ஜியோபோன் நெக்ஸ்ட்: முக்கிய தகவலை தெரிவித்த சுந்தர் பிச்சை.!

|

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் தீபாவளிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கூறியுள்ளார். குறிப்பாக இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் ஜியோபோன் நெக்ஸ்ட் பிரகதி OS இல் இயங்குகிறது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் மாற்றத்திற்கா

குறிப்பாக இந்தியாவில் டிஜிட்டல் மாற்றத்திற்கான அடித்தளமாக ஜியோபோன் நெக்ஸ்ட் பார்க்கப்படுகிறது என்று முதலீட்டாளர்களுக்கு சுந்தர் பிச்சை கூறியுள்ளார். அதேபோல் ஃபீச்சர் போன்களில் இருந்து ஸ்மார்ட்போன்களுக்கான மாற்றத்தை இது முன்னெடுத்துச் செல்லும் என்று கூறியுள்ளார். அதாவது ஃபீச்சர் போன்களில் இருந்து ஸ்மார்ட்போன்களுக்கு மாற விரும்பும் மக்களுக்கான தேவையை அறிந்து இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக சுந்தர் பிச்சை கூறியுள்ளார். கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அனைத்து அம்சங்களுடன் வெளிவரும் என்று சுந்தர் பிச்சை தகவல் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் மலிவு விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

கேமராவையே தூக்கி சாப்பிடும் போல: சோனி எக்ஸ்பீரிய ப்ரோ-ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்- அம்சங்கள் அள்ளுது!கேமராவையே தூக்கி சாப்பிடும் போல: சோனி எக்ஸ்பீரிய ப்ரோ-ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்- அம்சங்கள் அள்ளுது!

சமீபத்தில் ஜியோபோன் நெக்ஸ்ட் பற்றிய

மேலும் சமீபத்தில் ஜியோபோன் நெக்ஸ்ட் பற்றிய குறும்படம் வெளியானது. அதில் ஜியோ போனின் தயாரிப்பு எப்படி நடக்கிறது என்பதை காட்டுகிறது. அதேபோல் இந்த சாதனத்தின் மேலும் சில விவரங்களும் கிடைத்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் ஆண்ட்ராய்டு மூலம் இயங்கும்
பிரகதி ஓஎஸ் மற்றும் குவால்காம் ப்ராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏன் 5ஜி போன் வாங்குவது சிறந்தது இல்லை: காரணம் தெரிஞ்சு போன் வாங்குங்க மக்களே.!இந்தியாவில் ஏன் 5ஜி போன் வாங்குவது சிறந்தது இல்லை: காரணம் தெரிஞ்சு போன் வாங்குங்க மக்களே.!

து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு

மேலும் இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன். அதாவது ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது என்கிற விவரங்களையும் அந்த வீடியோவில் தெரிந்துகொள்ள முடிகிறது. அதேபோல் பிரகதி ஒஎஸ் ஆனது மொழிபெயர்பு உட்பட பல மேட் ஃபார் இந்தியா அம்சங்களை வழங்கும் எனத் தெரிகிறது.

வெறித்தனமான தள்ளுபடி- அமேசானில் ஸ்மார்ட்போன்களுக்கு 47% தள்ளபடி- பாதி விலையில் ஸ்மார்ட்போன் வாங்கலாம்வெறித்தனமான தள்ளுபடி- அமேசானில் ஸ்மார்ட்போன்களுக்கு 47% தள்ளபடி- பாதி விலையில் ஸ்மார்ட்போன் வாங்கலாம்

ஏற்கனவே கசிந்த தகவலின்படி,

ஆன்லைனில் ஏற்கனவே கசிந்த தகவலின்படி, ஜியோபோன் நெக்ஸ்ட் 5.5 இன்ச் டிஸ்ப்ளேவுடன் எச்டி ப்ளஸ் 1440 x 720-பிக்சல் தீர்மானத்துடன் வருகிறது. 320 டிபிஐ திரை அடர்த்தி மற்றும் 18:9 விகிதத்துடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக குவால்காம் 215 சிப்செட் இவற்றுள் இருக்கும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஸ்டைலஸ் ஆதரவு, கிளாசிக் லுக்- சரியான விலையில் லெனோவா டேப் கே10: 7500 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்!ஸ்டைலஸ் ஆதரவு, கிளாசிக் லுக்- சரியான விலையில் லெனோவா டேப் கே10: 7500 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்!

நெக்ஸ்ட் பின்புற பேனலில் 13 எம்பி

ஜியோபோன் நெக்ஸ்ட் பின்புற பேனலில் 13 எம்பி கேமரா இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பிகள் மற்றும் வீடியோகால் வசதிக்கு என 8 மெகாபிக்சல் சென்சார் இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2ஜிபி ரேம்/16ஜிபி மெமரி மற்றும் 3ஜிபி ரேம்/32ஜிபி மெமரி ஆரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

JioPhone நெக்ஸ்ட்டில் இப்படியொரு புதுமையான ஓஎஸ் இருக்குதா? நல்ல இருக்கே.! இது என்ன செய்யும் தெரியுமா?JioPhone நெக்ஸ்ட்டில் இப்படியொரு புதுமையான ஓஎஸ் இருக்குதா? நல்ல இருக்கே.! இது என்ன செய்யும் தெரியுமா?

அதேபோல் அதிகாரப்பூர்வ படங்களின்படி, இந்த ஸ்மார்ட்போனில் எளிதில் திறக்கக்கூடிய பேக் கேஸ் இருக்கும், எனவே இந்த சாதனம் மாற்றக்கூடிய பேட்டரியைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக 2500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்
என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன் ஸ்க்ரீன் மொழிபெயர்ப்பு, வாய்ஸ் அசிஸ்டண்ட், ஸ்னாப்சாட், சிறப்பான கேமரா மற்றும் பல்வேறு இதர அம்சங்களைகொண்டிருக்கிறது இந்த அட்டகாசமான ஜியோபோன் நெக்ஸ்ட்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jiophone Introduced for Deepavali: Sundar Pichai: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X