டூயல் சிம் ஸ்லாட், 4ஜி சப்போர்ட் சிம் வசதி கொண்ட ஜியோ போன்

By: Meganathan S

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 4ஜி வோல்ட்இ வசதி கொண்ட பீச்சர் போன் ஜியோபோன் என அழைக்கப்படுகிறது. சமீபத்தில் அறிமுகமான ஜியோபோன் சார்ந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

டூயல் சிம் ஸ்லாட், 4ஜி சப்போர்ட் சிம் வசதி கொண்ட ஜியோ போன்

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி 4ஜி வசதி கொண்ட ஜியோபோனினை அறிமுகம் செய்தார்.

அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக புதிய ஜியோபோன் அனைவருக்கும் இலவசமாக வழங்குவதாகவும், இதனை வாங்குவோர் திரும்ப செலுத்தக் கூடிய வகையில் ரூ.1500 செலுத்த வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்த தொகை திரும்ப வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் : இன்பினிக்ஸ் ஸீரோ 4, ஸீரோ 4 ப்ளஸ் மற்றும் நோட் 4 (அம்சங்கள்).!

ஜியோபோன் வாங்க விரும்புவோர் அதிகம் எழுப்பும் கேள்வியாக இது இருக்கிறது. தற்சமயம் ஜியோபோனில் ஒற்றை சிம் ஸ்லாட் மட்டுமே வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே ஜியோபோன் வைத்திருப்போர் அந்த சிம் கார்டையே புதிய ஜியோபோனிலும் பயன்படுத்தலாம், எனினும் புதிய போனில் பயன்படுத்த ரூ.153 திட்டத்திற்கு மாற வேண்டும்.

பின் இந்த சிம் கார்டினை மற்ற 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்த முடியும். எனினும் மீண்டும் பழைய திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

ஜியோபோனில் மற்ற நெட்வொர்க் சிம் கார்டுகள் வேலை செய்யாது என ஜியோ வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் ஏர்டெல், ஐடியா, பி.எஸ்.என்.எல் போன்ற நிறுவனங்களின் சிம் கார்டுகளை ஜியோபோனில் பயன்படுத்த முடியாது. எனினும் இதற்கு மாறாக ஜியோபோனில் மற்றொரு சிம் ஸ்லாட் வழங்கப்பட்டு இதில் 2ஜி கனெக்டிவிட்டி மற்றும் மற்ற நிறுவன சிம் கார்டுகளை பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோபோன் பிரீ-புக்கிங் ஆகஸ்டு 24-ம் தேதியும், ஆகஸ்டு 15-ம் தேதி முதல் பீட்டா டெஸ்டிங் செய்யப்படுகிறது. இதன் விற்பனை செப்டம்பர் மாதம் முதல் துவங்கும், விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ஜியோ இணையதளம் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

ஜியோபோனில் வாய்ஸ் கமான்ட் வசதி மற்றும் 22 இந்திய மொழிகளை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜியோபோனில் ஜியோ டிவி கேபிள் வாடிக்கையாளர்களை தங்களது டிவியுடன் இணைக்க முடியும்.

இதை கொண்டு ஸ்கிரீன் மிரரிங் அம்சம் பயன்படுத்தலாம். இதற்கான மென்பொருள் அப்டேட் போன் வெளியானதும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.English summary
JioPhone will be launched as a single SIM feature phone only. It is said to work with 4G VoLTE networks only.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot