ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு இப்படியொரு சோதனையா? ரீசார்ஜ் விலை உயர்வு.! முழு விவரம்.!

|

ஜியோ பீச்சர் முதல் ஜியோ ஸ்மார்ட்போன் வரை அனைத்து சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்தது. குறிப்பாக பட்ஜெட் விலையில் ஜியோ போன்கள் வெளிவந்ததால் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்ய கம்மி விலையில் அருமையான திட்டங்களும் முன்பு கிடைத்தது.

ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டணம்

ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டணம்

ஆனால் தற்போது ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி வெளிவந்துள்ளது. அதாவது சமீபத்தில் எகனாமிக் டைம் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல் என்னவென்றால், ஜியோபோன் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை 20 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ. மேலும் இதுசார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

Oppo Reno 8 Pro ஸ்மார்ட்போன் புது ஒன்பிளஸ் போனாக அறிமுகமா? என்னப்பா சொல்றீங்க? குழப்பம் வேண்டாம் விஷயம் இதான்Oppo Reno 8 Pro ஸ்மார்ட்போன் புது ஒன்பிளஸ் போனாக அறிமுகமா? என்னப்பா சொல்றீங்க? குழப்பம் வேண்டாம் விஷயம் இதான்

ஜியோபோன் ரூ.155 திட்டம்

ஜியோபோன் ரூ.155 திட்டம்

அதாவது 28நாட்கள் வேலிடிட்டி தரும் ரூ.155 திட்டத்தின் விலையை ரூ.186-ஆக உயர்த்தியுள்ளது ஜியோ நிறுவனம். அதேபோல் தினசரி 2ஜிபி டேட்டா, 28நாட்கள் வேலிடிட்டி தரும் ரூ.185 திட்டத்தின் விலையை ரூ.222-ஆக உயர்த்தியுள்ளது ஜியோ.

வாட்ஸ்அப் யூசர்கள் பெருமூச்சு! ஐபோனிற்கு வந்து ஒரு வருடம் கழித்து ஆண்ட்ராய்டுக்கு வந்த முக்கிய அம்சம்!வாட்ஸ்அப் யூசர்கள் பெருமூச்சு! ஐபோனிற்கு வந்து ஒரு வருடம் கழித்து ஆண்ட்ராய்டுக்கு வந்த முக்கிய அம்சம்!

ஜியோபோன் ரூ.749 திட்டம்

ஜியோபோன் ரூ.749 திட்டம்

அதேபோல் 336 நாட்கள் வேலிடிட்டி தரும் ரூ.749 திட்டத்தின் விலையை ரூ.899-ஆக உயர்த்தியுள்ளது ஜியோ நிறுவனம். இந்த திட்டங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என்று நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் அந்த செய்தி குறிப்பில் அறிமுக சலுகை காலம் முடிவடைந்ததால், ரிலையன்ஸ் ஜியோவின் மலிவு விலை திட்டங்களின் விலை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12L பயனர்களே உஷார்.! விஷயம் ரொம்ப சீரியஸ்.. உடனே அப்டேட் செய்யணும் கூகிள் எச்சரிக்கை..ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12L பயனர்களே உஷார்.! விஷயம் ரொம்ப சீரியஸ்.. உடனே அப்டேட் செய்யணும் கூகிள் எச்சரிக்கை..

 தீபாவளிக்குள் விலை உயரும்

தீபாவளிக்குள் விலை உயரும்

ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி, வரும் தீபாவளிக்குள் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின்விலையை 10 முதல் 20 விழுக்காடு வரை அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தீபாவளிக்கு முன்பு நீண்ட நாட்கள் வேலிடிட்டி தரும் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. மேலும் ஜியோ நிறுவனத்தின் சில அசத்தலான திட்டங்களை இப்போது பார்ப்போம்.

போட், எம்ஐ, சோனி இயர்போன்கள் வாங்க சரியான நேரம்: 66% வரை தள்ளுபடி வழங்கும் அமேசான்- உடனே முந்துங்கள்!போட், எம்ஐ, சோனி இயர்போன்கள் வாங்க சரியான நேரம்: 66% வரை தள்ளுபடி வழங்கும் அமேசான்- உடனே முந்துங்கள்!

ஜியோ ரூ.533 திட்டம்

ஜியோ ரூ.533 திட்டம்

ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 112ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில்உள்ளன. பின்பு jioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற ஆப் பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது இந்த ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம்.

உங்கள் விண்டோஸ் பிசி-யில் உங்கள் விண்டோஸ் பிசி-யில் "மறைந்து இருக்கும்" வைஃபை பாஸ்வேர்ட்-ஐ கண்டுபிடிப்பது எப்படி?

ஜியோ ரூ.719 திட்டம்

ஜியோ ரூ.719 திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவேஇந்த திட்டத்தில் மொத்தமாக 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப்
பயன்பாடுகளுக்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம்.

செம சர்ப்ரைஸ்: தயாரிப்பே நம் தமிழகத்தில் தான்- உலகளவில் எதிர்பார்க்கப்படும் Nothing Phone(1): இவ்வளவு நன்மையா?செம சர்ப்ரைஸ்: தயாரிப்பே நம் தமிழகத்தில் தான்- உலகளவில் எதிர்பார்க்கப்படும் Nothing Phone(1): இவ்வளவு நன்மையா?

ஜியோ ரூ.799 திட்டம்

ஜியோ ரூ.799 திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் வருடாந்திர சந்தாவுடன் வருகிறது. எனவே திட்டத்தை நம்பி தேர்வு செய்யலாம். பின்பு இந்த ரூ.799 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா,வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் jioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற ஆப் பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது ஜியோ ரூ.799 திட்டம்.

குழப்பம் வேண்டாம் நாங்க இருக்கோம்: குழப்பம் வேண்டாம் நாங்க இருக்கோம்: "டாப் அம்சம்"., தொழில் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கான சிறந்த லேப்டாப்கள்!

5ஜி சேவை?

5ஜி சேவை?

அதேபோல் விரைவில் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஆனாலும் இந்நிறுவனம் தீபாவளிக்குள் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தும் என்பதுதான் சோர்வடையச் செய்கிறது.

Best Mobiles in India

English summary
JioPhone tariffs increase by 20 percent: what is the reason?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X