IPL போட்டிகள 360 டிகிரில பார்க்க வெறும் ரூ.1,299 போதும்.. மிரள வைக்கும் JioDive Virtual Reality headset
இந்த ஜியோடைவ் விர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் (JioDive Virtual Reality Headset) உங்க கிட்ட இருந்தா, ஐபிஎல் ஸ்டேடியம் உங்க வீடு தேடி வரும். சும்மா 360 டிகிரில, கிரவுண்டுல நின்னு மேட்ச் பார்க்கற எஸ்பிரியன்ஸ இந்த ஹெட்செட் உங்களுக்கு கொடுக்கும். அதுக்கு வெறும் ரூ.1,299 மட்டும் இருந்தா போதும்னு சொன்னா உங்களால நம்பு முடியுதா?
நீங்க ஐபிஎல் மேட்ச்ச வீட்டுல இருக்க டிவில பாக்குறதுக்கும், ஒரு மினி தியேட்டர் ஸ்கிரீன்ல பாக்குறத்துக்கும் இருக்குற வித்தியாசத்த இந்த விர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் உங்களுக்கு உணர்த்தும். அதுவும் மினி தியேட்டர்ல ஒரு பக்கம் மட்டும் தான் ஸ்கிரீன் இருக்கும். ஆனால், இந்த விர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்ட மாட்டிக்கிட்டா, நீங்க 360 டிகிரில திரும்பினாலும் ஸ்கிரீன் கண்ண விட்டு விலகாம அப்படியே இருக்கும்.

ஒரு 100 இன்ச் டிவி மூலம் வீடியோ பாத்த எப்படி உணர்வீங்களோ, அப்படிப்பட்ட அனுபவத்தை விர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் நமக்கு கொடுக்கும். இந்த விர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டின் தொடக்க விலையே ரூ.5,000 மேல இருக்கும். ஆனால், ஜியோ நிறுவனம் ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு ஜியோ மார்ட் மூலம் வெறும் ரூ.1,299 -க்கு விற்பனைக்கு ஜியோடைவ் ரியாலிட்ட ஹெட்செட்டை மாக்கெட்டுல களமிறங்கியிருக்கு.
இந்த ஹெட்செட்டா பயன்படுத்த உங்களிடம் 4.7 முதல் 6.7 இன்ச் டிஸ்பிளே அளவு கொண்ட ஆண்ட்ராய்டு அல்லது ஐஒஎஸ் ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும். ஜியோ இம்மெர்ஸ் (Jio Immerse) ஆப் மூலம் ரியாலிட்டி ஹெட்செட்டையும் உங்களது ஸ்மார்ட்போனையும் இணைத்துக் கொள்ளலாம்.
இந்த ஹெட்செட்டில் 2 லென்சுகள் பொருத்தப்பட்டிருக்கும், அதற்கு கீழே உங்களது ஸ்மார்ட்போனை பொருத்திக்கொள்ள இடம் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் போனை பொருத்திய பின்பு வீடியோக்களை பார்க்க தொடங்கலாம். 100 இன்ச் திரையில் வீடியோக்களை பார்க்கும் அனுபவத்தை இது கொடுக்கும்.
குறிப்பாக, ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதில் கூடுதல் சிறப்பு இருக்கிறது. நீங்கள் ஐபிஎல் போட்டிகளை பார்க்கும்போது, 360 கேமராவில் பதிவு செய்யப்படும் வீடியோவை, இது வேறுபடுத்தி உங்களுக்கு காண்பிக்கும். அப்போது, ஒரு காட்சியை இடது பக்கம் இருந்து பதிவு செய்யும் கேமராவின் வீடியோவையும், வலது புறம் இருந்து பதிவு செய்யும் கேமராவின் வீடியோவையும் உங்களால் பிரித்து பார்க்க முடியும். அதாவது 3டி வீடியோ அனுபவத்தை இந்த ஹெட்செட் வழங்கும். இதற்கு அதிவேக இன்டெர்நெட் வசதி இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த ஜியோடைவ் ஹெட்செட்டை எப்படி பயன்படுத்த வேண்டும்: நீங்கள் ஜியோடைவ் ஹெட்செட்டை ஆர்டர் செய்து வாங்கிவிட்டீர்கள் என்றால், அந்த பேக்கிங் பாக்ஸில் கியூஆர் (QR) கோடை ஸ்கேன் செய்ய வேண்டும். அப்போது ஜியோ இம்மெர்ஸ் ஆப் டவுன்லோட் பக்கத்துக்கு உங்களது பேஜ் போகும். அதன்படி டவுன்லோட் செய்து கொள்ளவும்.
அதன்பின் ஜியோடைவ் ஆப்பில் வாட்ச் டேப்பை கிளிக் செய்யவும். இப்போது ஐபிஎல் போட்டியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதையடுத்து உங்கள் போனை ஜியோடைவ் ஹெட்செட்டுக்குள் வைத்து மூடிக் கொள்ளவும். இறுதியாக அதை தலையில் மாட்டிக்கொண்டு 360 டிகிரியில் போட்டியை கண்டுகளிக்கவும்.


Click it and Unblock the Notifications








