மலிவு விலையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்த ஜியோ.! முழுவிவரங்கள்.!

|

ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்த ஜியோ ஃபைபர் சேவையானது இந்தியாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்த்த நிலையில், சந்தைக்கு வந்ததும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க தவறிவிட்டது என்றுதான் கூறவேண்டும்.

பொதுமக்களின் கவனத்தை ஈரக்கவில்லை

பொதுமக்களின் கவனத்தை ஈரக்கவில்லை

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஜியோ ஃபைபர் திட்டங்களானது இன்னுமும் கூட பொதுமக்களின் கவனத்தைஈரக்கவில்லை என்பது ஆச்சரியம். எனவே மக்களின் கவத்தை ஈர்க்க ஜயோ நிறுவனம் மீண்டும் வியாபார தந்திரத்தைப்
பயன்படுத்த துவங்கிவிட்டது. அதன்படி இந்நிறுவனம் புதிய ஜயோ ஃபைபர் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஃபைபர் திட்டத்தின் விலை

ஃபைபர் திட்டத்தின் விலை

ஜயோ நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள ஃபைபர் திட்டத்தின் விலை ரூ.351-ஆகும். இந்த திட்டத்தில் என்னென்னநண்மைகள் உள்ளது மற்றும் விரவான தகவல்களைப் பற்றி பார்ப்போம்.

வேகத்தை விரும்பாத

உண்மையை சொல்லவேண்டும் என்றால் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.351- ஃபைபர் திட்டம் ஆனாது நிறையடேட்டா மற்றும் வேகத்தை விரும்பாத நுகர்வோர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு சந்தையில் தற்போதையவிலை நிர்ணய சூழ்நிலையில் ரூ.400-க்கு கீழ் கிடைக்கும் பிராட்பேண்ட் திட்டத்தினால் அப்படி என்ன நன்மைகளை கொடுக்க முடியும் என்கிற ஒரு நியாயமான யோசனை உங்களுக்கு இருப்பின் இந்த திட்டம் சுவராசியமான ஒரு தேர்வு என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

10எம்.பி.பி.எஸ்

10எம்.பி.பி.எஸ்

ரூ.351- ஃபைபர் திட்டத்தின நன்மைகள் பொறுத்தவரை பயனர்களுக்கு மாதத்திற்கு 50ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது, இந்த திட்டத்தின் இணைய வேகமானது 10எம்.பி.பி.எஸ் ஆகும். மேலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 50ஜிபி டேட்டா வரம்பு முடிந்ததும் இணைய வேகமானது 1எம்பிபிஎஸ் ஆக குறையும். பின்பு இந்த திட்டத்தில் சந்தாதாரர்கள் இலவச அழைப்பு நன்மையையும் பெறுவார்கள்.

வாட்ஸ்ஆப் பாதுகாப்பு குறித்து தணிக்கை செய்ய மத்திய அரசு நடவடிக்கை.!வாட்ஸ்ஆப் பாதுகாப்பு குறித்து தணிக்கை செய்ய மத்திய அரசு நடவடிக்கை.!

6மாதங்கள் அல்லது

இது தவிர இந்த திட்டத்தை பெறும் வாடிக்கையாளர்களுக்கு சில நன்மைகளும் உள்ளது,அதாவது இந்த திட்டத்தில்
காம்பிளிமென்ட்ரி டிவி வீடியோ காலிங் கிடைக்கும் என அறிவிப்பட்டுள்ளது. மேலும் சந்தாதாரர்கள் இந்த திட்டத்திற்கான 3மாதங்கள், 6மாதங்கள் அல்லது அரை வருடாந்திர சந்தா விருப்பத்தையும் தேர்வுசெய்ய முடியும், ஆனால் அதில் எந்த விதமான கூடுதல் நன்மையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பயனர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்

பயனர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்

பயனர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால்,இந்த திட்டம் அதன் வாடிக்கையாளர்களிடமிருந்து எந்தவிதமான
நிறுவல் கட்டணங்களையும் அல்லது ஒன் சார்ஜ் கட்டணத்தையும் வசூலிக்காது. மற்ற ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்கள் இணைப்பை பெறுவதற்கு ரூ.2500 என்கிற கட்டணம் செலுத்த வேண்டும், இந்த குறிப்பிட்ட தொகையானது திருப்பச் செலுத்தப்பாடது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

இருந்தபோதிலும் ரிலையன்ஸ் அறிமுகம் செய்துள்ள ரூ .351 எஃப்.டி.டி.எச் திட்டத்தில் அப்படி எதுவும் கிடையாது. வரிகளுடன் சேர்த்து இந்த திட்டம் ஜிஎஸ்டிக்கு பிறகு ரூ.441 என்கிற விலையை எட்டும், அவ்வளவுதான். மேலும் வரும் காலங்களில் அதிகமான சந்தாதாரர்களை பெறுவதற்கு இந்நிறுவனம் பல்வேறு மலிவு திட்டங்களை செயல்படுத்த தயார்நிலையில் உள்ளது.

Best Mobiles in India

English summary
JioFiber Rs. 351, Rs. 199 Prepaid Broadband Plans Launched : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X