அதிரடி விலை குறைப்பு: JioPhone Next-ஐ இனி 'இந்த' கம்மி ரேட்டில் வாங்கலாமா? அடித்தது லக்!

|

ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கும், கம்மி விலையில் ஒரு பெஸ்டான ஸ்மார்ட்போன் சாதனம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கும் இந்த செய்தி நிச்சயமாகப் பயனளிக்கும். காரணம், இப்போது நீங்கள் வெறும் ரூ.5,000 விலைக்குள் ஒரு பெஸ்ட் ஸ்மார்ட்போன் டிவைஸை வாங்க முடியும். ஆம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் வழியாக ஒரு புதிய சலுகை JioPhone Next மீது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் மூலம் இந்தியர்கள் இப்போது பயன்பெறலாம்.

இந்தியாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய JioPhone Next

இந்தியாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய JioPhone Next

ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஜியோபோன் வரிசையில், கடந்த ஆண்டின் இறுதியில் ஜியோபோன் நெக்ஸ்ட் (JioPhone Next) என்ற சாதனம் ஜியோவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் உண்மையிலேயே மலிவு விலையில் இருக்கும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜியோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த டிவைஸ் அந்நேரத்தில் சரியாகப் பூர்த்தி செய்யத் தவறி, காத்திருந்த பல டன் பயனர்களை ஏமாற்றியது.

மக்களின் எதிர்ப்பார்ப்பை எப்படி ஜியோ தவறவிட்டது?

மக்களின் எதிர்ப்பார்ப்பை எப்படி ஜியோ தவறவிட்டது?

உண்மையைச் சொல்லப் போனால், இதன் விலை அவ்வளவு பெரியதாக இல்லை என்றாலும் கூட, இந்தியப் பயனர்கள் இதை இன்னும் மலிவான விலையிலேயே எதிர்பார்த்தனர் என்பதே உண்மை. காரணம், நாட்டில் ஜியோ நிறுவனம் மலிவு விலையில் சிறப்பான நன்மைகளை வழங்கி, மக்களை தன் வசம் வைத்துள்ளது. ஜியோவின் முந்தைய ஜியோபோன் மாடல்களை போல இதுவும் விலை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஓ மை காட்! உங்க போன் எவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுகிறது? உடனே SAR அளவை செக் செய்ங்க!ஓ மை காட்! உங்க போன் எவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுகிறது? உடனே SAR அளவை செக் செய்ங்க!

EMI திட்டங்களுடன் முந்தைய ஜியோபோன் நெக்ஸ்ட் விலை எவ்வளவு?

EMI திட்டங்களுடன் முந்தைய ஜியோபோன் நெக்ஸ்ட் விலை எவ்வளவு?

ஆனால், ஜியோ நிறுவனம் இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்தை ப்ரீபெய்ட் பலன்களுடன் தொகுத்து வழங்கிய போது, EMI திட்டங்களுடன் இந்த சாதனத்தின் விலை ரூ.14,000 வரை சென்றது. இதனால், பலரும் ஜியோபோன் நெக்ஸ்ட் மீது ஆர்வம் காட்டாமல் இருந்தனர். ஆனால், தற்போது இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு நம்ப முடியாத மிகப்பெரிய தள்ளுபடி உடன் கிடைக்கிறது. அதேபோல், சாதனத்திற்கான EMI மாதத்திற்கு ரூ.216 விலை முதல் தொடங்குகிறது.

அதிரடி விலை குறைப்பு.. அடித்தது லக்!

அதிரடி விலை குறைப்பு.. அடித்தது லக்!

ஜியோபோன் நெக்ஸ்ட் தற்போது அமேசான் இந்தியாவில் ரூ.4,599 என்ற விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நேரத்தில் ரூ.6,499 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ், பயனர்கள் சாதனத்தை ரூ 4,499 வரை வாங்க முடியும் என்று முன்பு ஜியோ கூறியிருந்தது. ஆனால், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகை அப்படியானதில்லை.

அடேங்கப்பா! Asus ROG Phone 6-ஆ இது? என்ன டிஸைனு என்ன லுக்கு? AeroActive Cooler 6 கூட இருக்கா?அடேங்கப்பா! Asus ROG Phone 6-ஆ இது? என்ன டிஸைனு என்ன லுக்கு? AeroActive Cooler 6 கூட இருக்கா?

இப்போது எக்ஸ்சேஞ் சலுகை இல்லாமலே இந்த விலையில் வாங்கலாமா?

இப்போது எக்ஸ்சேஞ் சலுகை இல்லாமலே இந்த விலையில் வாங்கலாமா?

Amazon India இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தள்ளுபடியின் கீழ் நீங்கள் இப்போது புதிய JioPhone Next டிவைஸை எக்ஸ்சேஞ் செய்யாமலே ரூ. 4,599 என்ற விலையில் வாங்க முடியும். JioPhone Next ஐப் பெறப் பயனர்கள் தங்கள் பழைய சாதனங்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்பைவிட, இப்போது JioPhone Next சாதனத்தின் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் லக் தான்.

ரூ.5,000-க்கும் குறைவாக விலையில் கிடைக்கும் புது ஸ்மார்ட்போன்

ரூ.5,000-க்கும் குறைவாக விலையில் கிடைக்கும் புது ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள நிலையில், தற்போது இந்த JioPhone Next சாதனத்தின் விலை ரூ.5,000-க்கும் குறைவாக இருப்பதால், பயனர்களுக்குக் கிடைக்கும் ஒரு சிறந்த ஒப்பந்தமாக இது பார்க்கப்படுகிறது. ஜியோபோன் நெக்ஸ்ட், ஏற்கனவே உள்ள பாரம்பரிய நெட்வொர்க் பயனர்களை 4ஜி நோக்கி மாறுவதற்கான நோக்கத்திற்காகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

இந்தியாவில் டைனோசர் முட்டை! 2050 இல் டைனோசர் மீண்டும் உயிர் பெறுமா? என்னப்பா சொல்றீங்க?இந்தியாவில் டைனோசர் முட்டை! 2050 இல் டைனோசர் மீண்டும் உயிர் பெறுமா? என்னப்பா சொல்றீங்க?

JioPhone Next ஒரு கேரியர்-லாக் என்பதை மறக்காதீர்கள்.. கேரியர்-லாக் என்றால் என்ன?

JioPhone Next ஒரு கேரியர்-லாக் என்பதை மறக்காதீர்கள்.. கேரியர்-லாக் என்றால் என்ன?

JioPhone Next ஆனது கேரியர்-லாக் செய்யப்பட்ட சாதனம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதன் பொருள், இந்த டிவைஸை வாங்கும் பயனர்கள் மற்ற நிறுவனத்தின் சிம் கார்டுகளை இந்த சாதனத்தில் செருகிப் பயன்படுத்த முடியாது என்பதாகும். JioPhone Next ஆனது Qualcomm Snapdragon 215 சிப்செட் உடன் வருகிறது. இது 2GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இயங்குகிறது.

குறைந்த விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட்போன்

குறைந்த விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட்போன்

இது இந்தியப் பயனர்களின் தேவைகளை மனதில் கொண்டு இந்தியாவில் உருவாக்கப்பட்ட பிரகதி OS இல் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது 3500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் 13எம்பி சென்சார் மற்றும் முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 8எம்பி சென்சார் வழங்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ்.

Best Mobiles in India

English summary
JioPhone Next Available With Huge Price Cut How To Avail It Easily Details : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X