JioHotstar-க்கு கும்பிடு.. திடீர் கட்டண உயர்வு.. இனி பயனர்கள் அவசியம் இதை தெரிஞ்சுக்கோங்க..
இந்தியா முழுவதும் அதிக மக்கள் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) செயலியை பயன்படுத்துகின்றனர். அதுவும் ஸ்மார்ட் டிவி, மொபைல் போன் என அனைத்து சாதனங்களிலும் ஜியோ ஹாட்ஸ்டார் மூலம் கிரிக்கெட், புதிய படங்கள் என அனைத்தும் பார்க்க முடிகிறது. எனவே தான் கடந்த சில ஆண்டுகளில் அதிக மக்கள் இந்த ஜியோஹாட்ஸ்டார்-ஐ பயன்படுத்தி வந்தனர்.
குறிப்பாக இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடைபெறும் சமயங்களில் பல கோடி மக்களின் போன்களில் இந்த ஜியோஹாட்ஸ்டார் செயலி தான் இருந்தது. இந்நிலையில் ஜியோஹாட்ஸ்டார் சந்தா கட்டணம் திடீரென உயர்ந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜனவரி 28 முதல் புதிய கட்டணம்
அதாவது அனைத்து பிரிவுகளிலும் புதிய கட்டணம் ஜனவரி 28-ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு கூறியது போல் டிவி, ஸ்மார்ட்போன் என பல்வேறு கருவிகளில் இந்த ஜியோஹாட்ஸ்டார் செயலியைப் பயன்படுத்துகின்றனர். ஆகவே மக்கள் இதனைப் பயன்படுத்தும் போக்கு மாறி இருக்கிறது அதற்குத் தகுந்தபடி தரமான சேவைகளை வழங்க வேண்டும் என்பதற்காகக் கட்டணங்களை உயர்த்துகிறோம் என ஜியோஹாட்ஸ்டார் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இனி மொபைல் போனில் ஜியோஹாட்ஸ்டார் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மாதம்தோறும் 79 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும். இதுவே காலாண்டு கட்டணம் 149 ரூபாய் என்றும், ஓராண்டுக்கான கட்டணம் 499 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மொபைல் போன் பயன்படுத்தும் மக்களுக்கு எந்த ஒரு விலை உயர்வும் இல்லை.
அதுவே சூப்பர் சப்ஸ்கிரிப்ஷன் பிரிவில் உள்ளவர்களுக்கு மாதாந்திர கட்டணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இதில் மாதாந்திர கட்டணம் ரூ.149-ஆக உள்ளது. மேலும் சூப்பர் சப்ஸ்கிரிப்ஷனிலேயே காலாண்டு கட்டணமாகச் செலுத்துபவர்களுக்கு 299 ரூபாய் இருந்த கட்டணம் 349 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவே ஒரு ஆண்டுக்கான கட்டணம் 899 ரூபாயிலிருந்து 1099 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அடுத்து பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் பிரிவில் மாத கட்டணம் 299 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் காலாண்டு கட்டணம் 200 ரூபாய் உயர்த்தப்பட்டு 699 ரூபாயாகவும் ஒரு ஆண்டுக்கான கட்டணம் 2199 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக பிரீமியம் மற்றும் சூப்பர் சப்ஸ்கிரிப்ஷனில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஹாலிவுட் கண்டெண்டுகள் இனி கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜியோ சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய ரூ.450 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளையும் இங்கே பார்க்கலாம்.

ஜியோவின் ரூ.450 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 450 Prepaid Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 36 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 72ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் 64 கேபிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட் பயன்படுத்தலாம்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.450 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், கூகுள் ஜெமினி ப்ரோ, ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud), ஜியோஹாட்ஸ்டார் சந்தா (JioHotstar Subscription), ஜியோஹோம் (JioHome)சந்தா ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








