ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனை ஏன் தள்ளிபோனது? எப்போது விற்பனைக்கு வரும்? இதோ முழு விவரங்கள்.!

|

இந்தியா முழுவதும் அதிகம் எதிர்பார்க்கப்படுவது ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் தான். அதாவது மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை விட குறைவான விலையில் இந்த புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 செப்டம்பர் 10 ஆம் தே

மேலும் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,இதன் விற்பனை தேதி மாற்றப்பட்டுள்ளது. அதாவது தற்போது வெளிவந்த தகவலின்படி தீபாவளிக்கு முன்பாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிப்செட்களின் பற்றாக்குறையால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை வெளியிடுவதை தாமதப்படுத்தியது. பின்பு இந்த சாதனம் தீபாவளிக்கு முன்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோபோன் நெக்ஸ்ட்

குறிப்பாக, ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் ஆனது கூகுள் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இணைந்து உருவாக்குகின்றன. இந்த சாதனம் முழுமையாக ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் பல அருமையான அம்சங்கள் இந்த சாதனத்தில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்க ஸ்மார்ட்போன் இதுவா?- உங்க ஸ்மார்ட்போன் இதுவா?- "கூகுள் மேப்ஸ், ஜிமெயில், யூடியூப்" இனி இந்த ஆண்ட்ராய்டு போன்களில் செயல்படாது!

 ரூ.5000 ஆக இருக்கும் எனவும்

சமீபத்தில் எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட தகவலின்படி, ஜியோபோன் நெக்ஸ்ட் அடிப்படை மற்றும் மேம்பட்ட இரண்டு வகைகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை விலை ரூ.5000 ஆக இருக்கும் எனவும், பின்பு மேம்பட்ட மாடலின் விலை ரூ.7000-ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் ஜியோ நிறுவனம் இந்த சாதனத்தின் உண்மை விலையை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆழ்கடலில் விடப்பட்ட 3 இறந்த முதலையின் உடல்கள்.. மூச்சடைத்து போன விஞ்ஞானிகள்.. என்ன நடந்தது தெரியுமா?ஆழ்கடலில் விடப்பட்ட 3 இறந்த முதலையின் உடல்கள்.. மூச்சடைத்து போன விஞ்ஞானிகள்.. என்ன நடந்தது தெரியுமா?

 முதல் ஆறு மாதங்களில் ஜியோபோன்

மேலும் முதல் ஆறு மாதங்களில் ஜியோபோன் நெக்ஸ்ட்டின் 50 மில்லியன் யூனிட்களை விற்க டெலிகாம் திட்டமிட்டுள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

எலோன் மஸ்கின் டெஸ்லா 'மேக் இன் இந்தியா'வாக மாற மோடி அரசு விரும்புகிறதா.. மஸ்கின் விருப்பம் என்ன?எலோன் மஸ்கின் டெஸ்லா 'மேக் இன் இந்தியா'வாக மாற மோடி அரசு விரும்புகிறதா.. மஸ்கின் விருப்பம் என்ன?

 4ஜி ஸ்மார்ட்போன் மாடல்

ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போன் மாடல் 5.5-இன்ச் டிஸ்பிளே அல்லது 6-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த 1440x720 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என XDA டெவலப்பர் Mishaal Rahman தகவல் தெரிவித்துள்ளார். இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

இதுதான்னு சொல்லல., இப்படியும் இருக்கலாம்: செப்.,14 நடக்கும் ஆப்பிள் நிகழ்வு- ஐபோன் 13 அம்சங்கள் இதுதானா?இதுதான்னு சொல்லல., இப்படியும் இருக்கலாம்: செப்.,14 நடக்கும் ஆப்பிள் நிகழ்வு- ஐபோன் 13 அம்சங்கள் இதுதானா?

13எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக

ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சாதனத்தின் கேமரா அமைப்புகளுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கூகுள் மற்றும் ஜியோ நிறுவனங்கள். அதாவது மேம்பட்ட கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளது என்று கூறப்படுகிறது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இதுதான்னு சொல்லல., இப்படியும் இருக்கலாம்: செப்.,14 நடக்கும் ஆப்பிள் நிகழ்வு- ஐபோன் 13 அம்சங்கள் இதுதானா?இதுதான்னு சொல்லல., இப்படியும் இருக்கலாம்: செப்.,14 நடக்கும் ஆப்பிள் நிகழ்வு- ஐபோன் 13 அம்சங்கள் இதுதானா?

ஸ்னாப்டிராகன் 215 சிப்செட்

ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 215 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதாவது மீடியாடெக் சிப்செட் விட இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும், அதேசமயம் சற்று வேகமாகவும் செயல்பட அனுமதிக்கும் இந்த சிப்செட். மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம்
வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஜியோபோன் நெக்ஸ்டின் அதிகாரப்பூர்வ படங்களின்படி, ஸ்மார்ட்போனில் எளிதில் திறக்கக்கூடிய பேக் கேஸ் இருக்கும், எனவே இந்த சாதனம் மாற்றக்கூடிய பேட்டரியைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. அதேபோல் 3000 எம்ஏஎச் அல்லது 4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

போன் நெக்ஸ்ட் சாதனத்தின் இரண்டு

ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்தின் இரண்டு ஸ்லாட்டுகளிலும் 4 ஜி ஆதரவுடன் இரட்டை சிம் கார்டு ஸ்லாட்டுகளை வழங்க வாய்ப்புள்ளது. குறிப்பாக ஜியோ சிம் கார்டு பயன்படுத்தும் வகையில் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வாய்ஸ் அசிஸ்டண்ட், மொழி பெயர்ப்பு, ஸ்னாப்சாட், சிறப்பான கேமரா மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது இந்த அட்டகாசமான ஜியோபோன்நெக்ஸ்ட் சாதனம். மேலும் JioPhone மற்றும் JioPhone 2 ஐப் போலன்றி, JioPhone Next பல வண்ண விருப்பங்களிலும்கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் ஆனது அதிகளவில் விற்பனைசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதேபோல் இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை விட கம்மி விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Jiophone Next to go on sale before Diwali! Full details here.!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X