Jio க்கு கும்பிடு.. மாதம் ரூ.62 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 55 மில்லியன் சாங்ஸ்.. 1 வருட ஜியோசாவன் ப்ரோ!
ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு ஜியோசாவன் ப்ரோ திட்டங்களில் 2 விருப்பங்கள் மட்டுமே கிடைக்கின்றன. 30 நாட்கள் மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டியில் கொடுக்கப்பட்டு உள்ளன. இதில் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமானது அதிக சலுகைகளை கொடுக்கிறது. மாதத்துக்கு வெறும் ரூ.62 செலவில் கிடைக்கிறது. இந்த ஜியோசாவன் ப்ரோ திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.
ஜியோசாவன் ப்ரோ திட்டங்களில் ஆட்-ப்ரீ (Ad-free) பாடல்கள் கிடைக்கின்றன. மேலும், ஜியோடியூன்ஸ், அன்லிமிடெட் டவுன்லோட், ஆப்லைன் லிட்சன், அலெக்சா உள்ளிட்ட அணுகல்கள் கிடைக்கின்றன. இந்த திட்டத்தை மாதத்துக்கு ரீசார்ஜ் செய்ய விரும்பினால், ரூ.99 விலை கொண்ட திட்டத்துக்கு செல்லலாம். இதில் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

55+ மில்லியன் பாடல்களின் அணுகல் கிடைக்கும். ஹை-குவாலிட்டி மற்றும் ஒரிஜினல் ஆடியோவை கேட்கலாம். விளம்பரங்கள் இல்லாமல், கேட்கலாம். ஜியோடியூன்ஸ் (JioTunes) கொடுக்கப்படும். அன்லிமிடெட் டவுன்லோட் (Unlimited Downloads) கிடைக்கும். லிட்சன் ஆப்லைன் (Listen Offline) கிடைக்கும். எக்ஸ்க்ளூசிவ் & ஒரிஜினல் கன்டென்ட் (Exclusive & Original Content) கிடைக்கும்.
சோனாஸ் (Sonos), அலெக்சா (Alexa) உள்ளிட்ட அணுகல்களையும் பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தின் விலை ரூ.99ஆக இருக்கிறது. ஆனால், இதே சலுகைகளை மாதத்துக்கு வெறும் ரூ.62 விலையில் பெற்று கொள்ள முடியும். அதாவது, இதே ஜியோசாவன் திட்டங்களில் ரூ.749 விலை கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 365 நாட்களுக்கு அணுகல் கிடைக்கும்.
ஆகவே, 12 மாதங்களுக்கு ஜியோசாவன் ப்ரோ சந்தா கிடைக்கிறது. இதற்கு மாதத்துக்கு செலவாகும் தொகையை கணக்கிட்டால், வெறும் ரூ.62 மட்டுமே தேவைப்படுகிறது. ஆகவே, வருடத்துக்கு ரீசார்ஜ் செய்யும்போது, மாதத்துக்கு ஏற்படும் செலவு குறைகிறது. இதிலும், ப்ரீமியம் சலுகைகள் ஒட்டுமொத்தமாக கிடைக்கும். ஆகவே, ஆப்லைன் லிட்சன் கிடைக்கும்.
அன்லிமிடெட் டவுன்லோட், ஒரிஜினல் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் கன்டென்ட்களை பெற்று கொள்ளலாம். இந்த ஜியோசாவன் திட்டங்களில் வேறு சலுகைகள் கிடைக்காது. வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை பெற்று கொள்ள முடியாது. வெறும் ஜியோசாவன் ப்ரோ சந்தா மட்டுமே போதுமானால், இந்த திட்டத்தை பெற்று கொள்ளலாம்.
இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வது எப்படி?
1. ஜியோ போர்ட்டலுக்கு செல்லுங்கள். ஹோம் பேஜ்ஜில் இருக்கும். மொபைல் விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள். டிஸ்கவர், இதில் ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட், ட்ரூ 5ஜி உள்ளிட்ட விருப்பங்கள் இருக்கும். இதில் ப்ரீபெய்ட் விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
2. இப்போது, வலது புறத்தில் பிளான் கேட்டகரி (Plan Category) விருப்பம் தோன்றும். இதற்கு கீழ், பாப்புலர் பிளான்கள், ட்ரூ 5ஜி அன்லிமிடெட் திட்டங்கள், கேமிங் உள்ளிட்ட பல்வேறு விருப்பங்களை பார்க்க முடியும். இதில் கடைசியாக ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) விருப்பம் தோன்றும். இதை கிளிக் செய்தால், 2 திட்டங்கள் இருக்கும்.
3. ரூ.99 விலை கொண்ட ஜியோசாவன் திட்டம் மற்றும் ரூ.749 விலை கொண்ட ஜியோசாவன் திட்டம் தோன்றும். இதில் உங்களது பட்ஜெட்டில் இருக்கும் திட்டத்தை தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். யுபிஐ, டெபிட் கார்டு, மொபைல் பேங்கிங் உள்ளிட்ட பேமெண்ட்களை செலுத்தி திட்டத்தை பெற்று கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








