Home
News

ஜியோபோன் நெக்ஸ்ட் விலை இதுவாக இருக்கலாம்? உலகின் மிக மலிவான ஆண்ட்ராய்டு போன் இதுதான்.!

இந்தியாவில் இப்போது ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கான ஹாட்டான தலைப்பு என்றால் அது ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்யப்போகும் புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் பற்றியதாகத் தான் இருக்க முடியும். ஆம், முகேஷ் அம்பானியின் தலைமையில் இயங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது வெகு விரைவில் ஜியோபோன் நெக்ஸ்ட் என்ற புதிய ஆண்ட்ராய்டு மலிவு விலை ஸ்மார்ட்போன் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் பற்றிய சுவாரசிய தகவல் வெளியானது

ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் பற்றிய சுவாரசிய தகவல் வெளியானது

வரவிருக்கும் ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் நுழைவு நிலை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக ரிலையன்ஸ் ஜியோவால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆண்ட்ராய்டு சாதனத்தை உருவாக்க ஜியோ நிறுவனம், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து பணிபுரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கூகிள் நிறுவனத்துடன் கைகோர்த்து இந்த புதிய சமர்ட்போன் சாதனத்தை உருவாக்குவதாக ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.

கூகிள் கூட்டணியில் உருவாகும் புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

கூகிள் கூட்டணியில் உருவாகும் புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

கூகிள் கூட்டணியில் உருவாகும் இந்த ஆண்ட்ராய்டு போனிற்கு இந்தியாவில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பரில் விற்பனைக்கு வரும்படி திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கிய விவரக்குறிப்புகள் இணையத்தில் கசிந்துள்ளது.

ஜியோபோனில் இருந்து ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்திற்கு முன்னேற்றம்

ஜியோபோனில் இருந்து ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்திற்கு முன்னேற்றம்

இதனால், ஜியோபோன் நெக்ஸ்ட் வருகைக்காகக் காத்திருந்த ரசிகர்களின் ஆர்வம் இன்னும் அதிகமாகியுள்ளது.இந்த ஸ்மார்ட்போன் பற்றி முதலில் 44 வது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் (AGM) அறிமுகம் செய்யப்பட்டது. ஜியோ நிறுவனத்தில் இருந்து அறிமுகம் செய்யப்படும் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இதுவாகும். இதற்கு முன்பு ஜியோ நிறுவனம் ஜியோபோன் என்ற பிரிவின் கீழ் 3 பியூச்சர் போன் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

உலகளவில் மிகவும் மலிவான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இது தான்

உலகளவில் மிகவும் மலிவான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இது தான்

இந்த ஸ்மார்ட்போன் பற்றி முதலில் 44 வது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் (AGM) அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, ரிலையன்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி, இந்த புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனானது இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் மிகவும் மலிவான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்று அவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோஃபோன் நெக்ஸ்ட் இல் எதிர்பார்க்கப்படும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜியோஃபோன் நெக்ஸ்ட் இல் எதிர்பார்க்கப்படும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜியோஃபோன் நெக்ஸ்ட் ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய சாதனம் ஒரு ஒற்றை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் 720x1,440 பிக்சல்கள் கொண்ட HD+ டிஸ்ப்ளேவுடன் இயங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல், குவால்காம் QM215 SoC ஆல் இயக்கப்படுகிறது. இது குவால்காம் அட்ரினோ 308 GPU உடன் 64-பிட், குவாட் கோர் மொபைல் செயலி உடன் இணைக்கப்பட்டுள்ளது.

13 மெகாபிக்சல் கேமரா கூட உள்ளதா?

13 மெகாபிக்சல் கேமரா கூட உள்ளதா?

இது குறைந்த விலை சாதனங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, இதில் 13 மெகாபிக்சல் கேமரா மற்றும் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான கேமரா உடன் வருகிறது. இதில் ப்ளூடூத் v4.2, GPS, 1080p வரை வீடியோ பதிவு, LPDDR3 RAM மற்றும் eMMC 4.5 சேமிப்பகத்துடன் கூடிய உள்ளமைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் X5 LTE மோடம் உடன் வருகிறது. கூகுள் கேமரா கோவின் புதிய பதிப்பு தொலைப்பேசியில் Snapchat ஒருங்கிணைப்புடன் முன்பே நிறுவப்பட்டுள்ளது.

எப்போது அறிமுகம்? என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

எப்போது அறிமுகம்? என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வரும் செப்டம்பர் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யத் தயாராகும் ஜியாபோன் நெக்ஸ்டின் விலையைப் பொறுத்தவரை, சில கசிவுகள் வெளியாகியுள்ளது. வெளியான கசிவு படி இந்த சாதனம் $ 50 டாலர் விலைக் குறியீட்டை இலக்காகக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

இவ்வளவு கம்மியான விலையில் இந்தியாவில் ஆண்ட்ராய்டு போனா?

இவ்வளவு கம்மியான விலையில் இந்தியாவில் ஆண்ட்ராய்டு போனா?

இது இந்திய மதிப்பின் படி இந்த சாதனத்தை இந்தியாவில் வெறும் ரூ. 4,000 என்ற விலையில் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது. செப்டம்பர் 10 ஆம் தேதி விற்பனைக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் ஜியோ இன்னும் விலை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நமக்கு கிடைத்த தகவலின் படி, ஜியோபோன் நெக்ஸ்ட் ரூ.4000 விலைக்குள் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
JioPhone Next Android Phone Made With Google Collaboration Will Go On Sale In India From September : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X