உலகின் மலிவுவிலை ஸ்மார்ட்போன்- ஜியோபோன் நெக்ஸ்ட் அறிவிப்பு: குதூகலத்தில் வாடிக்கையாளர்கள்!

|

ரிலையன்ஸ் ஏஜிஎம் 2021 நிகழ்வில் ஜியோபோன் நெக்ஸ்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் உடன் இணைந்து தயாரிக்கப்பட்ட ஜியோபோன் நெக்ஸ்ட் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய உள்ளது என ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார்.

செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று

செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று

ரிலையன்ஸ் ஏஜிஎம் 2021 நிகழ்வில் பேசிய முகேஷ் அம்பானி புதிய ஸ்மார்ட்போன் குறித்து அறிவித்தார். அதில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் மட்டுமின்றி உலகளிவில் மிக மலிவான ஸ்மார்ட்போனாக இருக்கும் என குறிப்பிட்டார். இந்த ஸ்மார்ட்போன் சில சுவாரஸ்யமான அம்சங்களுடன் வரும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இந்திய சந்தையில் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார்.

ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆதரவு

ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆதரவு

மேலும் இந்த ஸ்மார்ட்போன் தனிப்பயனாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு ஓஎஸ் உடன் வரும் எனவும் வாய்ஸ் அசிஸ்டென்ட் உட்பட ஜியோ, கூகுளின் அனைத்து பயன்பாட்டு அம்சங்களோடு வரும். இதில் மொழி பெயர்ப்பு வசதிக்கு பிரத்யேக ஏற்பாடு இருக்கிறது, ஹை-பில்டர் ஸ்மார்ட் கேமரா அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை

கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை

இந்த நிகழ்வில் கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை கலந்துகொண்ட ஜியோவுடனான கூட்டாண்மை குறித்து பேசினார். சந்தையில் மிகவும் மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போனா இது இருக்கும். இதன் விலை தற்போது அறிவிக்கவில்லை. சமீபத்திய ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள், ஸ்மார்ட் கேமரா, மொழிபெயர்ப்பு ஆதரவோடு இந்த ஸ்மார்ட்போன் இருக்கும். இது முதல்முறை ஆன்லைனுக்கு செல்லும் பயனர்களுக்கு என வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகின் இரண்டாவது பெரிய மொபைல் தரவு

உலகின் இரண்டாவது பெரிய மொபைல் தரவு

ரிலையன்ஸ் ஜியோ உலகின் இரண்டாவது பெரிய மொபைல் தரவு கேரியராக மாறியுள்ளது என்பதை நிறுவனம் வெளிப்படுத்தியது. கடந்த ஆண்டில் மட்டும் தரவு நுகர்வு 45% வளர்ச்சியாகும். மேலும் பயனர்கள் ஒவ்வொரு மாதமும் 630 கோடி ஜிபிக்களை உட்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரலையில் பார்க்கும் வழிமுறைகள்

நேரலையில் பார்க்கும் வழிமுறைகள்

ஆர்வமுள்ள ஜியோ ரசிகர்கள் பிற சேவைகள் மூலமாகவும் லைவ்ஸ்ட்ரீமை பார்க்கலாம். https://jiomeet.jio.com/rilagm. இந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம் ஜியோமீட் மூலவமாக லைவ் ஸ்ட்ரீமை பார்க்கலாம். உண்மையான நிகழ்வுக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே இது கிடைக்கும். மேலும் லைவ் ஸ்ட்ரீமை பார்க்க விரும்பினால் நிறுவனத்தின் ஃபிளேம் ஆஃப் ட்ரூத் யூடியூப் சேனல் மற்றும் ஜியோ சேனலை பின்தொடரலாம். நிறுவனத்தின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பதிப்புகள் வழியாகவும் நேரடி நிகழ்வுகளின் அறிவிப்புகளை அறிந்து கொள்ள முடியும்.

ஜியோ 5ஜி ஏற்றுமதி

ஜியோ 5ஜி ஏற்றுமதி

அதன்பின்பு இந்திய சந்தையில் 5ஜி திறன் நிரூபிக்கப்பட்ட பின்னர், சர்வதேச அளவில் இருக்கும் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் ஜியோ 5ஜி ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறியிருந்தார். இதனால் இன்று நடைபெறும் இந்த வருடாந்திர கூட்டம் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் ஜியோ-கூகுள் நிறுவனங்கள் இணைந்து அறிமுகம் செய்யும் 5ஜி போன் மாடல் ரூ.5000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக 2ஜி பீச்சர் போன் வாடிக்கையாளர்கள் இந்த 5ஜி போன் மாடலை வாங்க அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
JioPhone Next Announced in Reliance AGM 2021: Most Affordable Smartphone with Interesting Features

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X