Home
News

இந்த டிவிஸ்ட நாமளே எதிர்பார்க்கல.! இவ்வளவு குறைவான மலிவு விலையில் புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் அறிமுகமா?

இந்தியாவில் ஜியோபோன் நெக்ஸ்ட் விலை பற்றிய அடுத்த தகவல் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. அதன் விவரக்குறிப்புகள் மீண்டும் ஒருமுறை வெளிவந்துள்ளன, இந்த முறை மலிவான வரவிருக்கும் ஸ்மார்ட்போன் என்ன-என்ன அம்சங்களை நமக்கு கொண்டு வரவிருக்கிறது என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாக தெரிந்துகொள்ளப்போகிறோம். இம்முறை நாமளே எதிர்பார்த்திடாத விலை புலியில் இந்த புதிய சாதனம் அறிமுகமாகும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டிவிஸ்ட நாமளே எதிர்பார்க்கவில்லை

இந்த டிவிஸ்ட நாமளே எதிர்பார்க்கவில்லை

இந்த சாதனம் கூகுள் உடன் இணைந்து ரிலையன்ஸ் ஜியோவால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும், இந்த புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் ஆண்ட்ராய்டு 11 (கோ பதிப்பு) உடன் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய கசிவின் படி, புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் 5.5' இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 3 ஜிபி ரேம் மற்றும் இரண்டு ஸ்டோரேஜ் வேறுபாடுகள் உடன் வெளிவரும்.

2500mah பேட்டரியுடன் மலிவு விலையில் ஆண்ட்ராய்டு போனா?

2500mah பேட்டரியுடன் மலிவு விலையில் ஆண்ட்ராய்டு போனா?

அதேபோல், இதில் 2 ஜிபி ரேம் விருப்பமும் இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், 4 ஜி வோல்டிஇ இணைப்புடன் 2500mah பேட்டரியை இந்த புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஜியோபோன் நெக்ஸ்ட் ஜூன் மாதம் நடந்த 44 வது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (AGM) அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் ஜியோபோன் நெக்ஸ்ட் எதிர்பார்க்கப்படும் விலை என்ன?

இந்தியாவில் ஜியோபோன் நெக்ஸ்ட் எதிர்பார்க்கப்படும் விலை என்ன?

பிரபல டிப்ஸ்டர் யோகேஷின் ட்வீட் படி, ஜியோபோன் நெக்ஸ்ட் இந்தியாவில் வெறும் ரூ. 3,499 என்ற மலிவான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. போன வார அறிவிப்பின் படி, இந்த புதிய ரிலையன்ஸ் ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் ரூ. 4000 என்ற விலையை விட குறைவான விலையில் இந்தியாவில் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி, கூடுதல் சந்தோஷத்தை உருவாகியுள்ளது.

ஜியோபோன் நெக்ஸ்ட் ஆண்ட்ராய்டு சாதனம் பற்றிய கூடுதல் தகவல்கள் இதோ

ஜியோபோன் நெக்ஸ்ட் ஆண்ட்ராய்டு சாதனம் பற்றிய கூடுதல் தகவல்கள் இதோ

இந்த ஸ்மார்ட்போன் பற்றி முதலில் 44 வது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் (AGM) அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, ரிலையன்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி, இந்த புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனானது இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் மிகவும் மலிவான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்று அவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோஃபோன் நெக்ஸ்ட் சாதனத்தில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்கள்

ஜியோஃபோன் நெக்ஸ்ட் சாதனத்தில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்கள்

ஜியோஃபோன் நெக்ஸ்ட் ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய சாதனம் ஒரு ஒற்றை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் 720x1,440 பிக்சல்கள் கொண்ட HD+ டிஸ்ப்ளேவுடன் இயங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல், குவால்காம் QM215 SoC ஆல் இயக்கப்படுகிறது. இது குவால்காம் அட்ரினோ 308 GPU உடன் 64-பிட், குவாட் கோர் மொபைல் செயலி உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த விலையில் 13 மெகாபிக்சல் கேமராவா?

இந்த விலையில் 13 மெகாபிக்சல் கேமராவா?

இது குறைந்த விலை சாதனங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, இதில் 13 மெகாபிக்சல் கேமரா மற்றும் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான கேமரா உடன் வருகிறது. இதில் ப்ளூடூத் v4.2, GPS, 1080p வரை வீடியோ பதிவு, LPDDR3 RAM மற்றும் eMMC 4.5 சேமிப்பகத்துடன் கூடிய உள்ளமைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் X5 LTE மோடம் உடன் வருகிறது. கூகுள் கேமரா கோவின் புதிய பதிப்பு தொலைப்பேசியில் Snapchat ஒருங்கிணைப்புடன் முன்பே நிறுவப்பட்டுள்ளது.

ரூ. 3,499 விலையில் புது போன் கிடைச்சா யாரு தான் வேண்டாமென்று சொல்லுவோம்?

ரூ. 3,499 விலையில் புது போன் கிடைச்சா யாரு தான் வேண்டாமென்று சொல்லுவோம்?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வரும் செப்டம்பர் மாத துவக்கத்தில் இந்த சாதனத்தை அறிமுகம் செய்யத் தயாராகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியாபோன் நெக்ஸ்டின் விலையைப் பொறுத்தவரை, சில கசிவுகள் முன்பே வெளியாகியது. இப்போது வெளியான கசிவு படி இந்த சாதனம் வெறும் ரூ. 3,499 என்ற விலைக் குறியீட்டை இலக்காகக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது என்று கூடுதல் நம்பிக்கையுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ இன்னும் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
JioPhone Next Price And Specifications Again Tipped In India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X