ஜியோஜாயின் ஆப் மூலம் இலவச அன்லிமிடட் எச்டி கால்ஸ்.!
உங்கள் ரிலையன்ஸ் ஜியோ எண்ணிலிருந்து ஜியோஜாயின் ஆப் மூலம் இலவச மற்றும் வரம்பற்ற அழைப்புகள் அனுபவிக்க முடியும். அது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.
ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோஜாயின் ஆப் மூலம் நீங்கள் எதுவாக ஆப்ரேட்டர் உலகில் எந்த மொபைல் எண்ணுக்கும் வரம்பற்ற மற்றும் இலவச எச்டி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். அதை நிகழ்த்த இந்த ஆப் ஆனது ஜியோநெட் அல்லது 4ஜி மொபைல் தரவை பயன்படுத்திக் கொள்கிறது.
ஜியோஜாயின் ஆப் பயனர்கள் எந்த குரல் அழைப்பு அல்லது வீடியோ அழைப்பு பேக் சேவையை அணுக வேண்டிய அவசியமில்லை, ஆக்டிவ் இணைய இணைப்பு இருந்தால் மட்டுமே போதுமானது. இந்த பயன்பாட்டை 2ஜி, 3ஜி அல்லது 4ஜி நெட்வொர்க்குகள் ஆகிய அனைத்திற்குமே ஆதரவு அளிக்கிறது வோல்ட் ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன்கள்இருக்க வேண்டிய கட்டாயமில்லை.
அப்படியாக, ஜியோஜாயின் ஆப் மூலம் இலவசமாக மற்றும் வரம்பற்ற எச்டி அழைப்புகளை அனுபவிப்பது எப்படி..?

கட்டுப்பாடுகளும் இல்லாமல்
ஜியோஜாயின் ஆப் மூலம் நீங்கள் எச்டி தரம் கொண்ட குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை உங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி அனுபவிக்க முடிகிறது. மேலும், இது எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் உலகில் எந்த இடத்திலும் வேலை செய்யும். மேலும் நாட்டின் வேறு ஒரு மாநிலத்தில் வாழும் மக்களுக்கு அழைப்புகளை செய்ய எந்த ரோமிங் கட்டணம் செலுத்த தேவையில்லை.

மெசேஜ்
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இந்த ஜியோஜாயின் ஆப் ஆனது வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் போன்ற ஒரு ஆப் ஆகும். குரல் அல்லது வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவது போன்றே இந்த ஆப் மூலம் மெசேஜ்களையும் அனுப்ப முடியும்.

இண்டர்நெட் கனெக்ஷன்
இந்த பயன்பாட்டின் ஒரு பெரிய பிரச்சினை என்னவென்றால் இதை ஆஃப்லைனில் பயன்படுத்த முடியாது. அதாவது ஒரு ஆக்டிவ் இண்டர்நெட் கனெக்ஷன் இன்றி இதை அணுக இயலாது. மேலும், ஆக்டிவ் ஆக இருக்கும் இணைய இணைப்பு ஆனது ஜியோநெட் (JioNet) அல்லது ரிலையன்ஸ் 4ஜி ஒன்றாக இருக்க வேண்டும்.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிரச்சினை
இது மிக சமீபத்தில் தொடங்கப்பட்ட ஒரு பயன்பாடு ஆகும். நீங்கள் பிற குரல் அழைப்பு பயன்பாடுகளில் இருப்பது போன்ற மென்மையான செயல்திறனை அனுபவிக்க இயலாது. எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படும் மேம்படுத்தல்கள் மூலம் இந்த பிரச்சினை தீரும் என்று எதிர்பார்க்கலாம்.

பதிவிறக்கம்
நீங்கள் இலவசமாக மற்றும் வரம்பற்ற எச்டி அழைப்புகள் அனுபவிக்க செய்ய வேண்டிய அனைத்து ஒரு ரிலையன்ஸ் 4ஜி சிம் கார்டு பெற்று அதை செயல்படுத்திய பின்னர் உங்கள் தொலைபேசியில் ஜியோஜாயின் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து சேவையை அனுபவிக்க வேண்டியது தான்.

மேலும் படிக்க
ஜியோவை எதிர்கொள்ள ஏர்டெல் தடாலடி முடிவு,!


Click it and Unblock the Notifications