Home
News

அவ்ளோ சந்தோஷம் வேணாம்- பணம் கொடுக்கல மொபைல் லாக்: ஜியோபோன் நெக்ஸ்ட்டில் இருக்கும் டிவைஸ் லாக் அம்சம்!

ஸ்மார்ட்போன்கள் வட்டாரத்தில் சமீபத்திய பேசுபொருளாக இருப்பது ஜியோபோன். ஜியோபோன் நெக்ஸ்ட் அடுத்த சில நாட்களில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஜியோபோன் விலை ரூ.6499 ஆக இருக்கிறது. இந்த ஜியோபோனுக்கு பல்வேறு மாதாந்திர தவணை திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லாக் அம்சத்துடன் வரும் ஜியோபோன் நெக்ஸ்ட்

லாக் அம்சத்துடன் வரும் ஜியோபோன் நெக்ஸ்ட்

இஎம்ஐ திட்டத்தை பயன்படுத்தி ஜியோபோன் நெக்ஸ்ட் வாங்க திட்டமிட்டிருந்தால், ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் லாக் அம்சத்துடன் வருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். லாக் அம்சத்துடன் சாதனம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த அம்சமானது பயனர் பணம் செலுத்த தவறினால் ஸ்மார்டோபனை நிறுவனம் லாக் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோபோன் நெக்ஸ்ட் அம்சங்கள்

ஜியோபோன் நெக்ஸ்ட் அம்சங்கள்

அது எப்படி லாக் செய்ய முடியும், நம் கையில் இருக்கும் போனை எப்படி நிறுவனம் லாக் செய்யும் என்ற கேள்வி வரலாம். ஜியோபோன் நெக்ஸ்ட்-ல் வழங்கப்பட்ட விவரங்கள் குறித்து பார்க்கையில், இதில் ஏணைய நிறுவப்பட்ட பயன்பாடுகள் இருக்கிறது. இதன்மூலம் இருப்பிட அனுமதிகள், மைக்ரோஃபோன் அனுமதிகள் மற்றும் கேமரா அனுமதிகள் போன்ற அம்சங்களை அவர்களால் கட்டுப்படுத்த முடியும்.

போனை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்

போனை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்

ஜியோவால் இந்த ஸ்மார்ட்போனை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தள்ளுபடி விலையில் விற்கப்படும் சில ஸ்மார்ட்போன்களில் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பயனர் குறிப்பிட்ட சாதனத்தை பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என மீதத் தொகையை பயனர் செலுத்தவில்லை என்றால் சாதனம் லாக் செய்யப்படும்.

லாக் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்கும்

லாக் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்கும்

அதாவது பயனரிடம் சாதனம் இருந்தாலும் பெரும்பாலான அம்சங்கள் லாக் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்கும். யாராவது மாதாந்திர தொகை செலுத்தவில்லை என்றால் மட்டுமே நிறுவனம் இதை லாக் செய்யும். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் ஒருவர் தங்களது நிலுவைத் தொகையைச் செலுத்தினால் எந்த நேரத்திலும் நிறுவனம் சாதனத்தை திறக்க முடியும்.

ஆவண சமர்பித்தலில் கெடுபிடி இருக்காது

ஆவண சமர்பித்தலில் கெடுபிடி இருக்காது

அதேபோல் ஜியோபோன் நெக்ஸ்ட்க்கான இஎம்ஐ செயல்முறை பிற சாதனங்களுக்கு இருப்பது போல் இன்றி ஆவண சமர்பித்தல் குறைவாகவே இருக்கும். அதேபோல் இந்த அம்சம் பயனர் தங்கள் சாதனத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் கூகுள் இணைந்த தயாரிக்கும் ஸ்மார்ட்போன்

ரிலையன்ஸ் கூகுள் இணைந்த தயாரிக்கும் ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் உலகளவில் பெரிதளவு மாற்றத்தை ஏற்படுத்த களமிறங்க இருக்கிறது, மிகவும் மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன், ரிலையன்ஸ் கூகுள் இணைந்த தயாரிக்கும் ஸ்மார்ட்போன் என சமீபத்திய பேசு பொருளாக இருப்பது ஜியோபோன். ரிலையன்ஸ் மற்றும் கூகுள் இணைந்து உருவாக்கிய ஜியோ போன் விவரக்குறிப்புகள் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த போனின் விலையையும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜியோபோன் விரைவில் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோபோன் நெக்ஸ்ட் விலை ரூ.6499

ஜியோபோன் நெக்ஸ்ட் விலை ரூ.6499

இந்தியாவில் ஜியோபோன் நெக்ஸ்ட் விலை ரூ.6499 ஆக இருக்கிறது. ஜியோ பல கட்டண முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு பல இஎம்ஐ விருப்பங்களும் வழங்கப்படுகின்றன. ஜியோ போனை ஆரம்பத்தில் ரூ.1999 செலுத்தி மீதமுள்ள தொகையை இஎம்ஐ மூலம் செலுத்தலாம். மீதமுள்ள தொகையை மாதம் ரூ.350 வீதம் 18 மாதங்கள் செலுத்தி வாங்கலாம்.

டபுள் எக்ஸ்எல் திட்டம்

டபுள் எக்ஸ்எல் திட்டம்

தினசரி இலவச டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் உள்ளடக்கிய பெரிய திட்டங்களும் இதனுடன் வழங்கப்படுகின்றன. முன்பணமாக ரூ.1999 செலுத்தி 24 மாதங்களுக்கு மாதம் ரூ.500 மற்றும் 18 மாதங்களுக்கு ரூ.550 செலுத்தி வாங்கலாம். அதேபோல் டபுள் எக்ஸ்எல் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் 24 மாதங்களுக்கு மாதம் ரூ.550 அல்லது 18 மாதங்களுக்கு ரூ.600 செலுத்த வேண்டும். இந்த திட்டத்திற்கு முன்பணம் ரூ.1999 ஆகும். இந்த திட்டமானது 5.45 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்தோடு வருகிறது.

Best Mobiles in India

English summary
Jiophone Next Going to Launch with device lock feature: What is device lock feature?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X