Home
News

கண்கட்டி வித்தை காட்டுகிறதா Jio? கம்மி விலையில் வெளிவந்த VR ஹெட்செட்டால் அலைமோதும் மக்கள்!

ஜியோ (Jio) நிறுவனம் இந்தியாவிற்குள் குறைந்த விலையில் பல சேவைகளை மற்றும் தயாரிப்புகளை வழங்கி மக்களை குஷி அடைய செய்து வருகிறது. இந்த வரிசையில், நிறுவனம் இப்போது புதிதாக யாரும் எதிர்பார்த்திடாதா ஹை-டெக் கேட்ஜெட் ஒன்றை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது.

ஹை-டெக் கேட்ஜெட் என்றதும் உங்கள் மனதிற்குள் VR அல்லது அதிநவீன சில தொழில்நுட்பங்கள் வந்து சென்றிருக்க வாய்ப்புகள் உள்ளது. இப்படி உங்கள் மனதில் ஏதேனும் ஒரு விஷயம் கிராஸ் செய்திருந்தால், உண்மையிலேயே நீங்கள் கெட்டிக்காரர் தான். நீங்கள் கணித்தது சரி தான். ஜியோ நிறுவனம் அதன் போர்ட்போலியோவில் புதிதாக ஜியோ டிரைவ் விஆர் ஹெட்செட் (JioDrive VR Headset) சாதனம் என்ற சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

கண்கட்டி வித்தை காட்டுகிறதா Jio? VR ஹெட்செட்டால் அலைமோதும் மக்கள்!

ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் ஜியோ டிரைவ் விஆர் ஹெட்செட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஸ்மார்ட்போன் அடிப்படையிலான விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் சாதனமாகும். ஜியோவின் முதல் விஆர் ஹெட்செட் சாதனமும் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோசினிமா ஆப்ஸ் இல் டெலிகாஸ்ட் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் TATA IPL 2023 போட்டியை இனி இந்திய மக்கள் VR அனுபவத்துடன் கண்டுகளிக்க முடியுமாம்.

இந்த புதிய அனுபவத்தைப் பெற விரும்புபவர்களை இலக்காகக் கொண்டு இந்தச் சாதனம் உருவாக்கப்பட்டு, இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த JioDrive VR Headset சாதனத்தின் சிறப்பு என்ன? இதன் விலை என்ன? இது எங்கே வாங்க கிடைக்கும் என்பது போன்ற தகவல்களை இப்போது பார்க்கலாம். ஜியோ டிரைவ் விஆர் ஹெட்செட் சாதனத்தின் சிறப்பம்சம் பற்றி பேசுகையில், இது டீசெண்டான அம்சங்களை கொண்டுள்ளது.

இது பயனர்களுக்கு வீட்டிலேயே ஸ்டேடியம் போன்ற அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வழக்கமான விஆர் இணக்கமான சாதனத்துடன் இணைக்கப்பட்டால், பார்வையாளர்கள் 100 இன்ச் விர்ச்சுவல் டிஸ்பிளேவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண்பது போன்ற அனுபவத்தைப் பெற முடியும் என்று ரிலையன்ஸ் கூறியுள்ளது. ஜியோ டிரைவ் ஹெட்செட் 4.7 மற்றும் 6.7 இன்ச் டிஸ்பிளே அளவுகள் கொண்ட ஃபோன்களுடன் இணக்கமானது. இந்த டிஸ்பிளே போன்களில் சிறப்பாக செயல்படும்.

கண்கட்டி வித்தை காட்டுகிறதா Jio? VR ஹெட்செட்டால் அலைமோதும் மக்கள்!

JioDrive VR Headset சாதனத்தின் சிறந்த செயல்திறனுக்காக, உங்கள் போனில் கைரோஸ்கோப் மற்றும் ஆக்சிலோமீட்டர் போன்ற அம்சங்கள் இருப்பது சிறப்பானது. இந்த விஆர் ஹெட்செட் சாதனம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடன் செயல்பட கூடியது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 9 அல்லது அதற்கு மேல் உள்ள வெர்ஷன்களில் சிறப்பாக இயங்கும்.

ஐபோன்களை பொறுத்த வரையில், இந்த சாதனம் iOS 15 அல்லது அதற்கு மேல் இருக்கும் சாதனங்களில் மிகவும் சிறப்பாக இயங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஆர் கேமிங், எண்டர்டெயின்மெண்ட், கோச்சிங், மூவிஸ், சீரிஸ் போன்ற பிற VR அனுபவங்களுக்காகவும் நீங்கள் இந்த JioDrive VR Headset சாதனத்தை நீங்கள் பயன்படுத்தலாம். இதற்கென பிரத்தியேகமான ரிலையன்ஸ் ஜியோஇம்மர்ஸ் (JioImmerse) ஆப்ஸ் கூட அறிமுகப்படுத்தப்படுள்ளது.

இருப்பினும், பயனர்கள் அதை அணுக 4G, 5G அல்லது JioFiber இணைப்பு இருக்க வேண்டும். இந்த ஜியோ டிரைவ் விஆர் ஹெட்செட் வசதியான நீட்டிக்கப்பட்ட பயன்பாட்டு காலத்திற்கு சுவாசிக்கக்கூடிய பேஸ் குஷன் உடன் வருகிறது. இந்த விஆர் சாதனத்தை கண்ட்ரோல் செய்ய இத்துடன் சில பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது. கூர்மையான படத்திற்காக ஃபோகஸை சரிசெய்ய லென்ஸ்களுக்கான சரிசெய்தல் வீல்களும் இத்துடன் இடம்பெற்றுள்ளன.

JioDrive VR ஹெட்செட்டின் விலை ரூ. 1,299 ஆகும். இந்தியாவில் இப்போது குறைந்த விலையில் கிடைக்கும் புது VR ஹெட்செட் சாதனமாக இந்த JioDrive VR Headset இடம்பெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் JioMart இலிருந்து இதை வாங்கலாம். இது பிளாக் நிறத்தில் மட்டுமே வருகிறது.இது 3 மாத உத்தரவாதத்துடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
JioDrive VR Headset with Android and iOS support device launched in India at Rs 1299
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X