JioPhone நெக்ஸ்ட்டில் இப்படியொரு புதுமையான ஓஎஸ் இருக்குதா? நல்ல இருக்கே.! இது என்ன செய்யும் தெரியுமா?
ஜியோபோன் வரிசையில் அடுத்து அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன் மாடலாக ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் அல்ட்ரா மலிவு 4ஜி ஸ்மார்ட்போன் மாடலாக ஆண்ட்ராய்டு மூலம் இயக்கப்படும் 'பிரகதி ஓஎஸ்' மூலம் இயங்கும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக இந்தியாவுக்காகக் கூகுள் மற்றும் ஜியோ இடையேயான கூட்டமைப்பில் உருவாக்கப்பட்ட மிகவும் உகந்த ஆண்ட்ராய்டு இயங்குதளம் ஆகும்.

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனில் இத்தனை அம்சங்களா?
ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் ஒரு குவால்காம் சிப்செட் உடன் வரும், இது உகந்த இணைப்பு மற்றும் இருப்பிட தொழில்நுட்பங்களை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. இது குவால்காம் SoC சாதனத்தின் ஒட்டுமொத்த செயல்திறன், அதன் ஆடியோ மற்றும் அதன் பேட்டரி ஆகியவற்றை மேம்படுத்த உதவுகிறது என்று நிறுவனம் கூறியுள்ளது. இத்துடன் ஜியோபோன் நெக்ஸ்ட் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது.

'வாய்ஸ் அசிஸ்டண்ட்', 'சத்தமாக வாசிக்கவும்' மற்றும் 'டிரான்ஸ்லேட்'
ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் 'வாய்ஸ் அசிஸ்டண்ட்', 'சத்தமாக வாசிக்கவும்' மற்றும் 'டிரான்ஸ்லேட்' போன்றவற்றுக்கான ஆதரவுடன் வரும் என்று கூறப்படுகிறது. பயனர்கள் எப்பொழுதும் மிகவும் பாதுகாப்பான மற்றும் சக்திவாய்ந்த சாதனத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை உறுதிசெய்யச் சாதனம் தானாகவே புதுப்பிக்கப்படும் அம்சத்துடன் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரகதி ஓஎஸ் பேட்டரி ஆயுளின் செயல்திறனை மேம்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது.

என்ன கேமரா அம்சத்துடன் ஜியோபோன் நெக்ஸ்ட் வெளிவரும்?
சாதனம் பின்புறத்தில் எல்இடி ப்ளாஷ் உடன் 13 எம்பி கொண்ட ஒற்றை கேமரா சென்சாரை கொண்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர்ஸ் சாதனத்தின் உடலின் ஒரே பக்கத்தில் உள்ளன, மேலும் சார்ஜ் செய்ய கீழே ஒரு USB போர்ட் உள்ளது. பிரகதி ஓஎஸ் உண்மையில் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். ஜியோபோன் நெக்ஸ்ட் ரிலையன்ஸ் ஜியோவுக்கு வரும் ஆண்டில் பல புதிய சந்தாதாரர்களைச் சேர்க்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

JioPhone Next இந்தியாவில் வரவேற்கப்படுமா?
கூகுள் உடன் இணைந்து மிகவும் உகந்த OS அமைப்பை நிறுவனம் உறுதியளித்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. இது உண்மையில் மிரட்டலான அனுபவத்தைத் தனது பயனர்களுக்கு மலிவு விலையில் வழங்கி வெற்றி பெற்றால், நிச்சயம் JioPhone Next இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற அதிக வாய்ப்புள்ளது. ஜியோபோன் நெக்ஸ்ட் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இது முற்றிலும் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூப்பர் மலிவு விலை மற்றும் உகந்த ஸ்மார்ட்போன்கள் தேவைப்படும் சர்வதேச சந்தைகளில் நிறுவனம் அதை விற்கலாம் என்று கூறப்படுகிறது.

ஜியோ மற்றும் கூகுள் அப்ளிகேஷன்ஸ்
சாதனத்தில் முன்பே ஏற்றப்பட்ட ஏராளமான ஜியோ மற்றும் கூகுள் அப்ளிகேஷன்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பயன்பாடுகள் சாதனத்திற்கு நிரந்தரமாகச் செயல்படக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. குறைந்த ஒளி நிலையிலும் ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்தின் கேமரா சிறந்த காட்சிகளைப் படம் பிடிக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்
மலிவு விலையில் 4ஜி இணக்கத்துடன் ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கக்கூடிய ஸ்மார்ட்போன் கிடைத்தால் மக்கள் வேண்டாம் என்றா சொல்லப்போகிறார்கள். ஜியோ மற்றும் கூகிளின் கூட்டு முயற்சி வெற்றியடையும் என்ற நம்பிக்கை உறுதியாகத் தெரிகிறது. எதுவாக இருந்தாலும் இதன் அறிமுகத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருப்பது இன்னும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications