Home
News

Jio-வின் குளுகுளு ஆஃபர்.. மாதம் ரூ.198 விலை.. ஆண்ட்ராய்டு மொபைல்.. இதுலாம் அம்பானியால மட்டும் தான் முடியும்..

அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் (Reliance) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் அதன் ஜியோ (Jio) பயனர்களுக்கு ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன் படி, வெறும் ரூ.4000 விலை புள்ளியில் அட்டகாசமான ஜியோபோன் நெக்ஸ்ட் (JioPhone Next) வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஜியோ நிறுவனம் அதற்கு சொந்தமான ஜியோபோன் (JioPhone) வரிசையை கொண்டுள்ளது. இந்த வரிசையில், மிகவும் விலை மலிவான பியூச்சர் போன், மொபைல் போன் சாதனங்களை நிறுவனம் வழங்கி வந்தது. அந்த வரிசையில், ஜியோ வெளியிட்ட முதல் ஆண்ட்ராய்டு சாதனம் தான் ஜியோபோன் நெக்ஸ்ட் (JioPhone Next). ஜியோ நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து உருவாக்கிய சாதனம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Jio-வின் குளுகுளு ஆஃபர்.. மாதம் ரூ.198 விலை.. ஆண்ட்ராய்டு மொபைல்..

ஜியோபோன் நெக்ஸ்ட் (JioPhone Next):

மலிவு விலையில் இந்திய மக்கள் அனைவருக்கும் 4ஜி மற்றும் ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்க முடிவெடுத்த ஜியோ, இந்த போனை குறைந்த விலையில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் (JioPhone Next) ஸ்மார்ட்போன் சாதனம் இந்தியாவில் ரூ. 7,299 என்ற அசல் விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. இப்போது இந்த சாதனம் மீது ரிலையன்ஸ் நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

இந்த புதிய சலுகையுடன் JioPhone Next சாதனத்தின் மீது 44% நேரடி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ரூ. 3,200 விலை குறைந்து, இப்போது ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் வெறும் ரூ. 4099 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த சலுகை விலை ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) தளத்தில் மட்டுமே கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது. மற்ற தளங்களில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.5000 புள்ளியை நெருங்குகிறது.

இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்தை ரிலையன்ஸ் நிறுவனம் இப்போது ரூ.198 என்ற மாதாந்திர EMI கட்டணத்துடனும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 24 மாத கட்டணத்திற்கு பிறகு எந்தவித தொகையையும் வசூலிக்கப்படாது. மொத்தமாக ரூ.4000 கொடுத்தது ஸ்மார்ட்போன் வாங்க முடியாதவர்கள் மாதம் ரூ.198 வழங்கி இந்த போனை சொந்தமாக்கிக்கொள்ளலாம். இலவசமாக இந்தியா முழுக்க இந்த ஸ்மார்ட்போன் இப்போது ஷிப்பிங் செய்யப்படுகிறது.

Jio-வின் குளுகுளு ஆஃபர்.. மாதம் ரூ.198 விலை.. ஆண்ட்ராய்டு மொபைல்..

மாதம் ரூ. 198 விலை.. உடனே வாங்க பெஸ்ட் ஆண்ட்ராய்டு போன்..

இந்த போனை உடனே வாங்க வேண்டும் என்று நினைத்தால், உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஜியோ ஸ்டோர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளில் நேரடியாக வாங்கலாம். நேரடியாக கடைக்கு சென்று ஜியோபோன் நெக்ஸ்ட் வாங்குபவர்களுக்கு ரூ.198 EMI விருப்பம் கிடைக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி, இப்போது இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்தின் சிறப்பம்ச விபரங்களை பற்றி பார்க்கலாம்.

ஜியோபோன் நெக்ஸ்ட் சிறப்பம்சம் (JioPhone Next):
- 5.45" இன்ச் டிஸ்பிளே (display)
- 2ஜிபி ரேம் (RAM) + 32ஜிபி ஸ்டோரேஜ் (Storage)
- 13MP பரிமாறி கேமரா (Primary Camera)
- 8MP செல்பி கேமரா (Selfie Camera)
- 3500mAh பேட்டரி (Battery)
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3)
- ஆன்டி-பிங்கர்பிரிண்ட் கோட்டிங் (Anti-fingerprint Coating)
- குவால்காம் ஸ்னாப்டிராகன் QM-215 (Qualcomm Snapdragon QM-215 Processor)
- ஆண்ட்ராய்டு உடன் இயங்கும் பிரகதி ஓஎஸ் (Pragati OS)

ஜியோபோன் நெக்ஸ்ட் (JioPhone Next) ஸ்மார்ட்போன் ஜியோ சிம் உடன் மட்டுமே இயங்கும் என்பது கவனிக்கத்தக்கது. பல இந்திய மொழிகளை ஆதரிக்கும் ஒரே ஸ்மார்ட்போனாக இந்த JioPhone Next விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
JioPhone Next Android Smartphone With 2GB RAM 32GB Memory Now On 44 Percent Offer Monthly EMI Rs 198
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X