீமிங் (Ad-free music streaming), ஹை-குவாலிட்டி பிளேபேக் (High-quality playback) மற்றும் ஆஃப்லைன் பதிவிறக்கங்கள் (Offline downloads) போன்ற அம்சங்களை அனுபவிக்க உதவுகிறது.

இருப்பினும் இந்த புதிய ஜியோசாவ்ன் வருடாந்திர ப்ரோ திட்டம் ஆனது 12 மாதங்களுக்கும் மேலாக சந்தா செலுத்தாத பயனர்களுக்கு மட்டுமே அணுயுக கிடைக்கும். இதுகுறித்த ஒரு செய்திக்குறிப்பில், ஜியோசாவ்ன் தனது வருடாந்திர ப்ரோ திட்டத்தின் விலை - ஒரு வருடத்திற்கு ரூ.399 என்று தெரிவித்துள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி இது ஒரு வரையறுக்கப்பட்ட கால சலுகை ஆகும். ஆனால் இந்த பிளான் இன்னும் எத்தனை நாட்களுக்கு கிடைக்கும் என்கிற "முடிவு தேதி" (End Date) எதுவும் அறிவிக்கவில்லை. இந்த புதிய சந்தாவானது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், ஜியோபோன் மற்றும் இண்டர்நெட் போன்ற டிவைஸ்கள் மற்றும் தளங்களில் செல்லுபடியாகும்.
பொதுவாக ஜியோசாவ்ன் ப்ரோ திட்டங்கள் தனிப்பட்ட பயனர்களுக்கு (individual users) மாதத்திற்கு ரூ.89 என்கிற செலவின் கீழ் அணுக கிடைக்கிறது. மாணவர் திட்டம் (Student Plan) மாதத்திற்கு ரூ.49 க்கு கிடைக்கிறது. டியோ (Duo Plan) மற்றும் பேமிலி திட்டங்களின் (Family Plan) விலைகள் முறையே ரூ.129 மற்றும் ரூ.149 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன
டியோ திட்டமானது இரண்டு பயனர்கள் தங்கள் அக்கவுண்ட்களை ஒரே சந்தாவில் இணைக்க அனுமதிக்கிறது. பேமிலி திட்டமானது - ஒரு ப்ரைமரி யூஸர் 5 குடும்ப உறுப்பினர்களை அழைக்க அனுமதிக்கிறது. ஒவ்வொன்றும் அவரவர் சொந்த தனிப்பயனாக்கப்பட்ட ப்ரோ அக்கவுண்டின் கீழ் செயல்படும். கடைசியாக வெறும் ரூ.5 க்கு கிடைக்கும் தினசரி சேவையும் (day-to-day service) உள்ளது.
ஜியோசாவ்ன் புதிய வருடாந்திர ப்ரோ திட்டமான ரூ.399-ன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் (JioSaavn Annual Pro Rs.99 Plan Benefits)? இந்த புதிய வருடாந்திர ப்ரோ திட்டம் ஆனது மற்ற திட்டங்களை போன்ற நன்மைகளையே கொண்டுள்ளது. இது பயனர்கள் விளம்பரங்கள் இல்லாமல் தடையற்ற ம்யூசிக் ஸ்ட்ரீமிங்கை அனுபவிக்க அனுமதிக்கிறது. மேலும் பயனர்கள் ஜியோசாவ்ன் ஆப்பில் பாடல்களை பதிவிறக்கம் செய்து இண்டர்நெட் தேவையில்லாமல் ஆஃப்லைனிலும் கேட்கலாம்.
இந்த ஜியோசாவ்ன் சந்தாவானது 320 கேபிபிஎஸ்-ல் உயர் தரத்தில் ம்யூசிக் ஸ்ட்ரீமிங் செய்ய அனுமதிக்கிறது. அறியாதோர்க்கு இது - தற்போது உள்ள எம்பி3 பைல்களுக்கான மிக உயர்ந்த பிட்ரேட் (Highest bitrate for MP3 files) ஆகும். இதன் கீழ் ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் ஒரு கூடுதல் நன்மையையும் பெறுவார்கள். கூடுதல் கட்டணம் இல்லாமல் தங்கள் ஜியோ எண்ணுக்கு வரம்பற்ற ஜியோடியூன்களை செட் செய்யலாம்
முன்னரே குறிப்பிட்டபடி ஜியோசாவ்ன் ஆனது ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS_ டிவைஸ்களுக்கான ஆப் ஆக முறையே கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் வழியாக இலவசமாக டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. மேலும் இது ஐபேட் (iPad) மற்றும் டெஸ்க்டாப்பிலும் (Desktop) கூட அணுக கிடைக்கிறது. ஆன்லைன் வழியாக கூட ஜியோசாவ்ன் தளத்தில் ம்யூசிக் ஸ்ட்ரீமிங் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








