Jio ஆட்டம் ஆரம்பம்! ரூ.198 விலையில் டேட்டாவுடன் STB, OTT நன்மையுமா தரீங்க? சூப்பர்லே.. ஆனா?
ஜியோ நிறுவனம் இப்போது ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் பேக்-அப் என்று சேவையை வெறும் ரூ.198 விலையில் அறிவித்துள்ளது. இந்த விலையில் அட்டகாச டேட்டா நன்மை, STB சேனல் நன்மை, 14 OTT வரை அணுகல் என்று ஏராள நன்மையை பேக் செய்துள்ளது.
ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் பேக்-அப் (JioFiber Broadband Back-Up Plan) சேவை மார்ச் 30, 2023 முதல் பயனர்களுக்கு வாங்க கிடைக்கும். பயனர்களின் முதன்மை இணைப்பு வேலை செய்யவில்லை அல்லது பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக செயலிழந்தால், இந்த பேக்-அப் பிராட்பேண்ட் இணைப்பை நீங்கள் பயன்படுத்தலாம். தடையில்லா சேவையை தொடர இது அனுமதிக்கிறது.

ஜியோஃபைபர் பேக்-அப் சேவையானது மாதத்திற்கு ரூ. 198 முதல் தொடங்கும் திட்டங்களுடன் வருகிறது. அதேபோல், சிங்கிள் கிளிக் இல் டேட்டா ஸ்பீட் மேம்படுத்தலை வழங்குகிறது. இந்த திட்டம் வெறும் 198 ரூபாயில் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாமா? ஜியோஃபைபர் பிராட்பேண்ட் பேக்-அப் திட்டம் மாதத்திற்கு 10 Mbps வேகத்தில் வரம்பற்ற டேட்டாவை தருகிறது.
உங்கள் முதன்மை பிராட்பேண்ட் இணைப்பு செயலிழந்தால், நீங்கள் JioFiber இணைப்பைப் பயன்படுத்த வேண்டும் என்றால், 1 அல்லது 2 அல்லது 7 நாட்களுக்கு ஒரே கிளிக்கில் தேவைப்படும் வேகத்தை மேம்படுத்தி, பயன்படுத்த இத்திட்டம் அனுமதிக்கிறது. 30 Mbps அல்லது 100 Mbps ஆக வேகத்தை நீங்கள் அதிகரிக்கலாம். 1 நாள் 30 Mbps வேகத்தை பெற ரூ.21 என்றும், 100 Mbps வேகத்தை பெற ரூ.32 என்றும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல், 2 மற்றும் 7 நாட்களுக்கு 30 Mbps வேகத்தை பெற நீங்கள் முறையே ரூ.31 மற்றும் ரூ.101 செலவிட வேண்டும். இறுதியாக 2 மற்றும் 7 நாட்களுக்கு 100 Mbps வேகத்தை பெற நீங்கள் முறையே ரூ.52 மற்றும் ரூ.152 செலவிட வேண்டும். இத்துடன் உங்களுக்கு STB (செட்-டாப் பாக்ஸ்) நன்மையையும் மேம்படுத்திக்கொள்ள இந்த திட்டம் அனுமதிக்கிறது.

மாதம் ரூ.100 செலவு செய்தால், பயனர்கள் இலவச STB + 400 லைவ் டிவி சேனல்கள் + 6 OTT பயன்பாடுகள் + YouTube ஆகியவற்றைப் பெறலாம். அதேபோல், இன்னும் கூடுதல் நன்மைகள் வேண்டுமென்றால், மாதம் ரூ.200 செலவு செய்து, பயனர்கள் இலவச STB + 550 லைவ் டிவி சேனல்கள் + 14 OTT ஆப்ஸ் + YouTube ஆகிய நன்மைகளை கூடுதலாகப் பெறலாம்.
இந்த திட்டம் குறைந்தபட்சம் ஐந்து மாதங்களுக்குக் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். அதைப் பெற, நீங்கள் ரூ.1490 செலுத்த வேண்டும். இது ஐந்து மாதங்களுக்கு ரூ.990 மற்றும் இன்ஸ்டால் கட்டணமாக ரூ. 500 வசூலிக்கப்படும். STB மேம்படுத்தலுக்குக் கூட, பயனர் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைப் பொறுத்து, ஐந்து மாதங்களுக்கு நீங்கள் ரூ.500 அல்லது ரூ.1000 செலுத்த வேண்டும். பில் மீது கூடுதல் ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
இந்த திட்டத்தை ஆக்டிவேட் செய்ய, பயனர்கள் 60008-60008 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுக்க வேண்டும் அல்லது ஜியோவின் இணையதளத்திற்குச் செல்லலாம் அல்லது அருகிலுள்ள ஜியோ சில்லறை விற்பனையாளரைப் பார்வையிட்டு பேக்-அப் இணைப்பை ரூ.99 விலைக்கு முன்பதிவு செய்யலாம். ரூ.198 இதன் அடிப்படை விலை என்றாலும், கூடுதலாக சில நூறு ரூபாய்களைச் செலவு செய்து பல நன்மைகளை அனுபவிப்பது சிறப்பாகத் தான் தெரிகிறது.


Click it and Unblock the Notifications








