JioPhone பயனர்களுக்கு அடித்த லக்.. குறைந்த விலையில் 336 நாள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. மிஸ் பண்ணாதீங்க..
ஜியோபோன் பயனர்களுக்கு மலிவு விலையில் அதிக பல்களை வழங்கும் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். அதேபோல் இந்நிறுவனம் அவ்வப்போது ஜியோபோன் பயனர்களுக்கு அருமையான சலுகைகள் மற்றும் புதிய திட்டங்களைக் கொண்டுவருகிறது இந்நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோபோன் (jiophone) பயனர்களுக்கு கிடைக்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்க்கலாம்.
ஜியோ ரூ.895 ப்ரீபெய்ட் திட்டம் (Jio RS 895 Plan) ஆனது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Call) சலுகை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 336 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தின் டேட்டா சலுகையைப் பொறுத்தவரை, 28 நாட்களுக்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே மொத்தமாக 336 நாட்களுக்கு 24ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். அதேபோல் 28 நாட்களுக்கு 50எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

மேலும் ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோகிளவுட் (Jio Cloud) ஆப்கள் சந்தாவை வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக வாய்ஸ் கால்கள் நன்மையை மட்டும் எதிர்பார்க்கும் ஜியோபோன் பயனர்கள் இந்த ரூ.895 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.
ஜியோ ரூ.223 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio RS 223 Plan) ஜியோபோன் பயனர்கள் ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தமாக 56ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Call) சலுகை வழங்குகிறது. இந்த திட்டம்.
மேலும் ஜியோ ரூ.223 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோகிளவுட் (Jio Cloud) ஆப்கள் சந்தாவை வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த ஜியோ திட்டம் ஜியோபோன் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
ஜியோ ரூ.186 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio RS 186 Plan) ஜியோபோன் பயனர்கள் ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும். ஆனால் இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே இந்த திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தமாக 28ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Call) சலுகை வழங்குகிறது. இந்த திட்டம்.

மேலும் ஜியோ ரூ.186 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோகிளவுட் (Jio Cloud) ஆப்கள் திட்டம் ஜியோபோன் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
அதேபோல் ஜியோபோன் பயனர்களுக்குச் சமீபத்தில் ரூ.121 டேட்டா பேக் (Jio RS 121 Plan) அறிமுகம் செய்தது இந்நிறுவனம். அதன்படி இந்த ரூ.121 திட்டத்தை தேர்வு செய்தால் தினமும் 1ஜிபி டேட்டா கிடைக்கும் பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே மொத்தமாக 28ஜிபி டேட்டா வழங்குகிறது ஜியோவின் ரூ.121 திட்டம். மேலும் ஜியோவின் ரூ.182 டேட்டா பேக் ஆனது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இதில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. எனவே ஜியோ ரூ.182 திட்டத்தில் மொத்தமாக 56ஜிபி டேட்டா கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








