Home
News

மொத்த இந்தியாவும் எதிர்பார்க்கும் ஒரு 5ஜி போன்.. இந்த தேதிய குறிச்சு வச்சுக்கோங்க.. Jio அதிரடி..

ரிலையன்ஸ் ஜியோ(Reliance Jio) நிறுவனத்தின் 46ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் (Annual General Meeting) வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற உள்ளது. ஜியோவின் வருங்கால திட்டங்கள், புதிய சாதனங்கள் மற்றும் பல்வேறு அறிவிப்புகள் இந்த 46ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் வெளியாகும்.

மேலும் ஜியோவின் 46ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் ஆகஸ்ட் 28ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜியோவின் 5ஜி ஸ்மார்ட்போன் கூட ஜியோவின் 46ஆவது ஆண்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஜியோபோன் 5ஜி மாடல் ஆனது கம்மி விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மொத்த இந்தியாவும் எதிர்பார்க்கும் ஒரு 5ஜி போன்.. Jio அதிரடி.!

இந்நிலையில் ஜியோபோன் 5ஜி மாடலின் முக்கிய விவரங்கள் இணையதளத்தில் கசிந்துள்ளது. அதாவது LS1654QB5 என்ற மாடல் நம்பரைக் கொண்டுள்ளது ஜியோபோன் 5ஜி மாடல். மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ஜியோ போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

ஜியோபோன் 5ஜி மாடலின் பின்புறம் பிளாஸ்டிக் பேனல் உள்ளது. அதேபோல் இந்த போனின் பின்புறம் மையத்தில் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மற்ற ஆண்ட்ராய்டு போன்களை விட சற்று வித்தியாசமான வடிவமைப்புடன் இந்த போன் வெளிவரும் என்று தெரிகிறது. அதேபோல் இந்த போன் வாட்டர் டிராப் டிஸ்பிளேவுடன் இந்த போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த போன் குறைந்த எடை கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜியோபோன் 5ஜி ஆனது 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

அதேபோல் ஜியோபோன் 5ஜி மாடலின் பின்புற பேனலில் ஜியோ லோகோ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போனுக்கு என்3, என்5, என்28, என்40 மற்றும் என்78 போன்ற 5 க்கும் மேற்பட்ட 5ஜி பேண்ட் சப்போர்ட் கொடுக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் சிறந்த மென்பொருள் வசதியுடன் வெளிவரும்.

மொத்த இந்தியாவும் எதிர்பார்க்கும் ஒரு 5ஜி போன்.. Jio அதிரடி.!

அதாவது குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் (Qualcomm Snapdragon 480 Plus) சிப்செட் வசதியுடன் இந்த அசத்தலான ஜியோபோன் 5ஜி மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 (Android 12 OS) ஓஎஸ் மூலம் இந்த 5ஜி போன் இயங்கும். அதேபோல் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் இந்த ஜியோபோன் 5ஜி மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். 5ஜி, வைஃபை 802.11, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஜியோபோன் 5ஜி மாடல்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஜியோபோன் 5ஜி மாடல் இந்தியாவில் அறிமுகமாகும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஜியோபோன் 5ஜி மாடல் அறிமுகமாகும். பின்பு ஜியோபோன் 5ஜி ஆனது ரூ.8000 விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
JioPhone 5G will be launched at a low price: check launch date, Expected Specs And Features : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X