இன்று இல்லை., தீபாவளிக்குள்ள பார்ப்போம்: 4G ஜியோ போன் குறித்து வெளியான முக்கிய தகவல்- விலை இதுவா?
ஜியோ போன் விலை மற்றும் விநியோக விவரங்களை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. இதன் வெளியீடு தீபாவளிக்கு முன்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ போன் நெக்ஸ்ட் வெளியீடுக்கு பலர் காத்திருக்கின்றனர். காரணம் இதுவரை இல்லாத மலிவு விலை சாதனமாக இருக்கும். ஜியோ போன் நெக்ஸ்ட் இன்று அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து வெளியான தகவல்களை பார்க்கலாம்.

ஜியோ போன் நெக்ஸ்ட்
ஜியோ போன் நெக்ஸ்ட் ரோல் அவுட் ஆனது தீபாவளிக்கு முன்பு தொடங்கும் என ரிலையன்ஸ் ஜியோ வியாழக்கிழமை இரவு அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நேற்று (வியாழக்கிழமை) இரவு இதுகுறித்து தகவலை வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸின் புதிய மலிவு விலை ஜியோ போன் விநாயகர் சதுர்த்தியான செப்டம்பர் 10 ஆம் தேதி இன்று தொடங்கப்படும் என ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஸ்மார்ட்போன் மேம்பட்ட சோதனைகளில் இருப்பதாகவும் தீபாவளிக்கு முன்பாக வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 4 ஆம் தேதிக்கு முன்னதாக வெளியாகும் என கூறப்படுகிறது.

உலகளாவிய பற்றாக்குறையை தணிக்க உதவும்
அதேபோல் ஜியோ தனது அறிவிப்பில் "இந்த கூடுதல் நேரம் தற்போதைய தொழில்துறை அளவிலான, உலகளாவிய பற்றாக்குறையை தணிக்க உதவும் என குறிப்பிட்டுள்ளது. ஜியோபோன் நெக்ஸ்ட் என்பது 2ஜி அம்ச தொலைபேசிகளை பயன்படுத்தும் மக்களை அதிவேக இணையத்துடனான சாதனத்தை பயன்படுத்த வைப்பதே ஆகும்.

அதிக சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போன்கள்
ஜியோ நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பில் " இந்த சாதனம் மற்றும் அதன் ஆபரேட்டிங் சிஸ்டம் தற்போதுவரை அதிக சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போன்களுடன் தொடர்புடைய ப்ரீமியம் திறன்களை வழங்கும். வாஸ்ட்-ஃபர்ஸ்ட் அம்சங்கள் உட்பட மக்கள் தங்களது மொழியில் தொலைபேசியை பயன்படுத்தலாம். அதேபோல் இந்த சாதனம் சிறந்த கேமரா அனுபவம், சமீபத்திய ஆண்ட்ராய்டு அம்சம் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளை பெறவும் உதவுகிறது என குறிப்பிட்டுள்ளது.

தீபாவளிக்குள் வெளியிடப்படும்
இந்த சாதனம் வரையறுக்கப்பட்ட பயனர்கள் மூலம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் அது நிவர்த்தி செய்யப்பட்டு அனைவருக்கும் முழுமையான சாதனமாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் தீபாவளிக்கு பரவலாக வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

ஜியோ மற்றும் கூகுள் இணைந்து தயாரிக்கும் ஸ்மார்ட்போன்
ஜியோ மற்றும் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். எகனாமிக் டைம்ஸ் தகவலின்படி, ஜியோ போன் நெக்ஸ்ட் அடிப்படை மற்றும் மேம்பட்ட இரண்டு வகைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த பதிப்புகளின் விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை விலை ரூ.5000 ஆக இருக்கும் எனவும் மேம்பட்ட மாடல் விலை ரூ.7000 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த சாதனம் வாங்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் 10% தொகையை மட்டுமே முன்னதாக செலுத்தி வாங்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

4ஜி ஸ்மார்ட்போன் விற்பனை
முன்னதாக தொகை செலுத்தி சாதனம் வாங்கப்படும் பட்சத்தில் மீதமுள்ள தொகை கடனாக கருத்தில் கொள்ளப்படும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பிரமல் கேபிடல், ஐடிஎஃப்சி ஃபர்ஸட் அஷ்யூர் மற்றும் டிஎம்ஐ ஃபைனான்ஸ் ஆகிய ஐந்து வங்கிகளுடன் இணைந்து ஜியோ தனது 4ஜி ஸ்மார்ட்போனின் விற்பனைக்கு நிதியுதவி அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஜியோ போன் நெக்ஸ்ட்
இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் முதல் 6 மாதங்களில் ஜியோ போன் நெக்ஸ்ட்டின் 50 மில்லியன் யூனிட்களை விற்க டெலிகாம் திட்டமிட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. ஒவ்வொரு வங்கியும் ரூ.10,000 கோடி வணிகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், பிற நான்கு வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (என்பிஎஃப்சிஎஸ்) ரூ.2,500 கோடி மதிப்பிலான கடன் ஆதரவை வழங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜியோ போன் சிறப்பம்சங்கள்
ஜியோ போன் சிறப்பம்சங்கள் குறித்து வெளியான வதந்திகளை பார்க்கலாம், ஜியோ போன் நெக்ஸ்ட் 1440 x 720 பிக்சல்கள் தீர்மானத்தோடு வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) அடிப்படையில் இயங்கும் எனவும் கூறப்படுகிறது. ரேம் மற்றும் சேமிப்பு விவரங்கள் இன்னும் முழுமையாக தெரிவிக்கப்பட வில்லை.

2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு
இருப்பினும் இதுகுறித்து வெளியான தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என கூறப்படுகிறது. ஜியோ போன் நெக்ஸ்ட் வாய்ஸ் அசிஸ்டெண்ட், மொழி பெயர்ப்பு, ஏஆர் ஃபில்டர் உடன் கூடிய ஸ்மார்ட் கேமரா உள்ளிட்ட பல அம்சங்களோடு வரும் என கூறப்படுகிறது. இந்த சாதனத்தின் வடிவமைப்பு முன்னதாகவே ஜூன் மாதத்தில் அம்பானியில் வெளியிடப்பட்டது. இது ஜியோவுக்காக கூகுள் வடிவமைத்த போன் என்பதால் இதில் ஆண்ட்ராய்டு அப்டேட்களுடன் பாதுகாப்பு இணைப்பை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மலிவு விலை 4ஜி சாதனம்
மேலும் டிப்ஸ்டர் யோகேஷின் ட்வீட் படி, ஜியோபோன் நெக்ஸ்ட் இந்தியாவில் வெறும் ரூ. 3,499 என்ற மலிவான விலையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். ஆனாலும் இதற்குமுன்பு வெளிவந்த தகவலின்படி இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் ரூ.4000-க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications