பைக், கார் வச்சிருந்தா அம்பானிக்கு கும்பிடு.. ரூ.2,499 க்கு முடிச்சு விட்டாரு.. 30 நாட்களுக்கு கெடு.. என்னது?
பைக், கார் வைத்திருக்கும் ஜியோ கஸ்டமர்களுக்கு 30 நாட்கள் பேக்கப் கொண்ட 10000mAh பேட்டரி, வாய்ஸ் மானிட்டரிங், ஜிபிஎஸ் டிராக்கர், மேக்னட்டிக் மவுண்ட் மற்றும் ஜியோஃபென்சிங் பீச்சர்களுடன் ஜியோஃபைண்ட் ப்ரோ (JioFind Pro) கிடைக்கிறது. இந்த 4ஜி டிராக்கரின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஜிபிஎஸ் டிராக்கராக இந்த ஜியோஃபைண்ட் ப்ரோ வேலை செய்கிறது. ஜியோ மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்டால் போதும், ஜிபிஎஸ் டிராக்கராக பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டியது கிடையாது. இதை வாங்கிய பிறகு 1 வருடத்துக்கு இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். பிறகு வருடத்துக்கு ரூ.599 செலுத்த வேண்டும்.

ஜியோஃபைண்ட் ப்ரோ டிராக்கர் 4ஜி வேகத்தில் ஜிபிஎஸ் டிராக்கிங் கொடுக்கும். 297 கிராம் மட்டுமே எடை வருவதால், பைக், கார், லக்கேஜ் மற்றும் டெலிவரி அனுப்பும் ஷிப்மெண்ட்களிலும் இதை வைத்து டிராக் செய்து கொள்ளலாம். டிராக்கிங் மட்டுமல்லாமல், வாய்ஸ் மானிட்டரிங் (Voice Monitoring), ஜியோஃபென்சிங் அலெர்ட்களையும் (Geofencing Alerts) கொடுக்கும்.
ஆகவே, இந்தியாவில் எங்கு சென்றாலும் டிராக் செய்து கண்டுபிடித்துவிடலாம். அதேபோல வாய்ஸ் மானிட்டரிங் மூலமாக ஜியோஃபைண்ட் ப்ரோ டிராக்கரை சுற்றி இருக்கும் ஆடியோக்களை சேமித்து கொள்ளலாம். ஜியோஃபென்சிங் வருவதால், குறிப்பிட்ட ஏரியாவில் இருந்து தூரமாக சென்றால், உடனடியாக ஸ்மார்ட்போனுக்கு அலெர்ட் கொடுக்கப்பட்டுவிடும்.
அதேபோல ஸ்பீடிங் லிமிட்டை தெரிந்து கொள்ளலாம். 30 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி பேட்டரி கொடுக்கிறது. லோவ் பேட்டரி அலெர்ட்களும் கொடுக்கப்படும். ஜியோதிங்க்ஸ் (JioThings) ஆப் வழியாக பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோ மொபைல் நம்பருடன் இணைத்து கொள்ளலாம். அந்த டேட்டாவை இந்த ஜியோஃபைண்ட் ப்ரோ டிராக்கருக்கும் பயன்படுத்தி கொள்ளலாம்.
ஜியோஃபைண்ட் ப்ரோ 4ஜி டிராக்கர் அம்சங்கள் (JioFind Pro 4G Tracker Specifications): இதில் ஜிபிஎஸ் டிராக்கிங் கிடைக்கும். 10000mAh பேட்டரி கொடுக்கப்படும். ஆகவே, 30 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். 15s லேட்டன்சி சப்போர்ட்டை இந்த ஜியோஃபைண்ட் ப்ரோ 4ஜி கொடுக்கிறது. டைப் ஏ டூ சி கேபிள் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கிறது. இதில் வாய்ஸ் மானிட்டரிங் சப்போர்ட் உள்ளது.
ஆனால், அதை சுற்றி இருக்கும் ஆடியோக்கள் மட்டுமே பதிவு செய்யப்படும். ஜியோஃபென்சிங் அலெர்ட்கள் வழியாக பயனரின் ஏரியாவை குறிப்பிட்டு வைத்து கொள்ளலாம். இந்த ஏரியாவை தாண்டி அந்த ஜியோஃபைண்ட் ப்ரோ 4ஜி டிராக்கர் கொண்டு செல்லப்பட்டால், உடனடியாக ஸ்மார்ட்போனுக்கு அலெர்ட் அனுப்பி வைக்கப்படும். அதேபோல ஓவர்ஸ்பீடிங் அலெர்ட் உள்ளது.
இந்த ஓவர்ஸ்பீடிங் அலெர்ட் (Overspeeding Alerts) வழியாக பைக், கார் அல்லது ஷிப்மெண்ட் ஆகியவற்றின் வேகத்தை ரியல் டைமில் தெரிந்த கொள்ளலாம். இந்த ஜியோஃபைண்ட் ப்ரோ 4ஜி டிராக்கரில் மேக்னட்டிக் மவுண்ட் (Magnetic Mount) கிடைக்கிறது. ஆகவே, இதை ஒரு இடத்தில் ஒட்டிக்கொள்ளும்படி பொருந்தலாம். இது ஜியோ பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
அதாவது, ஜியோ சிம் லாக்டு மாடலாக இந்த ஜியோஃபைண்ட் ப்ரோ 4ஜி டிராக்கர் இருக்கிறது. ஆகவே, மற்ற சிம் கார்டு கஸ்டமர்கள் இதை பயன்படுத்த முடியாது. இதற்காக பிரத்யேக திட்டங்கள் கிடையாது, ஸ்மார்ட்போனின் டேட்டா திட்டத்தை இதற்கும் பயன்படுத்தி கொள்ளலாம். இதன் விலை ரூ.2,499ஆக இருக்கிறது. முதல் வருடம் இலவசமாக பயன்படுத்தலாம்.
இரண்டாவது வருடத்தில் இருந்து ஆண்டுக்கு ரூ.599 செலுத்த வேண்டும். தேவைப்படும்போது இந்த சந்தா செலுத்தி பயன்படுத்தி கொள்ளலாம். அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஜியோதிங்க்ஸ் ஆப் வழியாக இதை கன்ட்ரோல் மற்றும் பயன்படுத்தி கொள்ளலாம். இது கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








