ப்ளே ஸ்டோரில் Jiomart: உடனே டவுன்லோட் செய்யலாம்- அட்டகாச தள்ளுபடிகள்!

|

ஜியோ மார்ட் செயலியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல் பயன்பாட்டுக்கான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ் ஆப் மூலம் சேவை

வாட்ஸ் ஆப் மூலம் சேவை

பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து 10 சதவீத பங்குகளை வாங்கியது, இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனமும் ஜியோவுடன் கூட்டு சேர்த்து, ஜியோவின் ஆன்லைன் ஜியோமார்ட் சேவையைத் துவங்குமென்று வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்படி ஜியோ தற்பொழுது வாட்ஸ்அப் மூலம் தனது ஜியோமார்ட் சேவையைத் துவங்கியுள்ளது.

5 சதவீதத்திற்கும் கீழ் விற்பனை

5 சதவீதத்திற்கும் கீழ் விற்பனை

ஜியோமார்ட் தளத்தில் பல பொருள்களும் எம் ஆர் பி விலையிலிருந்து 5 சதவீதத்திற்கும் கீழ் விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளது. இந்த ஆன்லைன் மளிகை விற்பனையை ஜியோ மார்ட் சில்லரை விற்பனை கடைகள் மூலம் தொடங்கியுள்ளது. இதன்மூலம் சில்லரை விற்பனையாளர்கள் தங்கள் சொந்த பிராண்டுகளை விற்பனை செய்யமுடியும் என தெரிவிக்கப்படுகிறது.

உலகின் முதல் AR வெளியீட்டு நிகழ்வில் OnePlus நோர்ட் ஜூலை 21 தேதி அறிமுகம்!உலகின் முதல் AR வெளியீட்டு நிகழ்வில் OnePlus நோர்ட் ஜூலை 21 தேதி அறிமுகம்!

வாட்ஸ் ஆப் மூலம் ஜியோமார்ட் சேவை

வாட்ஸ் ஆப் மூலம் ஜியோமார்ட் சேவை

வாட்ஸ் ஆப் மூலம் ஜியோமார்ட் சேவை இயக்கப்படுவதால் சுமார் 400 மில்லியன் பயனர்களைக் கொண்ட வாட்ஸ் ஆப்பின் தளம் ஜியோமார்ட்டின் வரம்பை அதிகரிக்க உதவும். முதற்கட்டமாக வாட்ஸ்அப் எண்ணைப் பயன்படுத்தி முன்பதிவுகளை நடத்தப்பட்டது. வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஹாய் என்று அனுப்பியதும் அதன் சேவை குறித்த விவரங்கள் வரும். அதோடு ஆர்டர் செய்வதற்கான இணைப்பும் வரும்.

200 க்கும் மேற்பட்ட நகரங்களில் ஜியோமார்ட் சேவைகள்

200 க்கும் மேற்பட்ட நகரங்களில் ஜியோமார்ட் சேவைகள்

ஜியோ மார்ட் செயலியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல் பயன்பாட்டுக்கான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​இந்தியாவில் 200 க்கும் மேற்பட்ட நகரங்களில் ஜியோமார்ட் சேவைகள் கிடைக்கின்றன, இதை ஆன்லைன் சேவை மூலம் கிரெடிட் டெபிட் கார்ட் யுபிஐ பயன்பாடுகளை பயன்படுத்தி ஆன்லைன் பேமெண்ட் செலுத்தி பொருட்களை வாங்கலாம்.

இந்தியா முழுவதும் சேவைகள்

இந்தியா முழுவதும் சேவைகள்

ஜியோமார்ட் சேவையானது ஆரம்பத்தில் ஜனவரி மாதம் மகாராஷ்டிராவில் குறிப்பிடப்பட்ட நகரங்களில் ஆரம்பம் செய்யப்பட்டது. தொடர்ந்து மே மாதத்துக்குள் இந்தியா முழுவதும் சேவைகள் விரிவுப்படுத்தப்பட்டது. இந்த சேவையானது வலைதளம் மற்றும் வாட்ஸ் ஆப் மூலமாக சேவை கிடைக்கின்றன.

ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள்

ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள்

ஜியோமார்ட் பயன்பாட்டை கூகிள் பிளே மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் வழியாக பதிவிறக்கம் செய்யலாம். அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டைப் போலவே, ஜியோமார்ட் பயனர்களும் கார்ட்டில் பல பொருட்களைச் சேர்த்து விருப்பமான கட்டண பயன்முறையைத் தேர்ந்தெடுத்து ஆர்டரை வாங்கலாம்.

ஜியோமார்ட் மளிகை பொருட்கள்

ஜியோமார்ட் மளிகை பொருட்கள்

​​ஜியோமார்ட் மளிகை பொருட்களை மட்டுமே வழங்கி வருகிறது. இருப்பினும் ரிலையன்ஸ் 2020 வருடாந்திரக் கூட்டத்தில் பேசிய அம்பானி, இந்த தளம் விரைவில் எலக்ட்ரானிக்ஸ், பேஷன், ஹெல்த்கேர் மற்றும் மருந்து தயாரிப்புகள் போன்ற விற்பனை மூலம் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
jiomart app now available for android and iOS

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X