ஜியோவை தொடர்ந்து இலவசத்தை அறிவித்த ஏர்டெல்

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது அடுத்தகட்ட திட்டமாக, முன்னோட்ட பயனர்களைக் கட்டண பயனர்களாக மாற்றுவதற்கான ஏற்பாட்டினை தொடங்கியுள்ளது. இந்த நோக்கத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது புதிய டேட்டா வவுச்சர்கள் வழங்கவுள்ளது. இந்த புதிய டேட்டா வவுச்சர்களின் கீழ் பயனர்களுக்கு 2000 ஜிபி வரை டேட்டா பயன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய டேட்டா வவுச்சர்கள்

புதிய டேட்டா வவுச்சர்கள்

ஜியோபைபேர் புதிய டேட்டா வவுச்சர்கள், டேட்டா டாப்-அப்பை போல் செயல்படும். அதாவது, மாதாந்திர டேட்டா வரம்பு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் தீர்ந்துவிட்டால், இந்த டேட்டா வவுச்சர்களை பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஜியோ நிறுவனம் தனது டெலிகாம் டேட்டா வவுச்சர்களை போல, இந்த புதிய ஜியோபைபேர் டேட்டா வவுச்சர்கள் ரூ.101 ரூபாயிலிருந்து ரூ.4001 வரை கிடைக்கிறது.

இலவசமாக செட்ஆப் பாக்ஸ் வழங்க திட்டம்

இலவசமாக செட்ஆப் பாக்ஸ் வழங்க திட்டம்

ஜியோ பைபர் அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே தற்போது முன்னோட்ட சலுகைகளை கட்டண திட்டங்களாக மாற்றத் தொடங்கியுள்ளது. ஜியோ பைபர் சேவையில் முன்னதாக இருந்த வாடிக்கையாளர்களுக்கு இலவச செட்ஆப் பாக்ஸ் வழங்கப்பட்டது. அதேபோல் புதிய வாடிக்கையாளர்களுக்கு இலவச செட்ஆப் பாக்ஸ் வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் டிசம்பர் 20 முதல் முழுவிநியோகம் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏர்டெல் அறிவித்த இலவச அறிவிப்பு

ஏர்டெல் அறிவித்த இலவச அறிவிப்பு

இந்த நிலையில், சமீபத்தில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் இணைப்பைப் பெறும் புதிய சந்தாதாரர்களுக்கு ரூ.1,750 தள்ளுபடி வழங்குவதாக அறிவித்திருந்தது. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸ் இந்தியாவில் ரூ .3,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், நிறுவனம் இப்போது டெல்லி பிராந்தியத்தில் வெறும் 2,249 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தது.

இணையத்தில் பெண்கள் அதிகம் தேடுபவை எவை தெரியுமா? புதிய சர்வே வெளியீடுஇணையத்தில் பெண்கள் அதிகம் தேடுபவை எவை தெரியுமா? புதிய சர்வே வெளியீடு

ஒரு மாத சந்தா தள்ளுபடி

ஒரு மாத சந்தா தள்ளுபடி

ஏர்டெல் புதிய பயனர்களுக்கு ரூ .1,000 தள்ளுபடி அல்லது ஒரு மாத சந்தா தள்ளுபடி வழங்க உள்ளது. உதாரணமாக, ஒரு வாடிக்கையாளர் ரூ.799 ஏர்டெல் அடிப்படை திட்டம் அல்லது ரூ. 999 ஏர்டெல் என்டர்டெயின்மென்ட் பிராட்பேண்ட் திட்டத்தை தேர்வு செய்தால், முதல் மாத வாடகை தள்ளுபடி செய்யப்படும். ஒரு வாடிக்கையாளர் ரூ .1,499 அல்லது ரூ 3,999 போன்ற ரூ .1,000 க்கு மேல் பிராட்பேண்ட் திட்டத்தை தேர்வு செய்தால், முதல் மாதத்தில் ஏர்டெல் நிறுவனத்தால் ரூ .1000 தள்ளுபடி வழங்கப்படும்.

Source: telecomtalk.info

Best Mobiles in India

English summary
JioFiber Effect: Airtel Xstream announce 1 month free

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X