Home
News

ஸ்னாப்டிராகன் 480 சிப்செட், 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் விரைவில் களமிறங்கும் ஜியோபோன் 5ஜி.!

ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலுக்கு பிறகு ஜியோ நிறுவனம் புதிய ஜியோபோன் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ஜியோபோன் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பற்றி சற்று விரவாகப் பார்ப்போம்.

ஜியோபோன் 5ஜி மாடல்

ஜியோபோன் 5ஜி மாடல் ஆனது ஸ்னாப்டிராகன் 480 5ஜி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும். அதேபோல் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 5ஜி மாடலில் 6.5-இன்

இந்த புதிய ஜியோபோன் 5ஜி மாடலில் 6.5-இன்ச் டிஸ்பிளே வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 1600×720 பிக்சல் தீர்மானம்,60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல் வெளிவரும்.

 5ஜி மாடலில் 4ஜிபி

குறிப்பாக இந்த ஜியோபோன் 5ஜி மாடலில் 4ஜிபி ரேம் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஜியோ நிறுவனம்.

ஜியோபோன் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்

ஜியோபோன் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஜியோபோன் 5ஜி மாடல்.

5000 எம்ஏஎச் பேட்டரி

அதேபோல் இந்த ஜியோபோன் 5ஜி மாடலில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி,கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

போல் இந்நிறுவனம் 5ஜி சோதனையை

அதேபோல்இந்நிறுவனம் 5ஜி சோதனையை மேற்கொண்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில்ஜியோ 5ஜி நெட்வொர்க் ஸ்பீட் டெஸ்ட் ஸ்கிரீன்ஷாட் வெளியாகியுள்ளது. அதில் பதிவிறக்க வேகம் மற்றும் பதிவேற்றவேகத்தை தெளிவாக தெரிந்துகொள்ள முடிகிறது. அதாவது வெளியாகியுள்ள ஸ்கிரீன்ஷாட்-இல் 420Mbps பதிவிறக்க வேகம்(download speed) மற்றும் 412Mbps பதிவேற்ற வேகத்தை(upload speed) பார்க்க முடிகிறது.

 இந்த 5ஜி பதிவிறக்க வேகம் 4ஜி

மேலும் இந்த 5ஜி பதிவிறக்க வேகம் 4ஜி நெட்வொர்க்கை விட 8 மடங்கு வேகமாகவும், பதிவேற்ற வேகம் 15 மடங்கு வேகமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாட்டில் உள்ள 1000 நகரங்களுக்கான 5ஜி நெட்வொர்க் கவரேஜ் திட்டத்தை நிறைவு செய்துள்ளதாக
ஜியோ நிறுவனம் சமீபத்தில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக பைபர் திறனை

குறிப்பாக பைபர் திறனை அதிகரித்து, அனைத்து இடங்களிலும் சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் தலைவர் கிரண் தாமஸ் கூறியது என்னவென்றால், ஜியோ நிறுவனம் 5ஜி திட்டத்தை 1000 நகரங்களில் நிறைவேற்றி உள்ளது. பின்பு 5ஜி இணைப்பின் வாயிலாக சுகாதாரம் மற்றும்
தொழிற்சாலை ஆட்டோமேஷன் ஆகியவற்றில் சோதனை முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறது. இதனுடன் முப்பரிமாண வரைபடம் குறித்த சோதனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு மிகவும் மேம்பட்ட தொழில்நுட்ப தேவைகள் அவசியமாக இருக்கின்றன என்று கூறியுள்ளார் இன்போகாம் தலைவர் கிரண் தாமஸ்.

More from GizBot

Best Mobiles in India

English summary
JioPhone 5G with Snapdragon 480 chipset launches soon: Full details.!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X