இதென்ன அம்பானிக்கு வந்த சத்திய சோதனை.. வெறும் ரூ.1 க்கு கிடைக்கும் JioHotstar Premium ஓடிடி சந்தா?
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது அதன் ஓடிடி (OTT) தளமான ஜியோ ஹாட்ஸ்டார் சேவையின் பிரீமியம் சந்தாவை (JioHotstar Premium Subscription) தள்ளுபடி விலையில் வழங்கி வருகிறது. டெலிகாம்டால்க் வலைத்தளத்தின்படி, ஜியோ நிறுவனம் இதை உறுதிப்படுத்தவில்லை.
மாறாக எக்ஸ் தளத்தில் @AnuQuester_108 என்கிற யூஸர்நேம் கொண்ட ஒருவர் பகிர்ந்துள்ள ஸ்கிரீன்ஷாட்டில், ஜியோஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவனது ஒரு சோதனை சலுகையாக வெறும் 1 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதுவொரு குறிப்பிட்ட கால / தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கான சலுகையாக இருக்கலாம். ஏனெனில் தனிப்பட்ட முறையில் இதை முயற்சி செய்து பார்க்கும் போது, இந்த சலுகை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் தெரியவில்லை.

ஒருவேளை இது ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தின் பிரீமியம் சந்தாவை ஒருபோதும் முயற்சிக்காதவர்களுக்காக ஒதுக்கப்பட்ட சலுகையாக இருக்கலாம். இந்த சலுகையின் கீழ், பயனர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் பிரீமியமின் 30 நாள் சந்தாவை வெறும் 1 ரூபாய்க்கு பெறுகிறார்கள். 30 நாட்கள் முடிந்த பிறகு, பயனர்கள் வழக்கமான கட்டணங்களை செலுத்த வேண்டும்.
நினைவூட்டும் வண்ணம் ஜியோ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா வழக்கமாக மூன்று மாதங்களுக்கு ரூ.499 மற்றும் ஒரு வருடத்திற்கு ரூ.1499 என்கிற கட்டணத்தின் கீழ் அணுக கிடைக்கிறது. சிலருக்கு வெறும் ரூ.1 க்கு கிடைப்பதன் மூலம், சில புதிய வாடிக்கையாளர்களை பிரீமியம் சந்தாவின் கீழ் சேர்வார்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஆனால் இதை ஜியோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதை மீண்டும் குறிப்பிட விரும்புகிறோம்.
ரிலையன்ஸ் ஜியோ தொடர்பான மற்ற முக்கிய அப்டேட்களை பொறுத்தவரை, இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு அதன் அட்வான்ஸ்டு ஏஐ டூல்களை (Advanced AI Tools) கிடைக்க செய்வதற்காக, கூகுள் நிறுவனமானது ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் உடன் கூட்டு சேர்ந்து உள்ளது. இதன்கீழ் ஜியோ அன்லிமிடெட் 5ஜி பிளான்களை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 18 மாதங்களுக்கான கூகுள் ஏஐ ப்ரோ திட்டம் (Google AI Pro plan) இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இலவசமாக கூகுள் ஏஐ ப்ரோ திட்டத்தில் லேட்டஸ்ட் ஜெமினி 2.5 ப்ரோ (Gemini 2.5 Pro Model) மாடலும் அடங்கும். முதலில் இந்த இலவச சலுகை ஆனது 18 முதல் 25 வயதுடைய ஜியோ பயனர்களுடன் தொடங்கும். பின்னர் நாடு முழுவதும் உள்ள அனைத்து தகுதியான ஜியோ வாடிக்கையாளர்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவடையும்.
கூகுளின் மிகவும் திறமையான ஏஐ ஆனது ஜியோ திட்டங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதன் விளைவாக - ஜியோ பயனர்கள் ஜெமினி ஆப்பின் (Gemini App) மூலம் கூகுளின் மிகவும் சக்திவாய்ந்த ஏஐ அம்சங்களில் சிலவற்றை நேரடியாக பயன்படுத்தலாம். முன்னரே குறிப்பிட்டபடி, சிக்கலான பகுத்தறிவு, டெக்ஸ்ட் உருவாக்கம் மற்றும் ஆக்கப்பூர்வமான பணிப்பாய்வுகளுக்காக வடிவமைக்கப்பட்ட கூகுளின் ஜெனரேட்டிவ் ஏஐ மாடலின் மிகவும் திறமையான வெர்ஷன் ஆன ஜெமினி 2.5 ப்ரோவையும் சந்தாதாரர்கள் பயன்படுத்த முடியும்.
சாட் மற்றும் ப்ரொடெக்டிவிட்டிக்கு அப்பால், உயர்தர இமேஜ்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட கூகுளின் இரண்டு கிரியேட்டிவ் ஏஐ மாடல்கள் ஆன நானோ பனானா (Nano Banana) மற்றும் வியோ 3.1 (Veo 3.1) ஆகியவற்றையும் கூட ஜியோ பயனர்கள் அணுகலாம். முன்னதாக கூகுள் சந்தாக்கள் மூலம் மட்டுமே கிடைத்த இந்த டூல்கள், இப்போது கூடுதல் கட்டணமின்றி ஜியோவின் 5ஜி திட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளன.
கடைசியாக இலவசமாக கிடைக்கும் கூகுள் ஏஐ ப்ரோ திட்டத்தில் கூகுள் ஏஐ-பவர்டு நோட்-டேக்கிங் மற்றும் ரிசர்ச் கம்பானியன் ஆன நோட்புக்எல்-எம்-க்கான (NotebookLM) விரிவாக்கப்பட்ட அணுகலும் கிடைக்கும். இது பயனர்கள் ஸ்டடி மெட்டீரியல்களை ஒழுங்கமைக்கவும், ஆவணங்களை ஆட்டோமெட்டிக் ஆக சம்மரைஸ் செய்யவும் உதவும்.


Click it and Unblock the Notifications








