Home
News

Jioபோன் பயனர்களுக்கு அடித்தது லாட்டரி.. ரூ.26 முதல் டேட்டா திட்டம்.. 5 திட்டங்களில் எது சூப்பர்?

இன்றைய காலக்கட்டத்தில் பேங்க்கில் பேலன்ஸ் இல்லாவிட்டால் கூட இருந்துவிடலாம், ஆனால், நமது கைகளில் இருக்கும் போனில் டேட்டா பேலன்ஸ் (data balance) இல்லாமல் போய்விட்டால் உலகமே ஸ்தம்பித்தது போல ஆகிவிடும். இன்னும் சிலருக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் போய்விடும்.

என்ன தான் ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vi) அல்லது பிஎஸ்என்எல் (BSNL) போன்ற பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல மலிவு விலை திட்டத்தை வழங்கி வந்தாலும், பயனர்களை எப்போதும் குஷியடைய செய்யும் திட்டங்களை ஜியோ (Jio) மட்டுமே கொண்டுள்ளது. ஜியோ அதன் பயனர்களுக்கு பல திட்டங்களை வழங்கினாலும், மலிவு விலை திட்டங்களுக்கு தான் எப்போதும் மவுசு ஜாஸ்தியாக இருக்கிறது.

Jioபோன் பயனர்களுக்கு அடித்தது லாட்டரி.. ரூ.26 முதல் டேட்டா திட்டம்..

ஜியோ நிறுவனம் அதன் பயனர்களுக்கு என்ன தான் பல நன்மைகளை குறைந்த விலையில் வழங்கி வந்தாலும், நிறுவனம் ஜியோபோன் (JioPhone) பயனர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துகிறது என்பது அதன் திட்டங்களை பார்க்கையில் நமக்கு தெளிவாக தெரிகிறது. ஜியோ நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் ஜியோபோன் சீரிஸ் சாதனங்களுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட திட்டங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

ஜியோ நிறுவனம் அதன் ஜியோபோன் பயனர்களுக்காக 5 டேட்டா ஆட்-ஆன் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த திட்டங்கள் ரூ.26 முதல் துவங்கி ரூ.182 வரை செல்கிறது. ஜியோபோன் பயனர்களுக்கு இந்த டேட்டா திட்டங்கள் கூடுதல் டேட்டாவை பல்வேறு வேலிடிட்டி உடன் வழங்குகிறது. ஜியோ நிறுவனம் இப்போது ரூ. 26, ரூ. 62, ரூ. 86, ரூ. 122 மற்றும் ரூ. 182 போன்ற திட்டங்களை வழங்குகிறது.

1. ஜியோபோன் ரூ. 26 திட்டம் (JioPhone Rs 26 Data Add-On Plan):
ஜியோவின் ரூ.26 டேட்டா ஆட்-ஆன் வவுச்சர் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது. இது ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் கூடுதலாக வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் SMS நன்மை போன்ற நன்மைகள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

2. ஜியோவின் ரூ.62 திட்டம் (JioPhone Rs 62 Data Add-On Plan):
ஜியோவின் ரூ.62 டேட்டா ஆட்-ஆன் வவுச்சர் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது. இது ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு 6ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் கூடுதல் நன்மை என்று எதுவுமே கிடைக்காது.

3. ஜியோவின் ரூ.86 திட்டம் (JioPhone Rs 86 Data Add-On Plan):
இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு தினமும் 0.5ஜிபி டேட்டா அல்லது 500MB டேட்டாவை வழங்குகிறது. இது 28 நாள் செல்லுபடியுடன் மொத்தமாக 14ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

4. ஜியோவின் ரூ.122 திட்டம் (JioPhone Rs 122 Data Add-On Plan):
ஜியோபோன் பயனர்களுக்கு கிடைக்கும் இந்த ரூ.122 திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. இதுவும் 28 நாள் செல்லுபடியுடன் வருகிறது.

5. ஜியோவின் ரூ.182 திட்டம் (JioPhone Rs 182 Data Add-On Plan):
ஜியோவின் இந்த ரூ.182 திட்டம் உங்களுக்கு தினசரி 2ஐபி டேட்டா நன்மையை வழங்குகிறது. JioPhone வாடிக்கையாளர்கள் YouTube மற்றும் Facebook போன்ற பயன்பாடுகளை இதன் மூலம் தடையின்றி அணுகலாம். தாராளமான டேட்டாவை கம்மி விலையில் அனுபவிக்க விரும்புவோம் இந்த திட்டத்தை தேர்வு செய்யலாம்.

ஜியோ நிறுவனம் புதிதாக ஜியோபோன் ப்ரைமா 4ஜி (JioPhone Prima 4G) என்ற புதிய போனை JioPhone தொடரில் அறிமுகம் செய்துள்ளது. இது இப்போது இந்திய சந்தையில் ரூ.2599 என்ற விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த திட்டங்கள் அணைத்தும் ஜியோபோன் பயனர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதை நினைவில்கொள்ளவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
JioPhone Data Add On Vouchers Rs 26 Rs 62 Rs 86 Rs 122 and Rs 182 Benefits Explained
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X