ஜியோபைபர் : விலை நிர்ணயம் & சலுகைகள்.!

|

ஜியோ தனது புதிய வயர்லெஸ் ஜியோ 4ஜி சார்ந்த பணிகளில் இந்தியா முழுவதும் ஈடுபட்டு வருகிறது, ஒரு புதிய பிராட்பேண்ட் சேவையை தொங்கவுள்ளது என்பதில் இனி எந்தவிதமான இரகசிய காப்பும் தேவையில்லை. அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனத்தின் இந்த புதிய சேவைக்கு ஜியோபைபர் (JioFiber) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் இந்த சேவை அறிமுகமாகும் என்றும் நம்பப்பட்டு வந்த நிலைப்பாட்டில் இப்போது இந்த சேவை சார்ந்த திட்டங்கள் பற்றி சில பிரத்யேக தகவல்களைப் பெற்றுள்ளோம்.

4ஜி சேவை உருட்டப்பட்ட விதத்தில்

4ஜி சேவை உருட்டப்பட்ட விதத்தில்

ஜியோ 4ஜி சேவையின் நோக்கத்தை போலவே மலிவான மற்றும் வேகமாக இணைய இணைப்பு வழங்க வேண்டும், சந்தையில் மாற்றம் நிகழ்த்தி வாடிக்கையாளர்களை பெற வேண்டும் என்பது தான் ஜியோபைபர் சேவையின் பிரதான நோக்கமாகும். இந்த சேவை ஜியோ 4ஜி சேவை உருட்டப்பட்ட விதத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்று நம்பலாம்.

சென்னை

சென்னை

தேர்ந்தெடுக்கப்பட்ட ரிலையன்ஸ் நிறுவன ஊழியர்கள் மூலம் தற்போது ஜியோ பைபர் சேவை சோதனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தில்லி, மும்பை மற்றும் சென்னை ஆகிய மூன்று நகரங்களிலும் ஜியோ பைபர் சோதனைகள் நடக்கிறது.

100ஜிபி

100ஜிபி

ஜியோபைபர் சேவையின் சலுகைகளின் பகுதியாக, நுகர்வோர் 100எம்பிபிஎஸ் வேகத்தில் மாதம் ஒன்றுக்கு 100ஜிபி அளவிலான தரவை பெறுவர்.

வரம்பற்ற

வரம்பற்ற

இந்த தரவானது பயனர்களின் நுகர்வு முடிந்த பிறகு, அவர்களுக்கான வேகம் 1எம்பிபிஎஸ் -ஆக குறையும் ஆனால் இணைய சேவை அன்லிமிடெட் ஆக தொடரும். இந்த வழக்கில் ஜியோபைபர் ப்ரீவியூ ஆப்ர் என்ற பெயரின் கீழ் பயனர்களுக்கு 1எம்பிபிஎஸ் வேகத்திலான வரம்பற்ற தரவை வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

3 மாதங்கள் (90 நாட்கள்)

3 மாதங்கள் (90 நாட்கள்)

இந்த சேவையின் அதிகாரப்பூர்வமான வெளியீட்டுத் தேதி மர்மமாக இருக்கும்போதும் இதன் ஜியோபைபர் ப்ரீவியூ ஆப்ரின் கீழ் நுகர்வோர் 3 மாதங்கள் (90 நாட்கள்) முற்றிலும் இலவசமாக சேவையை பெறுவர் என்பது பெரும்பாலான வல்லுநர்களால் எதிர்பார்க்கப்படுகிறது

உகந்த பிணையம்

உகந்த பிணையம்

இந்த சேவையில் தரவோடு சேர்த்து நுகர்வோர் சேமிப்பு உட்பட பல்வேறு ஜியோ சேவைகளுக்காக 5ஜிபி க்ளவுட் ஸ்டோரேஜும் பெறுவார்கள். ஜியோபைபர் தயாரிப்பு சார்ந்த தகவல் பக்கத்தில் "இந்தியாவின் முதல் மற்றும் 100 சதவீத பைபர் வீடியோவிற்கு உகந்த பிணையம்" என்று இந்த சேவையை குறிப்பிட்டுள்ளதால் "பயனர்களுக்கு அதிவிரைவு வேக இணையத்தை" வழங்கும் என்பது உறுதி.

ஒரு முறை திருப்பி செலுத்தப்படக்கூடிய

ஒரு முறை திருப்பி செலுத்தப்படக்கூடிய

மேலும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாக இந்த பிராட்பேண்ட் சேவை வழங்கும் இலவச 90 நாட்கள் சேவையை பெற ஒரு முறை திருப்பி செலுத்தப்படக்கூடிய (one-time refundable installation) ரூ.4,500/- கட்டணம் செலுத்த வேண்டும்.

விரும்பவில்லை

விரும்பவில்லை

ஜியோபைபர் வழங்கும் இலவச ஊக்குவிப்பு ஆபர் முடிவடைந்தவுடன், ஒருவேளை நீங்கள் ஜியோபைபர் சேவையை தொடர விரும்பவில்லை என்றால் இந்த பணம் (ரூ.4,500/-) பயனர்களுக்கு திருப்பிச் செலுத்தப்படும்.

உள்ளரங்கு பாதுகாப்பு மற்றும் இணைப்பு

உள்ளரங்கு பாதுகாப்பு மற்றும் இணைப்பு

இந்த தொகுப்பு பகுதியாக, ஜியோபைபர் பயனர்கள் டூவல்-பேண்ட்வைஃபை ரவுட்டர்களையும் பெறுவர். இது பைபர் ஹோம் நுழைவாயில் மூலம் சிறந்த உள்ளரங்கு பாதுகாப்பு மற்றும் இணைப்பு ஆதரவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.

கேட்வே

கேட்வே

மேலும் பயனர்கள் தங்கள் வைஃபை தொலைநிலையை ஒரு க்ளவுட் இணைப்பைப் பயன்படுத்தி கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும் என்றும் நிறுவனம் கூறுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய சாதனம் பைபர் ஹோம் கேட்வேவுடன் இணைக்கப்படுவதை பயனர்கள் தங்கள் தொலைபேசியில் உள்ள ஒரு பயன்பாட்டு மூலம் அறிந்து கொள்ள முடியம்.

இலவச எண்

இலவச எண்

ஒருமுறை ஜியோபைபர் ப்ரீவியூ ஆபர் உருட்டப்பட்டதும் அது ஜியோ 4ஜி சேவை போல அனைத்து நகரங்களிலும் அறிமுகம் செய்யப்படாது. ஆர்வம் உள்ள மக்கள் குறிப்பிட்ட இலவச எண்ணை தொடர்பு கொள்வதின் மூலம் தங்கள் வீடுகளுக்கு ஜியோபைபர் இணைப்பு பெற முடியும் என்றும் வெளியான தகவல்கள் கூறுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
JioFiber Preview Offer to soon give users 100mbps internet connection for free. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X