Just In
- 1 min ago
அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஒப்போ, லாவா, சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!
- 15 hrs ago
86-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- 16 hrs ago
குறைந்த விலையில் இன்று மட்டும் தான் சலுகை.. உடனே ஆர்டர் செய்யுங்கள்.. அட்டகாச Tecno போன்கள்..
- 16 hrs ago
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி சி30: என்னென்ன அம்சங்கள்?
Don't Miss
- News
"டி.ஆர். பாலுதான் மெயின்".. போட்டு கொடுத்த ஆர்.எஸ். பாரதி.. அதிர்ந்து போன அறிவாலயம்.. என்னாச்சு!
- Finance
எல்.ஐ.சி பங்குகள் வீழ்ந்தாலும் லாபத்தை கொடுக்கும் டெல்லிவரி மற்றும் ஜொமைட்டோ : எப்படி தெரியுமா?
- Automobiles
இந்த பைக் வாங்கும் விலையில் 4 கார் வாங்கலாம் ஆனால் காரிகளில் இல்லாத விஷயங்கள் இந்த பைக்கில் இருக்கிறது...
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் சொத்துக்களை விற்பதில் கவனமாக முடிவெடுக்கவும்...
- Sports
வழுக்கி விழுந்த ஹர்திக் பாண்ட்யா.. முதுகில் பலத்த அடியா.. குஜராத் vs ராஜஸ்தான் போட்டி பரபர சம்பவம்!!
- Movies
அம்மா தூக்குப்போட்டு தற்கொலை.. மோசமான நாள்.. வேதனையை பகிர்ந்த நடிகை கல்யாணி !
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மொத்த இந்தியாவும் எதிர்பார்த்த JioPhone Next..மாதம் ரூ.300 மட்டும் இருந்த போதும் வாங்கலாம்.! எப்படி தெரியுமா?
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இன்று கூகிளுடன் இணைந்து உருவாக்கிய புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் விலை பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. புதிய JioPhone நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் வெறும் ரூ. 1,900 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது ஆப்பிள் கிளீனிங் கிளாத்தை விடக் குறைந்த விலை என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் கிளீனிங் கிளாத் கிட்டத்தட்ட ரூ. 1,999 என்ற விலையில் கிடைக்கிறது. ஜியோபோன் நெக்ஸ்ட் வாங்க விரும்புபவர்கள் கட்டாயம் இந்த தகவலைத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் விலை இது தானா?
ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் விலை உண்மையில் ரூ. 6,499 என்று நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், முதல் டவுன்பேமெண்ட்டாக வாடிக்கையாளர்கள் வெறும் ரூ. 1,999 செலுத்த வேண்டும். இதற்குப் பிறகு, மீதமுள்ள தொகையை வாடிக்கையாளர்கள் 18 மாதம் அல்லது 24 மாதங்களுக்குள் EMI வசதி மூலம் செலுத்தலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் வரும் நவம்பர் 4 ஆம் தேதிக்குள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோமார்ட் டிஜிட்டல் மற்றும் சில்லறை விற்பனை இடங்களில் இது கிடைக்கும்.

JioPhone Next ஸ்மார்ட்போனை வாங்கு எளிமையான 4 EMI திட்டங்கள்
JioPhone Next ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நான்கு EMI திட்டங்களை வழங்குகிறது. நான்கு திட்டங்களும் 24 மாதங்கள் மற்றும் 18 மாத பேஅவுட் முறையைக் கொண்டுள்ளன. 24 மாதங்களுக்கு மாதத்திற்கு ₹300 மற்றும் 18 மாதங்களுக்கு மாதம் ₹350 செலுத்தும் 'Always-on' திட்டமே மிகவும் மலிவான திட்டமாக ஜியோவின் பட்டியலில் காட்சியளிக்கிறது. இத்துடன், ஜியோ 5 ஜிபி டேட்டா மற்றும் 100 நிமிட அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது.
வாட்ஸ்அப் சேவை இனி இந்த ஸ்மார்ட்போன்களில் செயல்படாது! உங்க போன் இதில் இருக்கானு செக் பண்ணுங்க!

JioPhone நெக்ஸ்ட் வாங்க ஆர்வமுள்ளதா? அப்போ இதை செய்து உடனே போனை வாங்கலாம்..
JioPhone நெக்ஸ்ட் வாங்க ஆர்வமுள்ளவர்கள், JioMart டிஜிட்டல் சில்லறை விற்பனையாளரான ஜியோவின் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது WhatsApp மூலம் 7018270182 என்ற எண்ணுக்கு 'Hi' என்ற மெசேஜ்ஜை அனுப்பலாம். ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்திற்காக ஜியோ வழங்கும் நான்கு EMI திட்டங்களைப் பற்றி இப்போது விரிவாகப் பாருங்கள். ஜியோ நிறுவனம் ஆல்வேஸ் ஆன் திட்டம், லார்ஜ் திட்டம், XL திட்டம் மற்றும் XXL திட்டம் என்ற நான்கு திட்டங்களை வழங்குகிறது. முதலில் ஆல்வேஸ் ஆன் திட்டத்தின் கீழ் ரூ. 300 கட்டணத்துடன் 24 மாத திட்டம் செயல்படுகிறது.

