மக்கள் இவற்றை நம்பி பணத்தை ஏமாற வேண்டாம்: ரிலையன்ஸ் விடுக்கும் எச்சரிக்கை..!
ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்து மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு சேவைகளை கொண்டுவந்த வண்ணம் உள்ளது என்றுதன்கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனத்தின் பல தயாரிப்புகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோமார்ட் சேவை ஆனது சமீபத்தில் துவங்கப்பட்டது, மேலும் துவங்கியது முதல் ஜியோமார்ட்பெயரை தழுவி பல்வேறு இணைய முகவரிகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் ஜியோமார்ட் பெயரில் பல்வேறு போலிதளங்கள் பயனர்களின் விவரங்கள், பணத்தை அபகரித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோமார்ட் பெயரை தழுவி செயல்படும் போலி வலைதளங்கள் பற்றிய எச்சரிக்கை தகவலை
வெளியிட்டு உள்ளது. மேலும் விற்பனையாளர்கள் அல்லது ஃப்ரான்சைஸ் முறையிலான வியாபாரத்தை ஜியோமார்ட் இதுவரை
அதிகாரப்பூர்வமாக துவங்கவில்லை என்று ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தனிபநரை ஃப்ரான்சைசியாக நியமிக்க எவ்வித கட்டணத்தையும் வசூலிப்பது இல்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஜியோமார்ட் பெயரில் செயல்படும் போலி வலைதளங்கள் பற்றி எச்சரிக்கை விடுத்தது மட்டுமின்றி சிலபோலி வலைதளங்களின் பெயர்களையும் ரிலையன்ஸ் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. அந்த போலி வலைதளங்களின் பட்டியலைப் பார்ப்போம்.

போலி வலைதளங்களின் பட்டியல்
- jiodealership.com
- jiomartfranchises.com
- jiomartshop.info
- jiomartreliance.com
- jiomartfranchiseonline.com
- jiomartsfranchises.online
- jiomart-franchise.com
- jiomartindia.in.net
- jiomartfranchise.co
- jiodealership.com

மேலும் போலி வலைதளங்களில் டிரேட்மார்க் தவறாக பயன்படுத்துவது அப்பட்டமான உண்மை, இந்த விவகாரத்தில் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்பு இந்த தகவலை ரிலையன்ஸ் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சில நேரங்களில் ஒரு போலி வலைத்தளத்திற்கும் உண்மையான வலைத்தளத்திற்கும் இடையில் வேறுபாடு காண்பது கடினம். ஆனால் நீங்கள் பார்வையிடும் தளத்தை எப்போதும் சரிபார்த்து மறுபரிசீலனை செய்வது நல்லது. குறிப்பாக பண பரிவர்த்தனை இருந்தால். நினைவில் கொள்ள வேண்டிய சில சுட்டிகள், வலைத்தளத்தின் URL ஐ சரிபார்க்கவும், நீங்கள் சரியான மேடையில் இருப்பதை உறுதிப்படுத்த லோகோவும். ஜியோமார்ட் போலி வலைத்தளங்களைப் பற்றி உங்களுக்கு இன்னும் கவலைகள் இருந்தால், நீங்கள் ரிலையன்ஸ் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் வலைத்தள / சமூக ஊடக கையாளுதல்களில் உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.


Click it and Unblock the Notifications