2026 க்கு Jio போட்ட போடு.. ரூ.75 க்கு ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2.5 ஜிபி டேட்டா.. 50 எம்எம்எஸ்!
ஜியோ நிறுவனத்தின் ஜியோபோன் கஸ்டமர்களுக்கு ரூ.75 விலைக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. ரூ.74 மாத செலவு செய்ய ரெடியாக இருந்தால் 336 நாட்கள் வேலிடிட்டியும் கிடைக்கும். சொல்லப்போனால், ஜியோவில் மலிவான விலைக்கு கிடைக்கும் திட்டங்களாக இவை இருக்கின்றன. மாதாந்திர மற்றும் வருடாந்திர ஜியோபோன் திட்டங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோபோன் ரூ. 75 திட்ட விவரங்கள் (JioPhone Rs 75 Plan Details): இந்த ஜியோபோன் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 23 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் நாளொன்றுக்கு 100 எம்பி டேட்டா கிடைக்கும். மொத்தமாக 2.3 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக, 100 எம்பி டேட்டா கூடுதலாக கிடைக்கும். ஆகவே, 2.5 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம்.

இந்த 100 எம்பி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். இந்த டேட்டா சலுகை போக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படும். 50 எம்எம்எஸ்கள் மொத்தமாக கொடுக்கப்படும். இந்த சலுகைகளை மட்டுமே இந்த ஜியோபோன் திட்டம் கொடுத்துள்ளது.
வெறும் ரூ.75 இருந்தால் போதும், 23 நாட்களுக்கு சிம் ஆக்டிவ் மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. இந்த டேட்டா 4ஜி வேகத்தில் கிடைக்கும். கூடுதலாக டேட்டா வவுச்சர்களையும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த விலையை போல ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவில் திட்டங்கள் கிடையாது. பிஎஸ்என்எல்லில் மட்டும் இருக்கிறது.
இதே ஜியோபோன் கஸ்டமர்களுக்கு ரூ. 895 விலைக்கு வருடாந்திர திட்டம் கிடைக்கிறது. இதில் 28 நாட்கள் கணக்கில் 12 மாதங்களுக்கும் வேலிடிட்டி கிடைக்கும். இதை மாதத்துக்கு வகுத்தால் வெறும் ரூ.74 மட்டுமே செலவாக இருக்கும். ஆகவே, மலிவான வருடாந்திர திட்டமாகவும் இது இருக்கிறது. இதில் கிடைக்கும் சலுகைகளை போலவும் மற்ற தனியார் நிறுவனங்களில் கிடையாது.
ஜியோபோன் ரூ. 895 திட்ட விவரங்கள் (JioPhone Rs 895 Plan Details): முந்தைய திட்டத்தில் 23 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தது. இதற்கு 28 நாட்கள் கணக்கில் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, 336 நாட்கள் வேலிடிட்டியில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். இதில் டேட்டாவை பார்க்கையில் 28 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படும்.
இந்த 2 ஜிபிக்கு பிறகும் வழக்கமாக கிடைக்கும் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். அதேபோல 28 நாட்களுக்கு 50 எம்எஸ்கள் கிடைக்கும். மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். இந்த மூன்று சலுகைகளும் 12 மாதங்கள் முழுவதும் 28 நாட்களுக்கு பிரித்து வழங்கப்படும். ஜியோபோன் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் கிடைக்கிறது.
ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஜியோ கஸ்டமர்களுக்கும் சிம் ஆக்டிவ் மட்டுமே கொடுக்கும், திட்டம் இருக்கிறது. இதில் டேட்டா கிடைக்காது. வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமே கொடுக்கப்படும். இது வேல்யூ திட்டத்தின் கீழ் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் விலை ரூ.1748ஆக இருக்கிறது. 336 நாட்கள் வேலிடிட்டியை கொடுத்துள்ளது.
மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். 3600 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும். ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் சலுகைகளையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. ஜியோ போர்ட்டலில் ப்ரீபெய்ட் திட்டங்களின் கீழ் வேல்யூ விருப்பம் தோன்றும். இதில் ரூ.1748 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








