Home
News

தினசரி 3ஜிபி டேட்டாவுடன் இவ்வளவு சலுகைகளா? அசத்தும் Jio-வின் 3 ப்ரீபெய்ட் திட்டங்கள்.!

ஜியோ நிறுவனம் அதிக டேட்டா நன்மைகளுடன் கூடுதல் சலுகைகள் வழங்கும் திட்டங்களை வைத்துள்ளது. குறிப்பாக ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால் பட்ஜெட் விலையில் நாம் எதிர்பார்க்கும் டேட்டாவை வழங்குவது ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்கள் மட்டும் தான்.

அதேபோல் இனி வரும் மாதங்களிலும் ஜியோ நிறுவனம் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் சில அசத்தலான பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். இப்போது அந்த திட்டங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

தினசரி 3ஜிபி டேட்டாவுடன் இவ்வளவு சலுகைகளா?அசத்தும் Jio-வின் திட்டங்கள்

ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம். மேலும் கூடுதலாக இந்த திட்டத்தில் 40ஜிபி டேட்டா நன்மை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 292ஜிபி டேட்டா கிடைக்கும்.

இதுதவிர ஜியோ டிவி, ஜியோ சினிமா, மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். எனவே இந்த திட்டத்தில் எக்கசக்கமான டேட்டாவுடன் கூடுதல் சலுகைகளும் இருப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினசரி 3ஜிபி டேட்டாவுடன் இவ்வளவு சலுகைகளா?அசத்தும் Jio-வின் திட்டங்கள்

ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கூடுதலாக 6ஜிபி டேட்டா நன்மை வழங்குகிறது இந்த திட்டம். எனவே ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.

அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் வழங்குகிறது இந்த ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த அட்டகாசமான ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோ ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம் 14 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வழங்குகிறது. மேலும் கூடுதலாக 2ஜிபி டேட்டா நன்மை இதில் கிடைக்கும். எனவே ஜியோ ரூ.219 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 44ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், நன்மைகளும் இதில் உள்ளன. இதுதவிர ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.

தினசரி 3ஜிபி டேட்டாவுடன் இவ்வளவு சலுகைகளா?அசத்தும் Jio-வின் திட்டங்கள்

அதேபோல் ஜியோ நிறுவனம் வரும் தீபாவளி பண்டிகையின் போது ஜியோபோன் 5ஜி மாடலை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் இந்த ஜியோபோன் 5ஜி மாடலின் புகைப்படம் வெளியானது. அதன்படி பிளாஸ்டிக் பேனல் உடன் இந்த ஜியோபோன் 5ஜி அறிமுகமாகும். பின்பு இந்த போனின் பின்புறம் மையத்தில் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio's three prepaid plans offer additional benefits with 3GB data per day at a budget price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X