என்னங்க சொல்றீங்க.. ரூ.100-க்கு 90 நாட்கள்.. அம்பானி போட்ட போடு.. 100 மில்லியன் சந்தா.. JioHotstar-க்கு குஷி!
ஜியோ (Jio) கஸ்டமர்கள் மட்டுமல்லாமல், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஓடிடி ஆப்களின் சந்தாதாரர்களும் மூக்கில் விரல் வைக்கும்படி ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஆனது 100 மில்லியன் சந்தாதாரர்களை கடந்துள்ளது. ஐபிஎல் 2025 போட்டிகள் தொடங்கி இருப்பதால், நாளுக்கு நாள் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெறும் ரூ.100 செலவில் 90 நாட்களுக்கு சந்தா மட்டுமல்லாமல், கூடவே டேட்டாவையும் கொடுத்ததால், சந்தாதாரர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்தியாவில் பிரீமியம் ஓடிடி சந்தா மலிவான விலைக்கு கிடைக்கிறது என்றால் அது ஜியோஹாட்ஸ்டார் சந்தாவாகத்தான் இருக்க முடியும். ஏனென்றால், வெறும் ரூ.100 விலைக்கு கிடைக்கிறது. உண்மையில் இந்த சந்தாவின் ஆரம்ப விலை ரூ.149ஆக இருக்கிறது. இது டெலிகாம் ரீசார்ஜ் அல்லாமல் தனியாக சந்தா பெறுவதற்கான விலையாக இருக்கிறது.

அதுவே, ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய நிறுவனங்களின் கஸ்டமர்கள் டேட்டாவுடன் வழங்கப்படும் வவுச்சரை ரீசார்ஜ் செய்தால் ரூ.100 விலையில் அதே சந்தாவை பெற்று கொள்ளலாம். ஐபிஎல் 2025 (IPL) போட்டிகளை முன்னிட்டு இந்த விலையில் கிடைக்கின்றன.
ஆகவே, இந்த சந்தாவை பெறும் கஸ்டமர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்போது, 100 மில்லியன் சந்தாதாரர்களை கடந்துள்ளதாக ஜியோஹாட்ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. சொல்லப்போனால், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் ( Disney+ Hotstar) மற்றும் ஜியோ சினிமா (JioCinema) ஆகிய ஓடிடி ஆப்கள் கடந்த மாதம் ஒன்றாக இணைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து ஜியோஹாட்ஸ்டார் என்று பெயர் மாற்றப்பட்டது. 2022ஆம் ஆண்டு மே மாதம் வரையில் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் 50.1 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டிருந்தது. ஆனால், அடுத்த 3 ஆண்டுகளில் சமீபத்திய ஜியோசினிமா சந்தாதார்கள் உள்பட 50 மில்லியன் சந்தாதாரர்களை பெற்றுள்ளது. ஆகவே, அப்படியே டபுளாக சந்தாதாரர்கள் குவிந்துள்ளனர்.
ஐசிசி போட்டிகள், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மற்றும் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) போன்ற இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் விளையாட்டு போட்டிகளை ஜியோஹாட்ஸ்டார் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இதுபோக கேம் ஆப் த்ரோன்ஸ், ஹவுஸ் ஆஃப் தி டிராகன், லாஸ்ட் ஆஃப் அஸ், மார்வெல் சினிமாடிக் மூவிக்கள் மற்றும் சீரிஸ்கள் இதில் கிடைக்கின்றன.
ஜியோஹாட்ஸ்டார் திட்டங்கள் எப்படி? ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களின் ரீசார்ஜ் இல்லாமல், ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை நேரடியாக பெறவதற்கு மூன்று திட்டங்கள் இருக்கின்றன. ஆகவே, ரூ.149-க்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) மற்றும் ரூ.299-க்கு ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் (JioHotstar Super) சந்தா கிடைக்கிறது.
அதேபோல ரூ.499-க்கு ஜியோஹாட்ஸ்டார் பிரீமியம் (JioHotstar Premium) கிடைக்கிறது. இந்த திட்டங்களுக்கு 90 நாட்கள் சந்தா கிடைக்கும். இதில் 12 மாதங்கள் சந்தாவும் கிடைக்கிறது. அதற்கு ஏற்ப விலையில் மாற்றம் இருக்கும். அதுவே ஜியோவில் கிடைக்கும் ரூ.100 மதிப்பிலான டேட்டா + ஓடிடி திட்டத்தை ரீசார்ஜ் செய்யதால், 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கிடைக்கும்.
அதேபோல ஏர்டெல் நிறுவனத்திலும் 90 நாட்கள் சந்தா கொண்ட ஜியோஹாட்ஸ்டார் மொபைல் திட்டம் ரூ.100 டேட்டா திட்டத்தில் கிடைக்கிறது. வோடபோன் ஐடியாவில் ரூ.101 விலைக்கு 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தா வருகிறது. ஆகவே, ஐபிஎல் போட்டிகள் முடியும் வரையில் சந்தாதார்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








