ரூ.149-க்கு 3 மாதம் சந்தா.. ரீசார்ஜ் இல்ல.. JioHotstar-க்கு இதான் ரேட்.. IPL-க்கு வேற இல்ல.. எந்தெந்த திட்டம்?
இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 (IPL 2025) போட்டிகள் நாளை (மார்ச் 22) தொடங்குகின்றன. இதனால், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி சந்தா கொண்ட திட்டங்களை ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து வருகின்றனர். ஆனால், ஏற்கனவே ரீசார்ஜ் இருக்கிறது, ஜியோஹாட்ஸ்டார் சந்தா மட்டும் வேண்டும். அதில் என்னென்ன திட்டங்கள் இருக்கிறது என்றும் பல கஸ்டமர்கள் கேட்கின்றனர். இவர்களுக்கான விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோஹாட்ஸ்டார் சந்தாவானது, மொபைல், சூப்பர் மற்றும் பிரீமியம் ஆகிய மூன்று சலுகைகளில் கிடைக்கிறது. இதில் 3 மாதங்கள் அல்லது 1 வருடத்துக்கு என்று 2 விலையில் சந்தா கொடுக்கப்படுகிறது. அதாவது, மொபைல் சலுகையில் 3 மாதங்களுக்கு சந்தா வேண்டுமானால், ரூ.149 செலுத்த வேண்டும். 1 வருடத்துக்கு ரூ.499 செலுத்த வேண்டும்.

ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா (JioHotstar Mobile Subscription): இந்த மொபைல் சந்தாவில் விளம்பரங்கள் இருக்கும். 3 மாதங்களுக்கு ரூ.149 அல்லது 1 வருடத்துக்கு ரூ.499 செலுத்தி பெற்று கொள்ளலாம். ஒரு நேரத்தில் 1 டிவைஸில் மட்டுமே ஸ்ட்ரீமிங் கிடைக்கும். ஆகவே, மொபைலில் மட்டுமே ஓடிடி பார்க்கும் கஸ்டமர்கள் இதை பெற்று கொள்ளலாம்.
ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா (JioHotstar Super Subscription): இந்த சூப்பர் சந்தாவிலும் விளம்பரங்கள் காண்பிக்கப்படும். ஆனால், ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களில் ஸ்ட்ரீமிங் செய்து கொள்ளலாம். ஆகவே, மொபைல் மட்டுமல்லாமல், வெப் அல்லது டிவிகளிலும் பயன்படுத்தி கொள்ளலாம். 3 மாதங்களுக்கு ரூ.299 சந்தாவும், 1 வருடத்துக்கு ரூ.899 சந்தாவும் கட்ட வேண்டும்.
ஜியோஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா (JioHotstar Premium Subscription): இந்த பிரீமியம் சந்தாவை மொபைலில் பெற்று கொள்ள முடியாது. ஜியோ வெப்சைட்டில் மட்டுமே பெற முடியும். ஏனென்றால், இதில் அதிகப்படியான சலுகைகள் கிடைக்கின்றன. இந்த ப்ரீமியம் திட்டத்தில் மட்டுமே 3 மாதங்கள் மற்றும் 1 வருடம் மட்டுமல்லாமல் 1 மாதத்துக்கான சந்தாவும் கிடைக்கிறது.
ஆகவே, 1 மாதத்துக்கு சந்தாவை பெற ரூ.299 செலுத்த வேண்டும். 3 மாதங்களுக்கு ரூ.499 மற்றும் 1 வருடத்துக்கு ரூ.1,499 செலுத்த வேண்டும். இந்த பிரீமியம் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் ஸ்ட்ரீமிங் செய்து கொள்ள அனுமதி கிடைக்கும். இதில் மொபைல், லேப்டாப், டேப்லெட் மட்டுமல்லாமல், டிவியிலும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இது பிரீமியம் திட்டமாக இருப்பதால் விளம்பரங்கள் இருக்காது. ஆனால், லைவ் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளம்பரங்கள் இருக்கும். இப்போது ரெசொலூஷன் விவரங்களுக்கு வருவோம். இந்த ஜியோஹாட்ஸ்டார் சந்தாவில் விலைக்கு ஏற்ப ரெசொலூஷன் கொடுக்கப்படுகிறது. ஆகவே, மொபைல் சந்தாவில் 720p ரெசொலூஷன் கொடுக்கப்படுகிறது.
சூப்பர் சந்தாவில் 1080p ரெசொலூஷன் கிடைக்கிறது. ஆனால், பிரீமியம் சந்தாவில் 4K மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) ரெசொலூஷன் வருகிறது. இந்த திட்டங்கள் மொபைல் ரீசார்ஜ் இல்லாமல் கிடைக்கும் சந்தாவாக இருக்கின்றன. ஆனால், ஜியோ கஸ்டமர்களுக்கு மட்டும் வெறும் ரூ.100 செலவில் 3 மாதங்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது.
இது ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு கொடுக்கப்படுகிறது. அதாவது, டேட்டா வவுச்சரில் ஓடிடி சந்தாவும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ஜியோ வெப்சைட் அல்லது மொபைல் ஆப்பில் ரூ.100 விலைக்கு கிடைக்கும் டேட்டா + ஓடிடி திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் சந்தா கொடுக்கப்படும்.


Click it and Unblock the Notifications








