Home
News

Google Pay, PhonePe கதை முடிஞ்சது.. UPI, NEFT, IMPS, கடன் வசதி உடன் JioFinance App அறிமுகம்.. அம்பானி அதிரடி!

இந்தியாவில், பெரிய எண்ணிக்கையிலான பயனர் கூட்டத்தை கொண்டுள்ள கூகுள் பே, போன்பே போன்ற யுபிஐ சேவைகளுக்கு "வெடி வைக்கும் படியாக" ஜியோபைனான்ஸ் ஆப் (JioFinance App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வகையான நிதி தேவைகளுக்கான ஒரே தீர்வாக பார்க்கப்படும் இந்த ஆப் இன்று (அக்டோபர் 17 ஆம் தேதி) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் (Jio Financial Services Limited - JFSL) ஆல் உருவாக்கப்பட்ட ஆப் ஆகும்

தற்போது நாடு முழுவதும் உள்ள பயனர்களுக்கு அணுக கிடைக்கும் ஜியோ பைனான்ஸ் ஆப் ஆனது யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கும், மியூச்சுவல் பண்ட்களை கண்காணிப்பதற்கும் மற்றும் அதில் இன்வெஸ்ட் செய்வதற்கும், மற்றும் பில் பணம் செலுத்துவதற்கும் பயன்படும். குறிப்பிடத்தக்க வகையில், இது முதன்முதலில், கடந்த மே மாதம் பீட்டா வெர்ஷனின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜெஎப்எஸ்எல்-ன் கூற்றுப்படி 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், ஜியோ பைனான்ஸ் ஆப் சேவைகளை ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றனர்.

UPI, NEFT, IMPS, கடன் வசதி உடன் JioFinance ஆப் அறிமுகம்!

ஜியோ ஃபைனான்ஸ் ஆப்பின் அம்சங்கள்: ஜெஎப்எஸ்எல் கூற்றுப்படி, ஜியோ பைனான்ஸ் ஆப் ஆனது ஆண்ட்ராய்டு-க்கான கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஐஓஎஸ்-க்கான ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) வழியாக பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. மாற்றாக, மைஜியோ (MyJio) இயங்குதளம் மூலமாகவும் கூட ஜியோ பைனான்ஸ் ஆப்பை அணுகலாம்.

ஜியோ பைனான்ஸ் ஆப் மூலம், பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை இணைப்பதன் மூலமும், ஆஃப்லைன் வணிகர்களிடம் க்யூஆர் கோட்களை ஸ்கேன் செய்வதன் மூலமும் யுபிஐ வழியிலாக பணம் செலுத்தலாம். இத ஆப், ஆன்லைன் கட்டணங்களை செலுத்தவும் மற்றும் பணத்தை மற்ற பயனர்களுக்கு அனுப்பவும் உதவும்.

ஜியோ பைனான்ஸ் ஆப்பில் யுபிஐ இன்டர்நேஷனல் அம்சமும் உள்ளது. இது க்ராஸ் - பார்டர் பணபரிமாற்றத்தை அனுமதிக்கும். மேலும் இந்த ஆப்பின் கீழ் யுபிஐ ஐடிகளை அகற்றுவது, வங்கிக் கணக்குகளை மாற்றுவது போன்ற பல்வேறு செட்டிங்ஸ்-களையும் அணுகலாம்; அவைகளின் மூலம் இந்த ஆப்பை எளிமையாக நிர்வகிக்கலாம். சுவாரசியமாக ஜியோ பைனான்ஸ் ஆப்பில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனைக்கும் வெகுமதிகளும் (Rewards) வழங்கப்படும்.

எல்லாவற்றை விட முக்கியமான, வெறும் மூன்று படிகளில் ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்குகளை திறப்பதன் மூலம், ஜியோ பைனான்ஸ் ஆப் ஆனது வங்கி அனுபவத்தை இன்னும் எளிதாக்குகிறது. இந்த கணக்கை பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் என்இஎப்டி (NEFT) அல்லது ஐஎம்பிஎஸ் (IMPS) மூலம் நிதியை அனுப்பலாம் அல்லது பெறலாம்; கூடவே பிஸிக்கல் டெபிட் கார்டையும் பெறலாம்.

மேலும் ஜியோ ஃபைனான்ஸ் ஆப் ஆனது மற்ற கட்டணச் சேவை ஆப்களை போன்ற சில செயல்பாடுகளையும் கொண்டுள்ளது, அதாவது பில் பேமண்ட்கள் (Bill Payments), மொபைல், ஃபாஸ்டாக் (FASTag), டிடிஎச் (DTH) ரீசார்ஜ்கள் மற்றும் கிரெடிட் கார்டு பேமண்ட்களை செய்ய அனுமதிக்கும்

ஜியோ ஃபைனான்ஸ் ஆப்பின் கீழ் கிடைக்கும் லோன் ஆன்-சாட் அம்சத்தின் (Loan on-chat feature) மூலம், பயனர்கள் கடன்கள், பரஸ்பர நிதிகள் மற்றும் சொத்துக்கள் மற்றும் வீட்டுக் கடன்கள் உள்ளிட்ட கடன்களை பெறலாம் மற்றும் அவற்றை மாற்றவும் செய்யலாம். இதற்காக ஒரே நேரத்தில் முழுத் தொகைக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட தொகைக்கு வட்டி செலுத்த வேண்டும் என்று ஜெஎப்எஸ்எல் கூறுகிறது.

ஜியோ ஃபைனான்ஸ் ஆப் மூலம் வழங்கப்படும் கடன் வசதி அனைத்து சம்பளம் பெறும் மற்றும் எம்எஸ்எம்இ (MSME) வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். ஜியோ பைனான்ஸ் ஆப் வழியாக இன்சூரன்ஸ் வசதியையும் அணுக முடியும். இந்த ஆப்பின் கீழ் பயனர்கள் லைஃப், ஹெல்த், இருசக்கர வாகனம் மற்றும் மோட்டார் இன்சூரன்ஸ் திட்டங்களை சரிபார்த்து பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
JioFinance App Launched in India with UPI IMPS Mobile FASTag DTH Recharge Loan Facilities
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X