ரூ.3499 மட்டும் ஒதுக்கி வச்சுக்கோங்க- தீபாவளிக்கு வரும் 4ஜி ஜியோபோன் நெக்ஸ்ட்: ப்ரீமியம் திறன்கள் பாஸ்!

|

தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் அறிமுகம் செய்யும் ஜியோபோன் நெக்ஸ்ட் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாதனங்களில் ஒன்றாகும். இந்த சாதனமானது செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜியோபோன் நெக்ஸ்ட் அறிமுகம் தாமதமானது. இந்த தாமதத்திற்கு சிப்செட் பற்றாக்குறையே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போனாக இந்தியாவில் தீபாவளி பண்டிகைக்கு அதாவது நவம்பர் 4 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என ரிலையன்ஸ் உறுதி செய்துள்ளது.

ஜியோபோன் நெக்ஸ்ட்

ஜியோபோன் நெக்ஸ்ட்

கூடுதலாக ஸ்மார்ட்போன் சமீபத்தில் கூகுள் ப்ளே கன்சோல் பட்டியலிலும் காணப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக அதன் அம்சங்களை தெளிவுப்படுத்துகிறது. அம்சங்களை பொறுத்தவரையில், வரவிருக்கும் ஜியோபோன் நெக்ஸ்ட் விலை முன்பு ஆன்லைனில் டிப் செய்யப்பட்டுள்ளது. ஜியோபோன் அடுத்த அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் 5.5 இன்ச் டிஸ்ப்ளேவுடன் எச்டி ப்ளஸ் 1440 x 720-பிக்சல் தீர்மானத்துடன் வருகிறது. 320 டிபிஐ திரை அடர்த்தி மற்றும் 18:9 விகிதத்துடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2ஜிபி ரேம் மற்றும் 3 ஜிபி ரேம்

2ஜிபி ரேம் மற்றும் 3 ஜிபி ரேம்

இந்த ஸ்மார்ட்போன் ஹூட்டின் கீழ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 215 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 4 Cortex-A53 கோர்கள் மற்றும் Adreno 306 GPU உடன் இணைக்கப்படும் என கூறப்படுகிறது. ஜியோபோன் நெக்ஸ்ட் 2ஜிபி ரேம், 3 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்சேமிப்பு 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. மென்பொருள் முன்னணியில் ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11(கோ எடிஷன்) மூலம் இயங்கும் என கூறப்படுகிறது.

13 எம்பி பிரதான கேமரா

13 எம்பி பிரதான கேமரா

ஜியோபோன் நெக்ஸ்ட் பின்புற பேனலில் 13 எம்பி கேமரா இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பிகள் மற்றும் வீடியோ வசதிக்கு என 8 மெகாபிக்சல் சென்சார் இடம்பெறும் என கூறப்படுகிறது. மைக்ரோ யூஎஸ்பி கேபிளை ஆதரிக்கும் எனவும் 2500 எம்ஏஎச் பேட்டரி உடன் வரும் எனவும் கூறப்படுகிறது.

வாய்ஸ் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பல்வேறு அணுகல்

வாய்ஸ் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பல்வேறு அணுகல்

நிகழ்நேர மொழிபெயர்ப்பு, அதிகரித்த ரியாலிட்டி ஃபில்டர்கள், ஸ்மார்ட் கேமராக, வாய்ஸ் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பல்வேறு அணுகல் உடன் வருகிறது. ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்தின் இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரையில் இரட்டை சிம், ப்ளூடூத் வி4.2 மற்றும் ஜிபிஎஸ் ஆகியவைகளுடன் வரும் என கூறப்படுகிறது.

ஜியோபோன் நெக்ஸ்ட் விலை

ஜியோபோன் நெக்ஸ்ட் விலை

ஜியோபோன் நெக்ஸ்ட் விலை குறித்து தற்போது வரை ஜியோ எந்த தகவலையும் பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜியோ போன் சுமார் ரூ.3499 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் சில அறிக்கைகளில் ஜியோஃபோன் நெக்ஸ்ட் விலை எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் எனழும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருந்த நிலையில் சிப் பற்றாக்குறை காரணமாக தாமதமானது அதேபோல் இதன் விலை நிர்ணயிக்கப்பட்டதை விட சிப் பற்றாக்குறை காரணமாக 20 சதவீதம் அதிகரித்திருக்கும் என கூறப்படுகிறது. நவம்பர் 4 ஆம் தேதி அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ரீமியம் திறன்களை கொண்டிருக்கும் என தகவல்

ப்ரீமியம் திறன்களை கொண்டிருக்கும் என தகவல்

இந்த சாதனம் மற்றும் அதன் ஆபரேட்டிங் சிஸ்டம் தற்போதுவரை அதிக சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போன்களுடன் தொடர்புடைய ப்ரீமியம் திறன்களை வழங்கும். வாஸ்ட்-ஃபர்ஸ்ட் அம்சங்கள் உட்பட மக்கள் தங்களது மொழியில் தொலைபேசியை பயன்படுத்தலாம். அதேபோல் இந்த சாதனம் சிறந்த கேமரா அனுபவம், சமீபத்திய ஆண்ட்ராய்டு அம்சம் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளை பெறவும் உதவுகிறது என குறிப்பிட்டுள்ளது.

ஜியோ மற்றும் கூகுள் இணைந்து ஸ்மார்ட்போன்கள்

ஜியோ மற்றும் கூகுள் இணைந்து ஸ்மார்ட்போன்கள்

ஜியோ மற்றும் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். எகனாமிக் டைம்ஸ் தகவலின்படி, ஜியோ போன் நெக்ஸ்ட் அடிப்படை மற்றும் மேம்பட்ட இரண்டு வகைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த பதிப்புகளின் விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை விலை ரூ.5000 ஆக இருக்கும் எனவும் மேம்பட்ட மாடல் விலை ரூ.7000 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
JioPhone Next Smartphones interesting Specs Revealed: Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X