ஜியோ போன் 2: அதிரடி விற்பனை துவங்கியது.! விலை மற்றும் விபரக்குறிப்பு.!
குறைந்த விலையில்,அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் அனைத்து கட்டணங்களையும் உள்ளிட்டகி ஜியோ நிறுவனம் தற்போது ஜியோ போன் 2 மாடலை விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது.
குறைந்த விலையில்,அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் அனைத்து கட்டணங்களையும் உள்ளிட்டகி ஜியோ நிறுவனம் தற்போது ஜியோ போன் 2 மாடலை விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது.

ஜியோ போன் 2 விற்பனை
ஜியோ போன் வெற்றியைத் தொடர்ந்து தனது புதிய ஜியோ போன்2 ஐ சுதந்திர தினத்தன்று வெளியிடப்போவதாக அறிவித்திருந்தது ஜியோ நிறுவனம். அதில் திடீர் மாற்றத்தினால் விற்பனை நாள் தள்ளிவைக்கப்பட்டது. இன்று ஜியோ நிறுவனம் தனது ஜியோ போன் 2 ஐ விற்பனை செய்யுமென்று அறிவித்திருந்தது, அதன் படி இன்று 12 மணி முதல் ஜியோ போன் 2 இன் விற்பனை துவங்கியுள்ளது.

Jio.com & MyJio ஆப்
ஜியோ போன் 2 இன் அதிரடி விற்பனைத் துவங்கியுள்ளது உங்களுக்கான ஜியோ போன் ஐ Jio.com வலைத்தளம் மற்றும் MyJio ஆப் இல் வாங்கலாம். இந்த புதிய ஜியோ போன் 2 கிவெர்ட்டி கீபேட் சேவையுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

பேஸ்புக் & டிவிட்டர்
ஜியோ போன் 2ல் வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட அனைத்துச் செயலிகளையும் பயன்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது 4ஜி வசதி கொண்டது. இதில் கூகுள் மேப், யூடூயூப் மற்றும் வீடியோ காலிங் செய்யும் வசதி என்று நிறைய சேவைகளுடன்இந்த ஜியோ போன் 2 வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜியோ போன் 2 விபரக்குறிப்பு:
- 2.4 இஞ்ச் QVGA டிஸ்பிளே
- 2 மெகா பிக்சல் பின் கேமரா மற்றும் விஜிஏ முன் கேமரா
- டூயல் சிம் வசதி
- 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள் சேமிப்பு
- 128ஜிபி எக்ஸ்பெண்டபிள் சேமிப்பு
- வோல்ட்இ 4ஜி
- வைஃபை
- ப்ளூடூத்
- ஜிபிஎஸ்
- என்.எப்.சி
- எப் எம் வசதி
- 2000 எம்ஏஎச் பேட்டரி
விலை : ரூ.2,999


Click it and Unblock the Notifications








