ஒரு மாதத்திற்கு 10,000 ஜிபி டேட்டா: ஜியோ அதிரடி அறிவிப்பு., விலை என்ன தெரியுமா?

|

ஜியோ பைபர் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் சிறந்த திட்டங்களையும் மாதம் 10 ஆயிரம் ஜிபி வழங்கும் திட்டம் குறித்தும் பார்க்கலாம்.

வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர மற்றும் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம்

வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர மற்றும் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ஃபைபர் தனது வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர மற்றும் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களை பல்வேறு சலுகைகளோடு வழங்கி வருகிறது. தற்போது, ஜியோ நிறுவனம் சார்பில் வழங்கப்படும் ஆறு வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். மேலும் நிறுவனம் சார்பில் டிஸ்னி + ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், ஜீ 5, சன் என்எக்ஸ்டி, வூட் மற்றும் ஜியோசினிமா போன்ற OTT இயங்குதளுத்துக்கான சந்தாக்களையும் நிறுவனம் வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் ஆண்டு திட்டங்கள்

ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் ஆண்டு திட்டங்கள்

ஜியோ பைபரின் முதல் திட்டம் 200 ஜிபி + 50 ஜிபியுடன் 100 எம்.பி.பி.எஸ் வேகத்தோடு வழங்குகிறது. இது ஜியோ சினிமாவுடன் இலவச அழைப்பு, ஜியோ சாவனுக்கான சந்தா ஆகியவற்றையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் விலை ரூ. 8,388 ஆகும். அதோடு இந்த திட்டம் 360 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டம் பிரோன்ஜ் திட்டம் என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது வரம்பற்ற குரல் அழைப்பை வழங்குகிறது.

பூமி சந்திக்க போகும் அடுத்த பேரிடர் இதுவாக இருக்க கூடும் - காரணம் யார் தெரியுமா?பூமி சந்திக்க போகும் அடுத்த பேரிடர் இதுவாக இருக்க கூடும் - காரணம் யார் தெரியுமா?

இரண்டாவது திட்டத்திற்கு சில்வர் பிளான்

இரண்டாவது திட்டத்திற்கு சில்வர் பிளான்

அந்த பட்டியலில் உள்ள இரண்டாவது திட்டத்திற்கு சில்வர் பிளான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 100 எம்பிபிஎஸ் வேகத்தையும், மாதத்திற்கு 400 ஜிபி + 200 ஜிபி தரவையும் வழங்குகிறது. எல்லா நெட்வொர்க்குகளுக்கும் இலவச அழைப்புகளும் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.10,188 ஆகும். இந்த திட்டம் 360 நாட்களுக்கு கிடைக்கிறது.

அடுத்ததாக கோல்டு திட்டம்

அடுத்ததாக கோல்டு திட்டம்

அடுத்ததாக கோல்டு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 250 எம்.பி.பி.எஸ் வேகத்திலான டேட்டாகக்களை வழங்குகிறது. இந்த திட்டமானது 1000 ப்ளஸ் 250 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதோடு 360 நாட்களுக்கு செல்லபடியாகும் இந்த திட்டத்தின் விலை ரூ.15,588 ஆகும். மேலும் இதே அளிவிலான டேட்டாக்கள் 720 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் வழங்கப்படுகிறது. அதன் விலை 31,176 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டயமண்ட் திட்டத்தில் வழங்கப்படும் சலுகைகள்

டயமண்ட் திட்டத்தில் வழங்கப்படும் சலுகைகள்

பின்னர், ஒரு டயமண்ட் திட்டமும் உள்ளது, இது 500 எம்.பி.பி.எஸ் வேகத்தோடு மாதத்திற்கு 2500 ஜிபி + 250 ஜிபி தரவையும் வழங்குகிறது. இந்த திட்டம் உங்களுக்கு 360 நாட்களுக்கு செல்லுபடியாகு் இதன் விலை ரூ. 29,988 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.1200 மதிப்பிலான இலவச டிவி வீடியோ வசதியையும் வழங்குகிறது .

ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிளாட்டினம்

ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிளாட்டினம்

ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிளாட்டினம் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் அதிவேக இணையம் வேண்டும் என்போருக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஒவ்வொரு மாதமும் 500 ஜிபி தரவுகளுடன் 1 ஜிபிபிஎஸ் வேகத்தை அனுப்புகிறது. கேமிங் சேவைகள், டிவி வீடியோ அழைப்பு, சாதன பாதுகாப்பு, வரம்பற்ற அழைப்பு மற்றும் இரட்டை தரவு சலுகைகளை ஜிஎஸ்டி இல்லாமல் ரூ.47,988-க்கு வழங்குகிறது.

ஏர்டெல் அறிவிப்பு: அடுத்த 2மாதத்திற்கு இந்த சேவை இலவசம்.!ஏர்டெல் அறிவிப்பு: அடுத்த 2மாதத்திற்கு இந்த சேவை இலவசம்.!

டைட்டானியம் திட்டம்

டைட்டானியம் திட்டம்

கடைசியாக, டைட்டானியம் திட்டம் இதன் விலை ஜிஎஸ்டி தவிர ரூ.101,988 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். ஒவ்வொரு மாதமும் 10,000 ஜிபி தரவுகளுடன் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் வழங்குகிறது. இது தவிர, இந்த திட்டம் டிவி வீடியோ அழைப்பு மற்றும் கேமிங் சேவைகளை வழங்குகிறது. மேலும், இந்த வருடாந்திர திட்டங்கள் ஆறு மாதங்களுக்கு கூடுதல் தரவுகளையும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
jiofiber announced 10,000 GB data per month: do you know the price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X