அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ஜியோபோன் நெக்ஸ்ட்: கூகுள் பிளே கன்சோல் தகவல்.!

|

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கடந்த ஜூன் மாதம் நடந்த ரிலையன்ஸ் ஜியோ நிகழ்வில் ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் அறிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 10-ம் தேதி இந்த

அந்த நிகழ்வில் செப்டம்பர் 10-ம் தேதி இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டது.
ஆனால் சிப்செட்களின் பற்றாக்குறையால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை வெளியிடுவதை
தாமதப்படுத்தியது.

 ஸ்மார்ட்போன் தீபாவளி

அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் தீபாவளி பண்டிகைக் காலத்தில் வாங்க கிடைக்கும் என்று தகவல் வெளிவந்தது. எனவே இந்தசாதனம் அக்டோபர் மாத இறுதியில் அல்லது
நவம்பர் மாத தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 கூகுள் பிளே கன்சோலில்

இந்நிலையில் கூகுள் பிளே கன்சோலில் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனில் சில முக்கிய அம்சங்கள் வெளிவந்துள்ளது. அதாவது பிளே கன்சோல் தகவலின்படி, இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலின் டிஸ்பிளே 720 x 1440 பிக்சல்ஸ் HD ரெசல்யூஷனுக்கான ஆதரவைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

வாங்கலாமே- 8ஜிபி ரேம், 48 எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் உடன் ரியல்மி க்யூ3எஸ் அறிமுகம்: விலை தெரியுமா?வாங்கலாமே- 8ஜிபி ரேம், 48 எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் உடன் ரியல்மி க்யூ3எஸ் அறிமுகம்: விலை தெரியுமா?

2 ஜிபி ரேம் ஆதரவுடன் வெளிவரு

மேலும் இந்தத சாதனம் ஸ்னாப்டிராகன் 215 மொபைல் பிளாட்ஃபார்ம் மற்றும் 2 ஜிபி ரேம் ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் இந்த சாதனத்தில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதி இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

டெலிவரி பாய் டூ ஆட்ட நாயகன்- மாபெரும் கிரிக்கெட் வீரரின் பிரமிப்பு பயணம்: அவ்வளவு தியாகம்., அவ்வளவு அடிடெலிவரி பாய் டூ ஆட்ட நாயகன்- மாபெரும் கிரிக்கெட் வீரரின் பிரமிப்பு பயணம்: அவ்வளவு தியாகம்., அவ்வளவு அடி

 ஜியோபோன் நெக்ஸ் ஸ்மார்ட்போன்

இதுதவிர ஜியோபோன் நெக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா வசதி உள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா வசதியை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல்.

ஜிபி ரேம்/16ஜிபி மெமரி மற்றும் 3

அதேபோல் 2ஜிபி ரேம்/16ஜிபி மெமரி மற்றும் 3ஜிபி ரேம்/32ஜிபி மெமரி ஆரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

சும்மா இல்ல 42% தள்ளுபடியில் ஸ்மார்ட்டிவிகள்: வீட்டையே தியேட்டராக மாற்றலாம்- அமேசான் அதிரடி சலுகை!சும்மா இல்ல 42% தள்ளுபடியில் ஸ்மார்ட்டிவிகள்: வீட்டையே தியேட்டராக மாற்றலாம்- அமேசான் அதிரடி சலுகை!

ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலை கூகுள் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இணைந்து

குறிப்பாக ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலை கூகுள் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இணைந்து உருவாக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே நீங்கள் எதிர்பார்க்கும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் இருக்கும். மேலும் கூகுள் நிறுவனத்தின் பல அருமையான
அம்சங்கள் இந்த சாதனத்தில் இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது கலர்., வேற லெவல் லுக்: ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போனின் புது மாறுபாடு அக்டோபர் 20- விலை, அம்சங்கள்!புது கலர்., வேற லெவல் லுக்: ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போனின் புது மாறுபாடு அக்டோபர் 20- விலை, அம்சங்கள்!

ண்டிருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக 25

அதிகாரப்பூர்வ படங்களின்படி, இந்த ஸ்மார்ட்போனில் எளிதில் திறக்கக்கூடிய பேக் கேஸ் இருக்கும், எனவே இந்த சாதனம்
மாற்றக்கூடிய பேட்டரியைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக 2500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

க்ரீன் மொழிபெயர்ப்பு, வாய்ஸ்

ஆன் ஸ்க்ரீன் மொழிபெயர்ப்பு, வாய்ஸ் அசிஸ்டண்ட், ஸ்னாப்சாட், சிறப்பான கேமரா மற்றும் பல்வேறு இதர அம்சங்களைகொண்டிருக்கிறது ஜியோபோன் நெக்ஸ்ட் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ரூ.5000 விலையில் வெளிவரும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jiophone Next Features Released via Google Play Console Listing : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X