ஜியோஃபைபர்: இலவச டிவி, இலவச டேட்டா, செட் டாப் பாக்ஸ், அடேங்கப்பா இவளோ சலுகையா?
உலகத்தின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ நிறுவனம் தனது ஜியோ ஃபைபர் சேவையை இந்தியாவில் இன்று அதிகாரப்பூர்வமாகவும், வணிகரீதியாகவும் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவிலுள்ள சுமார் 1600 நகரங்களில் ஜியோ ஃபைபர் சேவையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது.

ஜியோ ஃபைபர் திட்டத்தின் முக்கிய நோக்கம்
இந்த புதிய ஜியோ ஃபைபர் சேவையின் மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளையும் ஸ்மார்ட் ஹோம்களாக மாற்றுவதற்கு ஜியோ கடந்த மூன்று ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. இந்த ஜியோ ஃபைபர் திட்டத்தை கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து இந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னேறிய நாடுகளில் கூட இப்படி ஒரு வேகம் கிடையாது
இந்தியாவிலுள்ள டெலிகாம் நிறுவனங்கள், தங்களது பிராட்பேண்ட் சேவையின் கீழ் 25 mbps என்ற வேகத்தில் தான் சேவையை வழங்கி வருகிறது. அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் கூட அதிகபட்சமாக 90 mbps வேகத்தில் மட்டுமே பிராட்பேண்ட் சேவை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1 Gbps வரையிலான வேகம்
ஆனால் முதல் முறையாக இந்தியாவில், ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவை மட்டும் 100 mbps என்ற துவக்க வேகத்தில் பிராட்பேண்ட் சேவையை ஜியோ நிறுவனம் துவங்கி உள்ளது. குறிப்பாக இதன் அதிகபட்ச வேகம் 1 gbps என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னேறிய நாடுகளில் வழங்கப்படும் வேகத்தை வென்று,ஜியோ புதிய சாதனை படைத்துள்ளது.

ஜியோ ஃபைபர் சேவையின் கீழ் கிடைக்கும் சேவைகள்
- அல்ட்ரா ஹை ஸ்பீடு பிராட்பேண்ட்
- இலவச வாய்ஸ் காலிங், கான்ஃபரன்சிங் மற்றும் இன்டர்நேஷனல் வாய்ஸ் காலிங் சேவை
- டிவி வீடியோ காலிங் மற்றும் டிவி கான்ஃபரன்ஸ் வீடியோ காலிங்
- பொழுதுபோக்கு OTT பயன்பாட்டு செயலிகள்
- கேமிங்
- ஹோம் நெட்வொர்க்கிங்
- டிவைஸ் பாதுகாப்பு
- VR எக்ஸ்பீரியன்ஸ்
- பிரீமியம் உள்ளடக்கத் தகவல்கள்
- ஜியோ ஃபைபர் மாதாந்திர திட்டம் ரூ. 699 முதல் துவங்கி ரூ. 8,491 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- குறைந்தபட்ச வேகமே 100 mbps என்பது குறிப்பிடத்தக்கது
- அதிகபட்ச வேகமாகப் பயனர்கள் 1 gbps வரையிலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- ஜியோ அறிவித்துள்ள அனைத்து மாதாந்திர திட்டங்களும், குறிப்பிட்ட சில சலுகைகளுடன் கூடுதல் பயன்களுடனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- ஜியோ ஹோம் கேட்வே
- ஜியோ 4k செட் டாப் பாக்ஸ்
- கோல்டன் திட்டத்திற்கு மேல் தேர்வு செய்யும் பயனர்களுக்கு இலவச டிவி
- OTT பயன்பாட்டு செயலிகள் சேவை
- வரம்பற்ற குரல் மற்றும் டேட்டா
- www.jio.com சென்று பதிவு செய்யலாம் அல்லது MyJio பயன்பாட்டுச் செயலி பயன்படுத்திக்கொள்ளலாம்.
- JioFiber சேவைகளுக்கான பதிவு தகவல்களைச் சரியாக என்டர் செய்யுங்கள்.
- உங்கள் பகுதியில் JioFiber நெட்வொர்க் கிடைத்தால், ஜியோ சேவை பிரதிநிதிகள் உங்களுடன் தொடர்பு கொள்வார்கள்.

ஜியோ ஃபைபர் மாதாந்திர திட்ட விபரங்கள்

நீண்டகால ஜியோ ஃபைபர் திட்ட விபரங்கள்
ஜியோ ஃபைபர் சேவையைப் பயனர்கள் 3 மாதம், 6 மாதம் மற்றும் 12 மாதம் என்ற மூன்று நீண்டகால சேவை திட்டங்களில் ஏதேனும் ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். நீண்டகாலத் திட்டங்கள் அதிக விலையாக இருக்கும் என்று உங்களுக்குத் தோன்றினால் கவலை வேண்டாம், ஜியோ வங்கிகளுடன் இணைந்து மாத தவணை திட்டத்திலும் இந்த நீண்டகால திட்டப் பயன்களைப் பயனர்களுக்கு எளிமையாகக் கிடைக்கும் படி செய்துள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

ஜியோ வெல்கம் ஆஃபர்
ஜியோ வெல்கம் ஆஃபர் திட்டத்தின் கீழ், அனைத்து ஜியோ பைபர் பயனர்களுக்கும் எல்லையில்லா பயன்பாட்டுச் சேவையை ஜியோ வழங்குகிறது. அத்துடன் கூடுதலாக

JIOFIBER சேவையை எப்படிப் பெறுவது?

ஜியோ ஃபைபர் ப்ரிவியூ கஸ்டமர்கள்
5 லட்சம் ஜியோ ஃபைபர் ப்ரிவியூ கஸ்டமர்களுக்கு, ஜியோ நிறுவனம் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக முகேஷ் அம்பானி தெரிவித்திருக்கிறார். ஜியோ ஃபைபர் ப்ரிவியூ கஸ்டமர்களை தங்கள் சேவை பிரதிநிதிகள் தொடர்பு கொண்டு உங்கள் சேவையை அப்டேட் செய்து தருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச செட் டாப் பாக்ஸ்
ஜியோ ஃபைபர் சேவைக்கான அனைத்து தகவல் தொடர்புகளும் MyJio app மூலம் நடைபெறும். அனைத்து ஜியோ ஃபைபர் பயனரும் இலவச செட் டாப் பாக்ஸை பெறுவார்கள் என்று ஜியோ அறிவித்துள்ளது.

மலிவான விலையில் கூடுதல் வேகம் & டேட்டா
ஜியோவின் சிறப்பு உலகத்தில் யாரும் வழங்க முடியாத மலிவான விலையில் டேட்டா சேவையை வழங்குவது தான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதேபோல் ஜியோ ஃபைபர் சேவையையும் யாரும் எதிர்பார்த்திராத விதத்தில் மிகக் குறைந்த மலிவான விலையில் அறிமுகம் செய்து, ஜியோ அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது.


Click it and Unblock the Notifications