ஜியோ வழங்கும் லார்ஜ் திட்டம் மற்றும் XL திட்டத்தின் நன்மைகள் என்ன?
அதேபோல், ரூ. 350 விலையில் 18 மாதங்கள் செயல்படும் ஆல்வேஸ் ஆன் திட்டமும் கிடைக்கிறது. இந்த இரண்டு திட்டங்களைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு 5 ஜிபி டேட்டா மற்றும் 100 நிமிட அழைப்பு நன்மை கிடைக்கிறது. அடுத்தபடியாக லார்ஜ் திட்டத்தின் கீழ் ரூ. 400 கட்டணத்துடன் 24 மாத திட்டத்தையும், ரூ. 500 செலவில் 18 மாத திட்டத்தையும் 1.5 ஜிபி தினசரி டேட்டா நன்மையோடு அன்லிமிடெட் அழைப்பு நன்மையுடன் நிறுவனம் வழங்குகிறது. இதேபோல், XL திட்டம் திட்டத்தின் கீழ் ரூ. 500 கட்டணத்துடன் 24 மாத திட்டமும், ரூ. 550 விலையில் 18 மாத திட்டத்தையும் நிறுவனம் வழங்குகிறது.

XXL திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள் என்ன-என்ன?
இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா நன்மை மற்றும் அன்லிமிடெட் அழைப்பு நன்மை கிடைக்கிறது. இறுதியாக XXL திட்டத்தின் கீழ் ரூ. 550 கட்டணத்தில் 24 மாத திட்டமும், ரூ. 600 விலையில் 18 மாத கால திட்டமும் கிடைக்கிறது. இந்த 2 திட்டங்களின் கீழ் வாடிக்கையாளர்களுக்குத் தினமும் 2.5 ஜிபி டேட்டா நன்மையையும், அன்லிமிடெட் அழைப்பு நன்மையையும் கிடைக்கிறது. ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை டெல்கோ மற்றும் கூகுள் இணைந்து உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மலிவு விலையில் கிடைக்கும் முதல் 4ஜி ஸ்மார்ட்போன்
மலிவு விலையில் கிடைக்கும் 4ஜி ஸ்மார்ட்போனில் பிரகதி ஓஎஸ் இயங்குகிறது. இது ஜியோஃபோன் நெக்ஸ்ட்க்காக உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு பதிப்பாகும். கூகுள் அம்சங்களான Read Aloud மற்றும் Translate Now போன்ற அம்சங்களும் பிரகதி OS இல் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் ஜியோ மற்றும் கூகுளின் பயன்பாடுகளுடன் வருகிறது. இது HDR பயன்முறையுடன் குறைந்த ஒளி புகைப்படம் எடுப்பதற்கான மேம்படுத்தல்கள் மற்றும் தொலைப்பேசியின் கேமராவில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியா குறிப்பிட்ட Snapchat லென்ஸ்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
ஆப்பிள் 12 சீரிஸ் மீது அபார தள்ளுபடி.. ரூ. 24000 மிச்சம் பிடிக்கலாம்.. உடனே முந்துங்கள் மக்களே..

ஜியோபோன் நெக்ஸ்டின் அம்சங்கள் எல்லாம் வேற லெவல்
இந்த அம்சங்கள் இணையப் பக்கங்கள், ஆப்ஸ், மெசேஜ் மற்றும் புகைப்படங்களுடன் கூடுதலாக ஃபோன் திரையில் உள்ள எந்த உரையிலும் வேலை செய்யும். ஜியோபோன் நெக்ஸ்ட் பயனர்கள், ஜியோசாவ்னில் இசையை இயக்குவது அல்லது மை ஜியோவில் உங்கள் இருப்பைச் சரிபார்ப்பது போன்ற ஜியோ தொடர்பான கேள்விகளுக்கு கூகுள் அசிஸ்டண்ட்டைப் பயன்படுத்த முடியும். ஸ்மார்ட்போன் வழக்கமான பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் ஆண்ட்ராய்டு வெளியீடுகளைப் பெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜியோபோன் நெக்ஸ்ட் விவரக்குறிப்புகள்
விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, JioPhone Next ஆனது 5.45' இன்ச் HD+ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வருகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 215 சிப்செட் மூலம் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள் சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 512 ஜிபி வரை சேமிப்பக விரிவாக்கத்திற்கான மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டையும் இது கொண்டுள்ளது.

ஜியோபோன் நெக்ஸ்ட் மலிவு விலையில் ஒரு வரப்பிரசாதமா?
JioPhone Next ஆனது 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. இது 3,500mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. இது டூயல் சிம் வசதியைக் கொண்டுள்ளது. இது ப்ளூடூத், 3.5 ஆடியோ ஜாக் போன்ற எண்ணற்ற முக்கிய அம்சங்களுடன் வெளிவருகிறது. மலிவு விலையில் 4ஜி இணைப்புடன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்பவர்களுக்கு ஜியோபோன் நெக்ஸ்ட் ஒரு வரப்பிரசாதம்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999