Home
News

ரூ.149 க்கு கேபிள் TV கதையை முடிச்சு விட்ட அம்பானி.. JioHotstar அறிமுகம்.. பழைய Hotstar சந்தா என்னவாகும்?

முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது ஜியோ சினிமா (JioCinema) மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை (Disney Plus Hotstar) ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட புதிய ஸ்ட்ரீமிங் தளமான ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளத்தை அறிமுகம் செய்துள்ளது

ஜியோவின் இந்த புதிய இயங்குதளமானது, ஓடிடி (OTT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் 2 ஓவர்-தி-டாப் (Over-the-top) இயங்குதளங்களின் (ஜியோசினிமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்) முழு கன்டென்ட் லைப்ரரியையும் ஒன்றிணைக்கிறது. ஜியோவின் இந்த புதிய இயங்குதளம் ஒரு புதிய லோகோவையும் (New Logo) பெறுகிறது, இது சமச்சீரற்ற ஏழு புள்ளிகள் கொண்ட நட்சத்திரத்துடன் ஜியோஹாட்ஸ்டார் என்கிற வார்த்தையை உள்ளடக்குகிறது.

ரூ.149 க்கு JioHotstar அறிமுகம்.. பழைய Hotstar சந்தா என்னவாகும்?

மேலும் ஜியோஹாட்ஸ்டார் தளத்தின் கீழ் "வழக்கமான" நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் தவிர, பல்வேறு சர்வதேச ஸ்டுடியோக்கள் (International studios) மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களில் (Streaming platforms) இருக்கும் கன்டென்ட்களையும் அணுக முடியும். ஜியோஹாட்ஸ்டார் தளத்தின்கீழ் சுமார் 300,000 மணிநேர கன்டென்ட் (300000 hours of content) மற்றும் லைப் ஸ்போர்ட்ஸ் கவரேஜ் (Live sports coverage) அணுக கிடைக்கும் என்று ஜியோஸ்டார் கூறியுள்ளது.

ஜியோசினிமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய இரண்டு தளங்களிலும் உள்ள பயனர்களை இணைப்பதன் மூலம் ஜியோஹாட்ஸ்டார் இயங்குதளத்தின் மொத்த பயனர் எண்ணிக்கை 50 கோடிக்கும் மேல் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தாக்களுக்கு வரும்போது, ​​தற்போதுள்ள ஜியோசினிமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் சந்தாதாரர்கள் தானாகவே புதிய தளத்திற்கு மாற்றப்படுவார்கள்.

பழைய பயனர்கள் முதல் முறையாக லாக்-இன் (Log-in) செய்யும் போது தங்கள் ஜியோஹாட்ஸ்டாருக்கான சந்தாக்களை அமைக்க முடியும் என்று ஜியோஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒருவேளை நீங்கள் புத்திய சந்தாதாரர் ஆக இருந்தால் ரூ.149 முதல் தொடங்கும் திட்டங்கள் (Subscription Plan Starts From Rs 149) மூலம் புதிய ஜியோஹாட்ஸ்டார் சேவைக்குள் நுழையலாம்.

இப்போதைக்கு குறிப்பிட்ட சில கன்டென்ட்களை அணுகவும், பார்க்கவும் எந்த சந்தாவும் தேவை இல்லை. பயனர்களால் சில நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் அல்லது லைவ் ஸ்போர்ட்ஸ்களை இலவசமாக பார்க்க முடியும். இருப்பினும் இதில் ஏதேனும் மாற்றங்கள் அறிவிக்கப்படுமா, குறிப்பிட்ட சில கன்டென்ட்கள் அல்லது லைவ் ஸ்போர்ட்ஸ்களை பார்க்க சந்தா தேவைப்படும்படி மாற்றங்கள் செய்யப்படுமா என்பது குறித்து தெளிஉ இல்லை

ஜியோஹாட்ஸ்டார் தளமானது 10 இந்திய மொழிகளில் (10 Indian Languages) பரந்த அளவிலான கன்டென்ட்களை கொண்டுள்ளது. திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், அனிம், ஆவணப்படங்கள், நேரலையில் விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் பலவற்றை பார்வையாளர்கள் பார்க்க முடியும். இந்த தளம் சர்வதேச பிரீமியர்களையும் காண்பிக்கும் என்றும் ஜியோஸ்டார் நிறுவனம் கூறுகிறது

கூடுதலாக, ஜியோஹாட்ஸ்டார் டிஸ்னி (Disney) , என்பிசி யுனிவர்சல் பீகாக் (NBCUniversal Peacock), வார்னர் பிரதர்ஸ் (Warner Bros), டிஸ்கவரி எச்பிஓ (Discovery HBO) மற்றும் பாரமவுண்ட் (Paramount) ஆகியவற்றில் இருக்கும் கன்டென்ட்களையும் கொண்டிருக்கும். மேலும் இந்த பிளாட்ஃபார்ம் 'ஸ்பார்க்ஸ்' (Sparks) என அழைக்கப்படும் ஒரு பிளாக்ஷிப் முயற்சியையும் அறிமுகப்படுத்துகிறது. இது தனித்துவமான பார்மெட்கள் மூலம் "இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் படைப்பாளிகளை" வெளிச்சம் போட்டுக் காட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசுகையில், ஜியோஹாட்ஸ்டாருக்கு ஒரு சக்திவாய்ந்த நோக்கம் உள்ளது - அனைத்து இந்தியர்களுக்கும் பிரீமியம் பொழுதுபோக்குகளை, உண்மையிலேயே அணுகக்கூடியதாக மாற்ற வேண்டும். எல்லையற்ற சாத்தியக்கூறுகள் பற்றிய எங்கள் வாக்குறுதியானது, பொழுதுபோக்கை இனி ஒரு சிறப்புரிமை அல்ல, அனைவருக்கும் பகிரப்பட்ட அனுபவமாக இருப்பதை உறுதி செய்கிறது. ஏஐ அடிப்படையிலான பரிந்துரைகளை ஒருங்கிணைத்து, 19 மொழிகளில் ஸ்ட்ரீமிங்கை வழங்குவதன் மூலம், முன்னெப்போதும் இல்லாத வகையில் கன்டென்ட்டை தனிப்பயனாக்குகிறோம் என்று ஜியோஸ்டார் டிஜிட்டல் நிறுவனத்தின் சிஇஓ-வான கிரண் மணி கூறியுள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
JioHotstar Launched JioCinema Disney Plus Hotstar Combined What Existing and New Subscribers to do
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X