ரிலையன்ஸ் டிஜிட்டலின் இணையதளம் வழியாக விற்பனைக்கு வந்த ஜியோபோன் நெக்ஸ்ட்.!
ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது இப்போது ரிலையன்ஸ் டிஜிட்டலின் இணையதளம் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை வாங்க விருப்பமுள்ளவர்கள் ரிலையன்ஸ் டிஜிட்டலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து ஆர்டர் செய்யலாம். குறிப்பாக ஜியோபோன் நெக்ஸ்ட் அதே விலையில் வாங்கக் கிடைகிறது.

குறிப்பாக 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை ரூ.6,499-விலையில் வாங்க முடியும்.மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் குறிப்பிட்ட சலுகைககளை கிடைக்கும். பின்பு இந்த சாதனத்தை EMI விருப்பங்களிலும் வாங்க முடியும் என்ப குறிப்பிடத்தக்கது. இப்போது இந்தஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்தின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் மாடல் 5.45-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 720×1440 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும். குறிப்பாக இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனில் 13 எம்பி ரியர் கேமரா வசதி உள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால்அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு இவற்றுள் அடக்கம். ஆனால் இந்த சாதனம் கைரேகை சென்சாருடன் வரவில்லை, அதற்கு பதிலாக, வாடிக்கையாளர்கள் பேட்டர்ன் மற்றும் பின் அடிப்படையிலான அங்கீகாரத்தை நம்பியிருக்க வேண்டும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடியது. ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் வழக்கமான பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் ஆண்ட்ராய்டு வெளியீடுகளைப் பெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 215 மூலம் இயக்கப்படுகிறது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். இதுதவிர 4ஜி, டூயல் சிம்கள், ப்ளூடூத் 4.1, மைக்ரோ-யூஎஸ்பி போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக்
மற்றும் வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன்.

குறிப்பாக ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலில் 3500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் கூகுள் உடன் இணைந்து கட்டமைக்கப்பட்ட PragatiOS வசதி உள்ளது. கூகுள் அம்சங்களான Read Aloud மற்றும் Translate Now போன்ற அம்சங்களும் பிரகதி OS இல் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.கிட்டத்தட்ட பட்ஜெட் விலையில் அனைத்து அம்சங்களையும் வழங்குகிறது ஜியோபோன் நெக்ஸ்ட்.அதேபோல் இது முழுமையாக ஆண்ட்ராய்டுதளத்தில் இயங்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாகும். கூகிள் நிறுவனத்தின் உதவியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலை ஜியோ நிறுவனம் மலிவான விலையில் கிடைக்கும் படி வடிவமைத்து உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications