ஜெயிச்சா ரூ.2.5 லட்சம் பரிசு: ஜியோகேம்ஸ் க்ளாஷ் ராயல் போட்டி- பங்கேற்கும் வழிமுறைகள்!

|

ஜியோகேம்ஸ் க்ளாஷ் ராயல் போட்டி நவம்பர் 28 ஆம் தொடங்கப்படுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் வாடிக்கையாளர்களுக்கு "இந்தியா கா கேமிங் சாம்பியன்" என்ற பட்டமும் ரொக்க பரிசும் வழங்கப்படுகிறது.

ஜியோகேம்ஸ் க்ளாஷ் ராயல் போட்டி

ஜியோகேம்ஸ் க்ளாஷ் ராயல் போட்டி

டெவலப்பர் சூப்பர்செல்லுடன் இணைந்து ஜியோகேம்ஸ் க்ளாஷ் ராயல் போட்டி நடத்துகிறது. இந்த போட்டி 27 நாட்கள் நடக்கிறது. க்ளாஷ் ராயல் போட்டி என்பது இலவச மல்டிபிளேயர் விளையாட்டாகும். சூப்பர்செல்லின் பிரபலமான மொபைல் கேம்களில் இதுவும் ஒன்று. க்ளாஷ் ஆஃப் கிளான்ஸ் போன்றே இந்த விளையாட்டு இருக்கிறது.

இந்தியா கா கேமிங் சாம்பியன்

இந்தியா கா கேமிங் சாம்பியன்

க்ளாஷ் ராயல் போட்டியில் வெற்றி பெறும் வாடிக்கையாளர்களுக்கு "இந்தியா கா கேமிங் சாம்பியன்" என்ற பட்டமும், ரொக்க பரிசும் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி வாராந்திர பரிசுகளும் உண்டு.

முன்பதிவு இணையதளத்தில் தொடக்கம்

முன்பதிவு இணையதளத்தில் தொடக்கம்

ஜியோ கேம்ஸ் க்ளாஷ் ராயல் போட்டி நவம்பர் 28 முதல் டிசம்பர் 25 வரை நடக்கிறது. இந்த போட்டியில் இறுதிக்கட்டமானது 1 Vs 1 என்ற அடிப்படையில் மோதுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. முன்பதிவு விருப்பம் இணையதளத்தில் தொடங்கப்பட்டுவிட்டது.

Whatsapp ஓபன் செய்வதற்குள் மெசேஜ் டெலிட் பண்ணிட்டாங்களா?-மற்றவர் டெலிட் செய்த மெசேஜையும் படிக்கலாம்!

ரொக்கமாக ரூ.2.5 லட்சம் பரிசு

ரொக்கமாக ரூ.2.5 லட்சம் பரிசு

க்ளாஷ் ராயல் போட்டியில் வெற்றி பெறும் வாடிக்கையாளர்களுக்கு ரொக்கமாக ரூ.2.5 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த போட்டியானது நவம்பர் 28 முதல் டிசம்பர் 19 வரை நடக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.

முதல் சுற்று நவம்பர் 28 ஆம் தேதி

முதல் சுற்று நவம்பர் 28 ஆம் தேதி

க்ளாஷ் ராயல் போட்டி நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் சுற்று நவம்பர் 28 ஆம் தேதியும், இரண்டாவது சுற்று டிசம்பர் 23 ஆம் தேதியும், இறுதிப்போட்டி டிசம்பர் 25 ஆம் தேதியும் நடைபெறுகிறது. சுவாரஸ்யம் என்னவென்றால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி ஜியோ டிவியில் ஒளிபரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முற்றிலும் முன்பதிவு இலவசம்

முற்றிலும் முன்பதிவு இலவசம்

க்ளாஷ் ராயல் போட்டி நவம்பர் 28 ஆம் தேதி நடக்கிறது. இந்த பதிவு முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. அதோடு இந்த விளையாட்டு ஜியோ மற்றும் ஜியோ அல்லாத பயனர்களுக்கு கிடைக்கிறது. ஆஃப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோரில் க்ளாஷ் ராயல் விளையாட்டை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
JioGames Clash Royale Tournament Now Open to All Players Start From November28

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X