எல்லோருக்கும் இலவசமாக கிடைக்கும் JioCoin.. பெறுவது எப்படி? இதன் மதிப்பு எவ்வளவு? எங்கே பயன்படுத்தலாம்?
ஜியோகாயின் (JioCoin) என்றதுமே இதுவொரு கிரிப்டோகரன்சி என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இது பிளாக்செயின் அடிப்படையிலான காயின் ஆகும். ஜியோ ஆப்ஸ் மற்றும் ஜியோ சேவைகளில் உள்ள பயனர்களுக்கு வெகுமதி அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஜியோ காயினை நீங்கள் சம்பாதித்தால், ஜியோ அடிப்படையிலான பரிவர்த்தனைகளின் போது சில தள்ளுபடிகளை பெறுவதற்கு இதை ரிடீம் செய்துக்கொள்ள முடியும்.
கேட்பதற்கே சுவாரசியமாக உள்ளதா? இது உங்கள் ஆர்வத்தை தூண்டுகிறதா? ஆம் என்றால்.. ஜியோ காயின் என்றால் என்ன? இலவசமாக ஜியோ காயினை சம்பாதித்து, அதை பயன்படுத்துவது எப்படி? ஜியோ காயினின் நன்மைகள் என்னென்ன? ஜியோகாயின் வைத்திருப்பது சட்டப்பூர்வமானதா? இல்லையா? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இதோ:

ஜியோகாயின் என்றால் என்ன? ஜியோகாயின் என்பது பிளாக்செயின் தொழில்நுட்ப நிறுவனமான பாலிகான் லேப்ஸுடன் இணைந்து ரிலையன்ஸ் வெளியிட்ட பிளாக்செயின் அடிப்படையிலான டிஜிட்டல் காயின் (Digital Coin) ஆகும். பிளாக்செயினில் கட்டமைக்கப்பட்டிருந்தாலும், ஜியோ காயின் என்பது பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சி அல்ல, மேலும் கிரிப்டோ எக்ஸ்சேன்ஞ்களில் இருந்தும் வாங்க முடியாது. மாறாக, பயனர்கள் குறிப்பிட்ட பணிகளை செய்யும்போது, ஜியோ ஆப்ஸ் மற்றும் சேவைகளில் இருந்து இலவசமாக பெறலாம்.
இலவசமாக ஜியோகாயின்களை சம்பாதித்து, அதை பயன்படுத்துவது எப்படி? மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஜியோ ஆப்ஸ் மற்றும் சேவைகளில் குறிப்பிட்ட பணிகளை செய்வதன் மூலம் ஜியோகாயின்களை பெறலாம். தற்போது, ஜியோ பிளாட்ஃபார்ம்களின் பிரவுஸர் ஆப் ஆன ஜியோஸ்பியரை (JioSphere) பயன்படுத்தி ஜியோகாயின்களை பெற முடியும். எப்படி என்கிற வழிமுறைகள் இதோ:
- உங்கள் ஆண்ட்ராய்டு போன், ஐபோன், விண்டோஸ் லேப்டாப், மேக்புக் அல்லது ஆண்ட்ராய்டு டிவியில் ஜியோஸ்பியர் ஆப்பை (அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது பிளே ஸ்டோர் வழியாக) பதிவிறக்கவும்
- நீங்கள் ஆப்பை பதிவிறக்கியதும், செக்மார்க் பாக்ஸ்-ஐ தேர்ந்தெடுத்து, "நான் ப்ரவுஸ் செய்ய தயாராக இருக்கிறேன்" (I'm ready to browse) என்பதை கிளிக் செய்யவும்
- ஆப்பின் உள்ளே வந்ததும், மேல் இடது மூலையில் உள்ள "ப்ரொபைல்" ஐகானை தேர்ந்தெடுக்கவும்
- இப்போது ரிவார்டுகளை அன்லாக் செய்ய தயாரா? (Ready to unlock rewards?) என்கிற பேனர்-ஐ தேர்ந்தெடுக்கவும்
- அடுத்த ஸ்க்ரீனில் "சம்பாதிப்பதற்கு லாக்-இன் செய்யவும்" (Sign in to Earn) என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்
- இப்போது உங்கள் ஜியோ மொபைல் எண்ணை உள்ளிட்டு "ஒடிபி-ஐ உருவாக்கு" (Generate OTP) என்பதை கிளிக் செய்யவும்
- எஸ்எம்எஸ் வழியாக ஒடிபி வந்ததும், அதை உள்ளிட்டு "சரிபார்க்கவும்" (Verify) என்பதை தேர்ந்தெடுக்கவும்
- இதன் மூலம் உங்கள் ஜியோகாயின் வேலட் (JioCoin Wallet) உருவாக்கப்படும். ஜியோகாயின்களை பெற ஜியோஸ்பியர் ப்ரவுஸரில் (JioSphere Browser) உள்ள வெப்பேஜ்களை ப்ரவுஸ் செய்யவும்.
ரிலையன்ஸ் ஜியோகாயினின் நன்மைகள் என்ன? ஜியோகாயின்களை வைத்து "பரிவர்த்தனைகள்" செய்யும் போது "சேமிக்கலாம்" என்று கூறுகிறது. அதாவது இவைகளை தள்ளுபடியாக ரிடீம் செய்யலாம் என்று ஜியோ கூறுகிறது. இந்த தள்ளுபடி மொபைல் நம்பரை ரீசார்ஜ் செய்யும் போது அல்லது ஜியோசினிமாக்கான சந்தாவில் அணுக கிடைக்கலாம்
பிளாக்செயின் அடிப்படையிலான ஜியோகாயின்கள் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவிலான வெற்றியை கண்டால், பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா போன்ற பிற நிறுவனங்களும் இதேபோன்ற முறையை கொண்டு பயனர்களுக்கு காயின்களை வெகுமதியாக வழங்கலாம். ஜியோகாயின்களை போலவே இவைகளையும் குறைக்கப்பட்ட விலையில் சேவைகளை வாங்க பயன்படுத்தலாம்.
ஜியோகாயின்களை வைத்திருப்பது சட்டப்பூர்வமானதா? அல்லது சட்டத்திற்கு எதிரானதா? ஜியோகாயின்கள் - பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது மற்றும் இரண்டு பெரிய நிறுவனங்களான ஜியோ பிளாட்ஃபார்ம்கள் மற்றும் பாலிகான் லேப்ஸ் இதற்கு பின்னால் உள்ளன. ஆக ஜியோகாயின்களை சேமிப்பதும் பயன்படுத்துவதும் சட்டப்பூர்வமானது தான்!


Click it and Unblock the Notifications








