Home
News

ஜியோபோன் நெக்ஸ்ட்: முன்பதிவு எப்போது தொடங்குகிறது தெரியுமா? இதோ முழு விவரம்.!

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் குறைந்த விலையில் வெளிவரும் என்று தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ஜியோ போன் நெக்ஸ்ட் எப்போது முன்பதிவு செய்யக்
கிடைக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

யோபோன் நெக்ஸ்ட் 4ஜி

91mobiles அறிக்கையின்படி, அடுத்த வாரம் முதல் ஜியோபோன் நெக்ஸ்ட் இந்தியாவில் முன்பதிவு செய்யக் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி சாதனம் ஆனது வரும் செப்டம்பர் 10-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்தின் அம்சங்களைப் பார்ப்போம்.

 XDA டெவலப்பர் Mishaal Rahma

ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போன் மாடல் 5.5-இன்ச் டிஸ்பிளே அல்லது 6-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த 1440x720 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என XDA டெவலப்பர் Mishaal Rahman தகவல் தெரிவித்துள்ளார்.

ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்

இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சாதனத்தின் கேமரா அமைப்புகளுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கூகுள் மற்றும் ஜியோ நிறுவனங்கள்.

க்ஸ்டின் அதிகாரப்பூர்வ

ஜியோபோன் நெக்ஸ்டின் அதிகாரப்பூர்வ படங்களின்படி, ஸ்மார்ட்போனில் எளிதில் திறக்கக்கூடிய பேக் கேஸ் இருக்கும், எனவே இந்த சாதனம் மாற்றக்கூடிய பேட்டரியைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. அதேபோல் 3000 எம்ஏஎச் அல்லது 4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போனில்

ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 215 சிப்செட் வசதி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு கோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

 அட்டகாச

அதேபோல் ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்தின் இரண்டு ஸ்லாட்டுகளிலும் 4 ஜி ஆதரவுடன் இரட்டை சிம் கார்டு ஸ்லாட்டுகளை வழங்க வாய்ப்புள்ளது. குறிப்பாக ஜியோ சிம் கார்டு பயன்படுத்தும் வகையில் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வாய்ஸ் அசிஸ்டண்ட்,மொழி பெயர்ப்பு, ஸ்னாப்சாட், சிறப்பான கேமரா மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது இந்த அட்டகாசமான ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம். மேலும் JioPhone மற்றும் JioPhone 2 ஐப் போலன்றி, JioPhone Next பல வண்ண விருப்பங்களிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டர் யோகேஷின் ட்வீட் ப

மேலும் டிப்ஸ்டர் யோகேஷின் ட்வீட் படி, ஜியோபோன் நெக்ஸ்ட் இந்தியாவில் வெறும் ரூ. 3,499 என்ற மலிவான விலையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். ஆனாலும் இதற்குமுன்பு வெளிவந்த தகவலின்படி இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் ரூ.4000-க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
JioPhone Next When does prebooking start: details here: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X