அரளுது மார்க்கெட்.. யாரும் தரமுடியாத மலிவு விலை.. புது JioPhone Prima 2 4G இப்போது விற்பனையில்.. என்ன விலை?
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் இன்று அதன் புதிய ஜியோபோன் ப்ரிமா 2 (JioPhone Prima 2) என்ற பியூச்சர் போன் சாதனத்தை சத்தமில்லாமல் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்தியாவில் மிகவும் மலிவு விலை 4ஜி மொபைல் சாதனமாக இந்த புதிய ஜியோபோன் ப்ரிமா 2 சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மலிவு விலை ஜியோபோன் ப்ரிமா 2 4ஜி (JioPhone Prima 2 4G) போனின் விலை என்ன? இதன் அம்சங்கள் என்ன? இதை எங்கிருந்து விருப்பமானவர்கள் வாங்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
ஜியோ நிறுவனம் இந்தியாவில் உள்ள 2ஜி (2G) மற்றும் 3ஜி (3G) நெட்வொர்க் இணைப்பில் இயங்கும் மக்களை 4ஜி நெட்வொர்க் (4G network) இணைப்பிற்கு மாற்ற அனுமதிக்கும் ஒரு மலிவான மொபைல் சாதனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டது. இதன் விளைவாக உருவாக்கப்பட்ட பியூச்சர் போன் (Feature Phone) மாடல் தான் ஜியோபோன் ப்ரிமா (JioPhone Prima) மாடலாகும்.

யாரும் தரமுடியாத மலிவு விலையில் புது JioPhone Prima 2 4G விற்பனை:
தெரியாதவர்களுக்கு, முதல் ஜியோபோன் ப்ரிமா டிவைஸ் கடந்த 2023 ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக, அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இப்போது புதிதாக JioPhone Prima 2 மொபைல் சாதனத்தை இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்தது. கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போனின் விற்பனை இப்போது சத்தமில்லாமல் இந்தியாவில் துவங்கியுள்ளது.
மலிவு விலையில் 4ஜி நெட்வொர்க் இணைப்புடன் இணைய விரும்பும் மக்களுக்கு ஜியோபோன் ப்ரிமா 2 (JioPhone Prima 2) ஒரு வரப்பிரசாதம். காரணம், இது சந்தையில் உள்ள மற்ற சாதாரணமான பியூச்சர் போன்கள் போல இல்லாமல், இந்த போன் ஏறக்குறைய ஒரு ஸ்மார்ட்போன் போலவே செயல்படுகிறது. ஏனெனில், இது பேஸ்புக் (Facebook), யூடியூப் (YouTube), கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), ஜியோபே (JioPay) போன்ற டிஜிட்டல் தளங்களை அணுக வாய்ப்பளிக்கிறது.
இந்தியாவில் தற்போது டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலத்திற்கு ஏற்றவாறு, பயனர்களை UPI பேமெண்ட் செய்ய அனுமதிக்கும் பிரத்தியேகமான ஜியோபே (JioPay) சேவையை இந்த மொபைல் ஆதரிக்கிறது என்பது கூடுதல் சிறப்பு. இந்த புதிய ஜியோபோன் ப்ரிமா 2 (JioPhone Prima 2) சாதனத்தின் சிறப்பம்ச விபரங்கள் மற்றும் விலை விபரத்தை இப்போது பார்க்கலாம்.
ஜியோபோன் ப்ரிமா 2 விலை (JioPhone Prima 2 Price):
ஜியோபோன் ப்ரிமா 2 (JioPhone Prima 2 Price) சாதனம் இந்தியாவில் தற்போது 33% தள்ளுபடியுடன் ரூ. 2,799 என்ற மிக - மிக மலிவு விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 4,199 (JioPhone Prima 2 MRP Price) என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுக விற்பனையின் ஒரு பகுதியாக இப்போது இந்த போனை உங்களால் வெறும் ரூ. 2,799 என்ற சலுகை விலையில் வாங்க முடியும்.
இதன் விற்பனை இப்போது அமேசான் (Amazon) தளம் மற்றும் ஜியோ மார்ட் (JioMart) தளம் வழியாக நடைபெறுகிறது. இந்த போனின் சிறப்பம்சங்கள் பற்றி பேசுகையில், இது 2.4" இன்ச் அளவு கொண்ட வளைந்த டிஸ்பிளேவை (display) கொண்டுள்ளது. இதில் டச் அம்சங்கள் கிடையாது. இந்த போன் முழுமையாக அதன் கீபேட் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இது 512MB ரேம் (RAM) உடன் 4GB ஸ்டோரேஜ் (Storage) ஆதரவுடன் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டு (microSD card) விருப்பமும் இருக்கிறது. இதன் மூலம் இந்த போனின் ஸ்டோரேஜ்ஜை நீங்கள் 128GB வரை அதிகரித்துக்கொள்ள முடியும். புதிய ஜியோபோன் ப்ரிமா 2 டிவைஸ் குவால்காம் இன் பிராசஸர் உடன் இயங்குகிறது. ஆனால், இது என்ன SoC என்பதை ஜியோ வெளியிடவில்லை. இந்த போனில் ரியர் கேமரா மற்றும் செல்பி கேமராவும் உள்ளது. இது 0.3MP திறனில் இயங்கக்கூடியது.
இந்த போனின் கேமராவில் பெரியளவு கிளாரிட்டியை நாம் எதிர்பார்க்கமுடியாது. இந்த போன் 2000mAh பேட்டரி உடன் வருகிறது. இது ஒற்றை சிம் கார்டு விருப்பத்தை கொண்டுள்ளது. இந்த சாதனம் 23 மொழிகளை ஆதரிக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. இதில் ஹிந்தி, மலையாளம், தெலுகு மற்றும் தமிழும் அடங்கும். இது KaiOS 2.5.3 வெர்ஷனில் இயங்குகிறது. FM ரேடியோ, LED டார்ச், போன்ற மற்ற அம்சங்களையும் இது கொண்டுள்ளது.
இது YouTube, Facebook, Google Voice Assist, JioTV, JioCinema, Jio Chat, JioSaavn, JioPay UPI, JioChat போன்றவற்றை ஆதரிக்கிறது. இது 1 வருட உத்தரவாதத்துடன், 6 மாத இன்பாக்ஸ் சாதனங்களின் வாரன்டியையும் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications