Jio அறிவித்த ரூ.1,500 கேஷ்பேக் சலுகை.. JioFi வாங்கினால் 50% மேல் லாபம்! நல்ல சான்ஸ நழுவவிடாதீங்க!

|

இந்தியாவின் நம்பர் ஒன் டெலிகாம் ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ (Jio) தனது வாடிக்கையாளர்களுக்கு இப்போது ஒரு நம்ப முடியாத கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. இந்த புதிய நம்ப முடியாத கேஷ் பேக் சலுகை, இப்போது ஜியோவின் ரீசார்ஜ் திட்டங்களின் மீது கிடைக்கப்போவதில்லை என்பதைக் கவனித்துக்கொள்ளுங்கள். அதற்குப் பதிலாக இந்த புதிய சலுகை உங்களுக்கு ஜியோஃபை (JioFi) சாதனத்தின் மூலம் கிடைக்கப்போகிறது. அதுவும், இந்த டிவைஸை நீங்கள் வாங்கும் போது ரூ.1,500 மதிப்பிலான கேஷ்பேக் நன்மை உங்களுக்கு முழுமையாகக் கிடைக்கிறது.

JioFi டிவைஸ் என்ன செய்யும்?

JioFi டிவைஸ் என்ன செய்யும்?

JioFi சாதனத்தின் பயன் பற்றித் தெரியாதவர்களுக்கு, இது ஒரு டேட்டா கனெக்ட்டிங் டிவைஸ் ஆகும். மிகவும் வெளிப்படையாகச் சொல்லப் போனால், இந்த டிவைஸ் இன்றைய சூழ்நிலையில் அதிகம் தேவைப்படும் ஒரு தயாரிப்பாக இல்லை என்பதே உண்மை. இருப்பினும், சிலருக்கு, ஒரே நெட்வொர்க்குடன் பல சாதனங்களை இணைக்க இது மிகவும் பயனுள்ள கருவியாக இருக்கிறது. குறிப்பாக, வெளியூர் பயணங்களில் செல்லும் போது, போது வைஃபை உடன் இணைக்க விருப்பமில்லாதவர்களுக்கு இது பெஸ்ட் டிவைசாகும்.

பல டிவைஸ்களை ஒரே நெட்வொர்க்கில் இணைக்க செய்யும் JioFi

பல டிவைஸ்களை ஒரே நெட்வொர்க்கில் இணைக்க செய்யும் JioFi

ஜியோ நிறுவனத்தின் இந்த JioFi டிவைஸ் நீண்ட காலமாகச் சந்தையில் விற்பனையில் உள்ளது. ஆனால், ஜியோ தனது கவனத்தை மெதுவாகச் சந்தைப்படுத்துவதிலிருந்து மாற்றிய காரணத்தினால், இதைப் பற்றி அதிகம் நாம் கேட்க முடியாமல் போனது. இன்றைய சூழ்நிலையில் அவசர தேவைக்கு, நம்முடைய ஸ்மார்ட்போனில் இருந்து ஹாட்ஸ்பாட் சேவையை பயன்படுத்தி, சில சாதனங்களை அதனுடன் இணைத்துப் பயன்படுத்துகிறோம். அதேபோல், தான் இந்த டிவைஸும் செயல்படுகிறது.

போர்ட்டபிள் வைஃபை கருவியா இந்த JioFi டிவைஸ்?

போர்ட்டபிள் வைஃபை கருவியா இந்த JioFi டிவைஸ்?

சுருக்கமாகச் சொன்னால், இது ஜியோவின் 4ஜி நெட்வொர்க்கில் இயங்கும் வைஃபை ஹாட்ஸ்பாட் சாதனமாகும். இந்த ஜியோஃபை சாதனத்தில் ஜியோவின் சிம் கார்டை நாம் பொருத்திக்கொள்ளலாம். இந்த சிம் கார்டு எண்ணுடன் நீங்கள் செய்யும் டேட்டா ரீசார்ஜ் மூலம், தடையில்லா டேட்டா அனுபவத்தைப் பெறலாம். இது ஒரு போர்ட்டபிள் வைஃபை கருவியாக செயல்படுகிறது. டேட்டா சேவையைத் தொடர, உங்களுக்கு விருப்பமான டேட்டா பேக் திட்டங்களை நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

ரூ.899 விலையில் இப்படி ஒரு TWS இயர்பட்ஸா! Truke BTG Alpha-வை எப்போ வாங்கினால் இந்த விலை?ரூ.899 விலையில் இப்படி ஒரு TWS இயர்பட்ஸா! Truke BTG Alpha-வை எப்போ வாங்கினால் இந்த விலை?

ரூ.1,500 மதிப்பிலான கேஷ் பேக் நன்மை

ரூ.1,500 மதிப்பிலான கேஷ் பேக் நன்மை

ஜியோ நிறுவனம் இன்று அறிவித்துள்ள புதிய அறிவிப்பின் படி, இந்த JioFi சாதனத்தை நீங்கள் ரூ.2,800 என்ற விலையில் ஆன்லைன் மற்றும் ஜியோ ஸ்டோர் வழியாக வாங்கிட முடியும். ரூ.2,800 மதிப்புள்ள ஜியோஃபை சாதனத்தை வாங்கினால், உங்களுக்கு ரூ.1,500 மதிப்பிலான கேஷ் பேக் நன்மை கிடைக்கிறது என்று ஜியோ தெரிவித்துள்ளது. இந்த கேஷ் பேக் சலுகை, நீங்கள் டிவைஸை வாங்கும் தொகையில் இருந்து கிட்டத்தட்ட 50%-க்கும் அதிகமான கேஷ் பேக் நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

50%-க்கும் மேல் கிடைக்கும் கேஷ் பேக் சலுகை

50%-க்கும் மேல் கிடைக்கும் கேஷ் பேக் சலுகை

உண்மையைச் சொல்லப் போனால், இது ஒரு நல்ல ஒப்பந்தமாக இருக்கிறது. 50%-க்கும் மேலாக உங்களுக்கு கேஷ்பேக் சலுகை கிடைக்கிறது என்பதனால் இந்த டிவைஸை வாங்கி வைப்பது சிறப்பானது. இந்த சாதனத்தை வாங்க, வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள ஜியோ சில்லறை விற்பனைக் கடைகளுக்குச் செல்லலாம் என்று ஜியோ கூறியது. உங்கள் இருப்பிடத்திலிருந்து அருகிலுள்ள ஜியோ ஸ்டோர் எங்கே என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக அதைப் பார்க்கலாம்.

ரூ.499 முதல் புது பவர் பேங்க் டிவைஸ் வாங்கலாமா? உங்களுக்கான பெஸ்ட் Power Bank இதோ!ரூ.499 முதல் புது பவர் பேங்க் டிவைஸ் வாங்கலாமா? உங்களுக்கான பெஸ்ட் Power Bank இதோ!

அருகில் உள்ள ஜியோ ஸ்டோரை எப்படி கண்டுபிடிப்பது?

அருகில் உள்ள ஜியோ ஸ்டோரை எப்படி கண்டுபிடிப்பது?

அல்லது நீங்கள் ஒரு ஜியோ பயனர் என்றால், உங்களுடைய ஜியோ ஆப்ஸ் மூலமாகவும் அருகில் உள்ள ஜியோ ஸ்டோர் விபரங்களை நீங்கள் பார்வையிடலாம். அல்லது, இதற்கு மாற்றாக, நீங்கள் உங்களுடைய Google மேப்ஸ் மூலமாகவும் அருகில் உள்ள ஜியோ ஸ்டோர் விபரங்களைப் பார்வையிடலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது. சந்தையில் நிறைய 4G VoLTE சாதனங்கள் இருந்தபோது JioFi மிகவும் பிரபலமான தயாரிப்பாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை.

ஏன் ஸ்மார்ட்போன் ஹாட்ஸ்பாட்டை விட JioFi சிறந்தது?

ஏன் ஸ்மார்ட்போன் ஹாட்ஸ்பாட்டை விட JioFi சிறந்தது?

இப்போதிருக்கும் ஸ்மார்ட்போனிகளில் இருந்து நாம் நேரடியாக அதிவேக இணைய வைஃபை ஹாட்ஸ்பாட்களை உருவாக்க முடியும் என்பதனால் இந்த டிவைஸிற்கான மவுசு குறைந்துவிட்டது. இருப்பினும், இதற்கான தேவை இப்போதும் நம்மிடம் இருக்கிறது. உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து ஹாட்ஸ்பாட்டை நீங்கள் இயக்கம் போது, உங்களுடைய போனின் சார்ஜ் மிக வேகமாகக் குறைகிறது. இதை நம்மில் பெரும்பாலானோர் விரும்புவதில்லை. இந்த அசவுகரியங்களை நீக்க JioFi பெரிதும் உதவுகிறது.

Nothing வரிசையில் Nothing Lite Phone 1 என்ற 2வது போன் வருதா? லைட் வெர்ஷன் விலை என்னவா இருக்கும்?Nothing வரிசையில் Nothing Lite Phone 1 என்ற 2வது போன் வருதா? லைட் வெர்ஷன் விலை என்னவா இருக்கும்?

சார்ஜிங் பிரச்சனையில் இருந்து விடுபட JioFi உதவுகிறது

சார்ஜிங் பிரச்சனையில் இருந்து விடுபட JioFi உதவுகிறது

JioFi ஒரு அழகான சிறிய சாதனமாக உங்கள் பேன்ட்டின் பாக்கெட் அல்லது பையில் எளிதாகப் பொருத்தக் கூடிய விதத்தில் வருகிறது. மேலும், இது மிகவும் பாதுகாப்பான தயாரிப்பாகவும் கருதப்படுகிறது. ஸ்மார்ட்போனின் சார்ஜ் பற்றிக் கவலைப்படும் நபர்களின் கவனத்திற்கு, JioFi டிவைஸ் பேட்டரி மூலம் இயங்குகிறது. அதாவது அதைப் பயன்படுத்த நீங்கள் சார்ஜ் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த கேஷ் பேக் சலுகை எவ்வளவு நாள் நீடிக்கும்?

இந்த கேஷ் பேக் சலுகை எவ்வளவு நாள் நீடிக்கும்?

மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதே போன்ற டிவைஸ்களை வழங்குகின்றது. ஆனால், ஜியோஃபை தான் சிறந்த விருப்பங்களில் ஒன்றாக இருக்கிறது. ஏனெனில், இது ரிலையன்ஸ் ஜியோவின் பரவலாகக் கிடைக்கும் 4ஜி நெட்வொர்க்குடன் வேகமாக இணைக்கப்படுகிறது. லேக் இல்லாத டேட்டா பயன்பாட்டை உங்களுக்கு இது வழங்குகிறது. இந்த சாதனத்தை வாங்க மிகச் சரியான நேரம் இது தான் என்பதை மறக்காதீர்கள். ஜியோவின் இந்த கேஷ் பேக் சலுகை எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது தெரியவில்லை.

Best Mobiles in India

English summary
JioFi Device Worth Rs 2800 Get a Rs 1500 Cashback On The Purchase Today

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X